Thursday, March 6, 2014

கமலின் கற்பனையைக் கண்டு வியக்கேன் !


 இரண்டு மூன்று நாளாக இணையத்திலும் சமூக வலைத்தளத்திலும் ஓடும் ஒரு பிரச்சினையைப் பார்க்கிறேன்..
திருட்டு தவறு என்று ஒருத்தரப்பினரும், இல்லை திருட்டை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும், அப்படிப் பார்த்தால் அது திருட்டே இல்லை என ஒருத் தரப்பினரும் தத்தம் குரலை உயர்த்திக் கத்திக் கொண்டிருக்கின்றனர்..

சாதாரணமாக சொன்னால் திருட்டுக்கு எதிர்க்கூட்டம் ஒன்று, ஆதரவுக்கூட்டம் மற்றொன்று.. ஆனால் மையமான செய்தியோ திருட்டைப் பற்றிதான்..

ஆம்.. அதிலும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் விஷயம் அடுத்தவன் பொருளை திருடியதுப் பற்றியல்ல, அடுத்தவன் கற்பனையை, அடுத்தவன் கலையை திருடியதுப் பற்றி..பொருள் சம்பாதிக்கக் கூடியது, கற்பனை அப்படிப்பட்டதல்ல..

திருட்டிலேயே மிகப்பெரிய திருட்டு என்றால் என்னைப்பொறுத்தவரை அது கற்பனைத் திருட்டு தான்..அடுத்தவன் யோசித்து ரசித்து, அனுபவித்து, போராடி  சேகரித்த அனுபவத்தை ரசனையை கற்பனையை சர்வ சாதரணமாக திருடி தம் பெயருக்குப்பின் பெருமை சேர்த்துக் கொள்வது..

அப்படியான  விஷயங்கள் கலைத் துறையில் இன்று சர்வசாதாரணமாகி விட்டது. எவனை நம்பியும் எதையும் சொல்ல செய்ய இயலாத நிலைக்கு கலைஞனை அது தள்ளி விடுகிறது.

அப்படிப்பட்ட ஈ அடிச்சான் காப்பி விசயத்தை தனக்குப் பிடித்த நடிகனோ, இயக்குநானோ, ஓவியனோ, எழுத்தாளனோ  செய்யும் போது அதை கண்மூடித்தனமாக ஆதரிக்கவும், அவர்களுக்காக வக்காலத்து வாங்கவும் ஒரு கூட்டம் கிளம்பி விடுகிறது..

இதனால் திருட்டு பயல்கள்  அதை தனக்குப் பப்ளிசிட்டியாகவும், சிலர் நம் திருட்டை விமர்சித்தாலும் பலர் நம்மை ஆதரிக்கிறார்கள் என்கிற மனநிலையில் மீண்டும் மீண்டும் திருடவும்  ஆரம்பிக்கிறார்கள்..


அப்படித்தான் கமல் என்கிற உலகநாயகன், சகலகலாவல்லவன் தன் கலைத்திருட்டை ஒரு வெளிநாட்டு  புகைப்பட கலைஞனிடம் இருந்து உத்தமவில்லன் போஸ்டருக்காக எடுத்திருக்கிறார்.. அதை ஆதரித்து அவரைப் புகழ்பாடி போற்றிக்கொண்டிருக்கின்றனர் பலர்.. இதையே விஜய் ,சூர்யா, அஜித்  படத்திலோ செய்திருந்தால் அதைப் பேசிப் பேசியே நாரடித்திருப்போம்.. கமல்தான் கலைஞானி ஆயிற்றே அவர் எந்த கோமாளித்தனம் செய்தாலும் அதை கலையாக மட்டும் பார்ப்போமே..வாவ்......கமல் என்னமா யோசிச்சுருக்கார்.....???????????? இப்படித்தானே எல்லோரும் சொல்லனும்னு எதிர்ப்பாக்குறீங்க.. நானும் கமலின் கற்பனையைக் கண்டு வியக்கேன் :)Widget byLabStrike


8 comments:

 1. ஞானி என்றால் இப்படித்தானோ...? என்னமோ போங்க...!

  ReplyDelete
 2. இவரு
  கலைஞானி அல்ல

  "கலைசாணி"

  ReplyDelete
 3. எந்த பிரயோசனமும் இல்லாத நம்ம பதிவுகளை யாரும் காப்பி அடித்தால் நம் மணம் வேதனைப்படுகின்றது......இவர்கள் காப்பியோ டீயோ குடிக்கட்டும் பிறகு ஏன் பெருமை பேசுகிறார்கள்....?

  ReplyDelete
 4. கேட்டால் எனக்கு தெரியாமல் இந்த உல்டா நடந்து உள்ளது என்பாரோ ?
  த ம 2

  ReplyDelete
 5. தெய்யம் என்பது கதகளி போன்ற ஒரு கலை, கமல் அல்லாது, யார் வேடமிட்டாலும் இது போல தான் இருக்கும். ஓரு முறை தெய்யம் பற்றி கூகிளிடுங்கள், உங்களுக்கு உண்மை புரியும்.

  ReplyDelete
  Replies
  1. கூகுளில் தேடிவிட்டுதான் இந்த பதிவை எழுதி இருக்கிறேன் நண்பரே... தெய்யம் கலையில் பல்வேறு ஓவிய அமைப்புகள் (டிசைன்) வருகின்றன..ஆனால் கமல் குறிப்பிட்டு அந்த புகைப்படத்தில் உள்ள அமைப்பை மட்டுமே காப்பி அடித்திருக்கிறார்..அதிலும் அதே அமைப்பில் தன்னுடைய புகைப்படத்தையும் எடுத்திருக்கிறார்.. வேறு கோணத்தில் எடுத்திருக்கலாம், வேறு மாதிரி வரைந்திருக்கலாமே..அப்போ இந்த கேள்வி இல்லையே..

   Delete
 6. பதிலளித்தமைக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல் இந்த கோணத்தில் அந்த ப்ரென்ச்சு புகைப்படக்காரர்கள் மட்டும் எடுக்கவில்லை. குறைந்தது ஒரு பத்து படங்களாவது அதே கோணத்தில் இணையதில் கிடைக்கிறது. மீடியா எதற்காக ப்ரென்ச்சு புகைப்படக்காரரை இதற்கு இழுக்க வேண்டும் ? எல்லோரும் நம்ப வேண்டும் என்பதற்காக. நேரமிருந்தால் இது குறித்து வந்த ஒரு இணைய செய்தியை படிக்கவும்
  http://www.newtamilcinema.com/2014/03/4375/

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேன் அதே கோணத்தில் அதே ஓவிய அமைப்பில் வேறு புகைப்படங்கள் தென்படவில்லை..இந்த ஒரு புகைப்படம் மட்டுமே அதே கோணம், நிறம், ஓவிய அமைப்பு என எல்லாத்திலும் ஒத்துப்போவதாய் இருக்கிறது.. கற்பனைத் திருட்டுக்கு நாம் என்றும் துணைப் போகக்கூடாது நண்பரே.. அதுதான் கமலை விமர்சிக்க வேண்டி வருகிறது..

   Delete