என்னைப்பற்றி..

காட்டுக்கோட்டை..காட்டுக்கோட்டை..
பெயரைப்போல காடில்லாவிட்டாலும்
அந்த ஊரில் காட்டுக்கொட்டாயில்தான் எங்கள் வீடு.
அளவான குடும்பம்
ஆறுமுகம், சந்திரமதியின் மூத்த புதல்வன் நான்
இயற்பெயர் பாலாஜி புனைப்பெயரில் "படைப்பாளி"
தமையன் ஒருவன்
பள்ளிப்படிப்பு சொந்த ஊரில்
பட்டப்படிப்பு சென்னைமாப்பட்டிணத்தில்
ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவன்
முகவரி சொன்னால்
முதலில் ஓவியன்.
அப்பப்போ.. கவிதை,கதை எனும் பெயரில்
சிறு சிறு கிறுக்கல்கள்.. சிற்சில சிந்தனைகள்..
நான் படைப்பென நினைப்பதை
உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்..
பாரீர்!!நான் செம்மையுற உமது கருத்துகள் தாரீர்!!

(அன்புத்தொல்லைக்கு  : +919840803022)15 comments:

 1. வணக்கம் படைப்பாளி சார்,நான் தமிழ்ச்செல்வன், மதுரை, தினசரி நாளிதழ் ஓன்றில் துணையாசிரியர். உங்கள் பதிவுகள் வாசிக்கிறேன், மிக அருமை . எளிமையான அழகுடன் வலைப்பூ உள்ளது. குறிப்பாக தொடர்புடைய பதிவுகள் எப்படி கொண்டுவந்தீர்கள் என்ற தகவலை சொல்ல முடியுமா?

  ReplyDelete
 2. வணக்கம் நண்பரே..மிக்க மகிழ்ச்சி..தொடர்புடைய பதிவுகள் என்று தாங்கள் குறிப்பிடுவது "சினிமா" சம்பந்தப்பட்ட பதிவுகளையா?என்னால் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதை சரியாக புரிந்து கொள்ள இயலவில்லை..எதுவென்று சொன்னால் அதுப்பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.நன்றி ..மீண்டும் வருக

  ReplyDelete
 3. காலை வணக்கம் படைப்பாளி .உங்கள் எழுத்து,கருத்து ,அனைத்தும் அருமை .என்னை பற்றி உங்களின் மறுமொழியில் கொடுத்துளேன் .பங்கில் பணியாற்றும்போது கல்யாணம் பண்ணியும் பிரமச்சரியர் என வாழ்தேன் .தனிமை விரட்ட ,புத்தகம் படிப்பேன் .சினிமா பார்ப்பேன் .ஒய்வுக்கிபின் ,பிள்ளைகளின் கடமைக்கு துணை நின்று ப்ளாக் படிக்க ஆரம்பித்தேன் .உங்கள் வலைப்பக்கம் வந்தேன். எனது நினைவகளையும் உங்களோடு உங்கள் அனுமதியோடு பகிரிந்து கொள்கிறேன்.நன்றி வணக்கம்.
  அன்புடன் கருப்பசாமி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அய்யா ..வாருங்கள்..பாருங்கள்..கருத்து கூறுங்கள்..நட்பை தொடர்வோம்

   Delete
 4. Dear friend this is the first time of typing in Tamizh.Therfore there is some errors.Kindly bear the inconvenient .I will try to rectify my errors hereafter.I try to learn from you.
  with kind regards .
  DK (D.Karuppasamy.)

  ReplyDelete
 5. எழுத்து, ஓவியம், அனிமேஷன் என எல்லாமே உங்கள் தளத்தில் அருமை. பன்முகப் படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே..மீண்டும் வருக..

   Delete
 6. Brother ,ungalutaiya pathivukalai thotarnthu padithu varukiren arumai.
  jeevansubbu.blogspot.com

  ReplyDelete
 7. மிக்க நன்றி சகோதரா...மீண்டும் வாங்க..படிங்க..கருத்து சொல்லுங்க..

  ReplyDelete
 8. வணக்கம்
  பாலாஜி(அண்ணா)

  இன்று வலைச்சரம் வலைப்பூவில்உங்கள் வலைப்பூஅறிமுகமானது வாழ்த்துக்கள் உங்களின் வலைப்பக்கம் வருவது முதல் தடவை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி தம்பி,
   வலைச்சரத்தில் எனது வலைப்பக்கம் முதல் முறையல்ல, நான்காம் முறையாக இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது மகிழ்ச்சியளிக்கிறது

   Delete
 9. அன்புடையீர்,

  தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு
  கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.

  இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில்,
  பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான
  ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான
  Desktop,ebook readers like kindle, nook, mobiles, tablets with android,

  iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள்
  support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள்
  அமையும்.

  இதற்காக நாங்கள் [ http://www.padaipali.net/ ] உங்களது
  வலைதளத்திலிருந்து பதிவுகளை

  பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள்
  உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.

  எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை
  மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.

  இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின்
  பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை
  "Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும்
  உறுதியையும் அளிக்கிறோம்.

  http://creativecommons.org/licenses/

  கீழ் காணும் பதிவில் உள்ளது போல ஒரு பதிவையும், widget or footer ஐயும்
  சேர்த்து விட்டு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

  http://blog.ravidreams.net/cc-by-sa-3-0/


  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.


  e-mail : freetamilebooksteam@gmail.com
  எங்களைப் பற்றி : http://freetamilebooks.com/about-the-project/

  Google Group : https://groups.google.com/forum/#!forum/freetamilebooks

  FB : https://www.facebook.com/FreeTamilEbooks

  G +: https://plus.google.com/communities/108817760492177970948

  நன்றி.

  ஸ்ரீனி

  ReplyDelete