Monday, July 15, 2013

தந்தி பற்றி கொஞ்சம் சிந்தி !அப்போ நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்..பாடத்தில், பரிச்சையில் மறக்காமல் ஒரு கேள்வி உண்டு.

தந்தி அடிப்பது  எப்படி? 

சுக செய்தி,சோக செய்தி, பிறந்தநாள் வாழ்த்து, திருமண வாழ்த்து என விதவிதமான செய்திகளை எவ்வாறு எழுத வேண்டும் என்று பாடம் நடத்தி இருக்கிறார் என் ஆசிரியர்.

வார்த்தை சுருக்கமாக இருக்க வேண்டும், நாம் சொல்லும் செய்தி பெறுபவருக்கு எந்த குழப்பமும் இல்லாமல் இருக்க வேண்டும்..சொற்கள் அதிகமாக அதிகமாக செய்திக்கான செலவு அதிகமாகும்..
ஆசிரியர் சொன்னது இன்னும் என் நினைவுகளில் அகலாமல் அப்படியே இருக்கிறது.நானும் அந்த கேள்விக்கான பதில்களை படித்து ஆங்கிலம் ஆதலால் ஈ அடிச்சான் காப்பியாக எழுதியதும் உண்டு..

அந்த காலக் கட்டத்தில் எல்லோருக்கும் போலவே என் வீட்டிற்க்கும் தந்தி வந்திருக்கிறது.அந்த தந்தி சுமந்து வந்த சேதி அனைத்தும் எதாவது ஒரு துக்கத்தை தாங்கியதாகவே , அவசர செய்திகளுக்கு அதுவே அத்தியாவாசியமாய் இருந்திருக்கிறது.

அதனாலேயே அப்போலாம் தந்தி வந்திருக்கிறது என்றவுடன் அது தாங்கி வந்த  செய்தி என்னவென்று அறியுமுன்னே பலரும் அலறி அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவதுண்டு.

தொலைபேசி, அலைபேசி, குறுஞ்செய்தி என்று எந்த தொலைதொடர்பும் இல்லாத நாட்கள்  அன்று. கடிதம் வாயிலாகவே உறவு பாலம் பரிமாறிய பண்பட்ட, பாசம் பிணைக்கப்பட்டு ரத்தத்தில் ஓடிய காலமது.

ஆனால் இன்று அதற்கான தேவை இல்லை, அலைபேசி, வலைபேசி, குறுஞ்செய்தி, இணையதளம் என்று உலகம் கூட்டுக்குள் குறுகி வீட்டுக்குள் வந்துவிட்டது.

இந்த நிலையில்தான் 160 ஆண்டுகள் வாகை சூடிய தந்தி சேவையை நிறுத்தும் நிலைக்கு BSNL வந்துவிட்டது. அறிவித்தபடி நேற்றோடு தந்தி சேவைக்கான நாட்கள் முடிந்து விட்டது. இன்றிலிருந்து தந்தி என்றால் என்ன என்று கேட்கப் போகும் புதுயுகம் வருங்கால சந்ததிக்கு ஆரம்பித்துவிட்டது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் காணாமல் போன எத்தனையோ வடிவங்களில் தந்தியும் இன்று இணைந்துவிட்டது.

இனி பழைய தலைமுறை அருங்காட்சியகத்தில் தன் இளைய தலைமுறைக்கு அடையாளம் காட்டும் போது அதன் நினைவுகளை பகிர்ந்தபடி ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என நெஞ்சில் பாட்டு பாடி அசைபோட்டுக் கொள்ளலாம், வேறு வழியில்லை..

--------------------------------------------------------------------------------------------------------------------

தந்தி சேவையின் வரலாறு
அமெரிக்காவின் சாமுவேல் மோர்ஸ் கடந்த 1837ம் ஆண்டு தந்தி முறையை கண்டறிந்தார். அதே கால கட்டத்தில் இங்கிலந்தின் குகி மற்றும் வீட்ஸ்டோன் ஆகியோரும் இதே முறையை உருவாக்கி, காப்புரிமை பெற்றனர். 1845ம் ஆண்டு இங்கிலந்தில் தந்தி சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 1850ம் ஆண்டில் கொல்கத்தாவுக்கும் அதன் புறநகர் பகுதியில் உள்ள டைமண்ட் துறைமுகத்திற்கும் இடையே பரீட்சார்த்த முறையில் தந்தி சேவை தொடங்கப்பட்டது.
பின்னர் 1853ல் கொல்கத்தா, ஆக்ரா, மும்பை, சென்னை, ஊட்டி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இடையே 6,400 கிலோ மீட்டர் தூரத்திற்கு தந்தி சேவைக்கான தொலைத்தொடர்புக் கம்பிகள் நிறுவப்பட்டன. அதற்கு அடுத்த ஆண்டே, தந்தி சேவைக்கான தனித்துறை இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1870ல், இங்கிலந்துடன், கம்பி வடங்கள் மூலமாக இந்தியாவின் தந்தி சேவை இணைக்கப்பட்டது. 1882ம் ஆண்டு தொலைபேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
1980களில் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் தந்திகள் அனுப்பப்பட்டன. பின்னர் 1991-92ம் ஆண்டுகளில் மட்டும் அதிகபட்சமாக ஆறரை கோடி தந்திகள் அனுப்பப்பட்டன. இந்த எண்ணிக்கை 1995-96ல் ஐந்து புள்ளி ஆறு கோடியாகவும், 2000 முதல் 2001ம் ஆண்டுகளில் மூன்றரை கோடியாகவும் சரிந்தது.
குறைந்த கட்டண தொலைபேசி சேவை மற்றும் இணையதள சேவை ஆகியவற்றின் அறிமுகம் காரணமாக முக்கியத்துவத்தை இழந்த தந்தி சேவை, காலத்தின் சுழற்சியில் இன்று முற்றிலுமாக மறைந்து போகும் நிலைக்கு வந்துள்ளது.
நன்றி : அலைகள் தளம்
--------------------------------------------------------------------------------------------------------------------Widget byLabStrike


7 comments:

 1. அந்த எதிர்ப்பார்ப்பு, மகிழ்ச்சி, பயம் உட்பட சம அளவில் இன்ப துன்பங்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி... ...ம்... வருத்தமாகத் தான் உள்ளது...

  ReplyDelete
 2. Replies
  1. கண்டிப்பாக உண்மைதான் நண்பரே

   Delete
 3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/tamil-poets-in-blogs.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அறியத் தந்தமைக்கு நன்றி நண்பரே

   Delete
 4. தந்தி பற்றிய விவரங்களுக்கு நன்றி... வலைச்சரத்தில் வந்தமைக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete