Friday, August 16, 2013

ஆதலால் காதல் செய்வீர் - சுசீந்திரனின் கோட்டைசமீப நாட்களாக நான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை..அதற்கு காரணம் மொக்கைப் படங்கள் சில பார்த்து விட்டு வந்தால் அதன் குறைகளை சொல்லாமல்  இருக்கவும்  இயல்வதில்லை..பல கோடி பணத்தை செலவு செய்து எடுக்கும் திரைப்படங்களை நாம் எளிதாய் விமர்சித்து விட்டு போய்விடுகிறோம், அதனால் நஷ்டப்படுவோர் ஏனையோர், நாமில்லை... 

ஆதலால் ஒரு கொள்கை உறுதி கொண்டு விட்டேன் நல்லப்படம், பாராட்டப் பட வேண்டிய படம் என்றால் மட்டும் இனி (விமர்சனம் அல்ல) அதைப் பற்றி நான்கு வரி எழுதுவது, பாராட்டுவது, மொக்கை வாங்கினால் ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும்  பார்ப்பது என்று..

அந்த வகையில் நேற்று  "ஆதலால் காதல் செய்யாதீர்.. மன்னிக்க.. செய்வீர் " படம் பார்த்துவிட்டு வந்தேன்..அப்படம் என்னுள் உண்டாக்கிய தாக்கம் கொஞ்சநேரம் என் நெஞ்சுக்குள் சுழன்றபடியே நின்றது.

சமூகத்தில் சில காதல் பிரச்சினைகள் நடந்தேறி உள்ள காலக்கட்டத்தில் வந்துள்ள படம். ஆதாலால் அரசியலுக்காக, ஆதாயம் தேடுவதற்காக  சிலர் இந்தக்காலத்து காதலே இப்படித்தான், இதற்காகத்தான் வேண்டாமென்று சொல்கிறோம் என்று இந்தப் படத்தை வைத்து அரசியல் செய்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை..

 பருவ வயதில் வரும் காதல்,அந்த வயதுக்கே உண்டான வேகத்தில் காமமாகி, பின் கருவாகி குடும்பப் பின்னணியில் சாதியாலும், சமூகத்தாலும், அரசியலாலும், பொருளாதார சூழ்நிலைகளாலும்   சதிராடப் பட்டு எப்படி சின்னாப் பின்னமாகிப் போகிறது என்பதே கதை..

காதல் தவறில்லை, காதலர்கள் ஒன்று கூடத்தான் நினைக்கிறார்கள், ஆனால்  காதலின் பின்னணியில் சமூகம் எப்படியெல்லாம் காதலர்களை பந்தாடுகிறது என்பதை எதார்த்தத்துடன் விளக்கி இருக்கிறது படம். ஆகவே காதலை வைத்து அரசியல் செய்யும் பகடைகள் படத்தை மேற்கோள் காட்டி சொரிந்து கொள்ளத் தேவையில்லை..
நடிப்பில் அனைவரும் நன்றாக செய்திருக்கிறார்கள், நாயகி அனைவரை விடவும் ஒரு படி மேலே போய் உயிர் வாழ்ந்திருக்கிறார்..கேமரா கோணங்கள் ஆஹா அழகு, காட்சியமைப்புகள் கண்களில் ஒட்டிக்கொள்ளும் ரகம்..பின்னணி இசை மென்மையான வருடல்..கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பத்தை தந்து சமூகத்தை சாடுகிறது.. விளக்கி எழுதி உங்கள் எதிர்ப்பார்ப்பை வீணடிக்க  விருப்பமில்லை.திரையில் பாருங்கள்.., படம் கண்டிப்பாக அனைவரும் அறியவேண்டிய பாடம்..
ராஜபாட்டையில் கோட்டை விட்ட சுசீந்திரன் "ஆதலால் காதல் செய்வீர்" மூலம் அருமையான கோட்டை கட்டி இருக்கிறார்..
"ஆதலால் அனைவரும் படம் பார்ப்பீர்"..


Widget byLabStrike


2 comments:

  1. பல கோடி பணத்தை செலவு செய்து எடுக்கும் திரைப்படங்களை நாம் எளிதாய் விமர்சித்து விட்டு போய்விடுகிறோம், அதனால் நஷ்டப்படுவோர் ஏனையோர், நாமில்லை...
    உண்மைதான்... விமர்சிக்க எல்லாருக்கும் உரிமையிருந்தாலும் பிறரது வாழ்வில் ஏற்படும் இழப்புகளையும் கொஞ்சமாவது சிந்திக்கத்தான் வேண்டும்...
    பதிவுலகமும், சமூக வலைத்தளங்களும்தான் ஒரு சினிமாவின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறிவரும் இந்த காலக்கட்டத்தில் விமர்சனம் எழுதும் அனைவரும் இந்தக்கருத்தை மனதில் நிறுத்தினால் நல்லதுதான்...

    ReplyDelete