Wednesday, March 5, 2014

ஆஸ்கர் விருதுகள் என் முகநூல் குறிப்புகள்..


இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" என்று அவர் சொல்வதாகத் தோன்றுகிறது அல்லவா..ஆமாம் dallas buyers club காக Matthew McConaughey தன் உடல் எடையை 35 கிலோவாக குறைத்து இப்படித்தான் hiv நோயாளியாகவே வாழ்ந்திருப்பார்..அதிலும் நோய் வந்து துவண்டவனாக இல்லாமல் வெகுண்டு வாழ்வை எதிர்கொண்டு போராடுபவனாக நடித்திருப்பார்..

படத்தில் அவர் செய்த கேரக்டரைப் போலவே போராடி ஆஸ்கர் விருதில் சிறந்த நடிகர் பட்டதை வென்றிருக்கிறார்..வாழ்த்துகள்..


-----------------------------------------------------------------------------------------------12 Years a Slave படத்தில் நடித்த Lupita Nyongo சிறந்த துணை நடிகையாக ஆஸ்கர் விருது பெற்றார்.. அவரின் இயல்பான நடிப்பு காண்போர் கண்களை கலங்க செய்யும்.. அதிலும் அவர் சவுக்கடி வாங்கும் ஒரு காட்சியில் அவர் மேல் படும் காயங்களில் நம் மனதை ரணமாக்கி இருப்பார்... இன்னும் வலிக்கிறது எனக்கு..
அப்படி ஓர் நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதற்காக இன்று அவர் மகிழ்ந்து கொண்டிருப்பார்..


-----------------------------------------------------------------------------------------------ஆஸ்கர் விருது விழாவில் தனது உருக்கமான உரையின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் dallas buyers club இல் நடித்த Jared Leto..சிறந்த துணை நடிகர் விருது பெற்ற அவர் அந்த படத்தில் hiv நோய் வந்த திருநங்கையாக நடித்திருப்பார்.. அவரின் நடிப்பும் அனைவரையும் உருக வைக்கும் அவர் உரையைப் போலவே ..வாழ்த்துக்கள்..

-----------------------------------------------------------------------------------------------இந்த ஆண்டு "12 Years a Slave" ஆஸ்கர் விருதில் சிறந்தப்படம்..கறுப்பின அடிமைத்தனத்தை மிக இயல்பாக சொன்னப்படம்..
கருப்பினத்தை அடிமைப் படுத்திய அவனே மனம் திருந்தி இன்று அவர்களை கொண்டாடவும் செய்கிறான்..அதான்யா வெள்ளைக்காரன் 


-----------------------------------------------------------------------------------------------


The Great Beauty (La Grande Bellezza) - சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் வெற்றிப்படம்..பெயரிலேயே ஒரு கவர்ச்சியை கொண்டுள்ள படம்..படமும் அப்படித்தான்..
ரோமில் வாழும் ஒரு வயதான நாவல் எழுத்தாளன் நிகழ்காலத்திநூடே பழைய வாழ்க்கையை நினைவுக்கூர்ந்து பார்க்கும் வாழ்வியல் கதை..நடிப்பில் செம ஸ்டைல்.. மேக்கிங் செம ..அழகான காட்சியமைப்புகள்..
(ரோமின்) நிர்வாணம் படமெங்கும் விரவிக்கிடக்கிறது..கலையில் உள்ள நிர்வாணத்தை உள்வாங்க இயலாதவர்களால் இப்படத்தையும் உள்வாங்க முடியாது.. நான் இத்தாலிய கலைஞர்களின் அக்கால வாழ்வியலை கல்லூரியில் படித்திருக்கிறேன்..அது கண்முன் வந்து நிற்கிறது..


-----------------------------------------------------------------------------------------------

ஆஸ்கர் விருதில் பல்வேறு படங்கள் வெற்றிப்பெற்ற நிலையில் nebraska படத்திற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை என்பது எனக்கு சற்று ஏமாற்றத்தை தருகிறது.. கருப்பு வெள்ளையில் மிகவும் இயல்பான கதை ஓட்டத்தில், நெருடல் இல்லாத இசை கோர்ப்பில், மிக அழகான ரசனையான ஒளிப்பதிவில் என்னை மிகவும் கவர்ந்த படம்..
சிறந்த படத்துக்கான விருதைப் பெறுமென்று எதிர்பார்த்திருந்தேன்..
எந்த விருதையும் பெறவில்லை என்கிற போதும் என் நெஞ்சில் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கிறது அந்தப் படம்..


-----------------------------------------------------------------------------------------------------------------------------
Oscar Award Winners: 

Best Picture: 12 Years a Slave
Best Foreign Language Film: The Great Beauty
Best Director: Alfonso Cuarón (Gravity)
Best Actor in a Leading Role : Matthew McConaughey (Dallas Buyers Club)
Best Actress in a Leading Role : Cate Blanchett (Blue Jasmine)
Best Actor in A Supporting Role : Jared Leto (Dallas Buyers Club)
Best Actress in A Supporting Role : Lupita Nyong'o (12 Years a Slave)
Best Animated Short Film: Frozen
Best Cinematography: Emmanuel Lubezki (Gravity)
Best Costume Design: Catherine Martin (The Great Gatsby)
Best Documentary Feature: 20 Feet from Stardom
Best Documentary Short Subject: "The Lady in Number 6: Music Saved My Life"
Best Film Editing: Alfonso Cuarón and Mark Sanger (Gravity)
Best Makeup and Hairstyling: Adruitha Lee and Robin Mathews (Dallas Buyers Club)
Best Music Original Score : Steven Price (Gravity)
Best Music Original Song: "Let It Go" from FROZEN by Kristen Anderson-Lopez and Robert Lopez
Best Production Design: Catherine Martin (Production Design); Beverley Dunn (Set Decoration) - The Great Gatsby
Best Animated Short Film: Mr. Hublot
Best Short Film Live Action: Helium
Best Sound Editing: Glenn Freemantle (Gravity)
Best Sound Mixing: Skip Lievsay, Niv Adiri, Christopher Benstead and Chris Munro (Gravity)
Best Visual Effects: Tim Webber, Chris Lawrence, David Shirk and Neil Corbould (Gravity)
Best Writing Adapted Screenplay: John Ridley (12 Years a Slave)
Best Writing Original Screenplay: Spike Jonze (Her)

Gravity - 7 Awards
12 Years a Slave - 3 Awards
Dallas Buyers Club - 3 Awards
The Great Gatsby - 2 Awards
Frozen - 2 Awards


Widget byLabStrike


2 comments:

 1. Jared Leto.. அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... தொகுப்பிற்கு நன்றி...

  ReplyDelete
 2. இன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :

  4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

  லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html

  நன்றி...

  ReplyDelete