கமல் என்றாலே நல்ல நடிகர்,சினிமாவில் புது முயற்சிகளின்
பிரம்மா, சர்ச்சைகளின் நாயகன் என்பது எல்லோரும் அறிந்தது. கமல் இருக்கும்
இடத்தில் சர்ச்சை இருக்கும் என்று பத்திரிக்கைகள், ஊடகங்கள் சொன்னதலோ
என்னவோ அதையே தனக்கு சாதகமாக கமலும் பயன்படுத்த தொடங்கி விட்டார். எந்த
எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும்
வித்தை கற்றவரைப் போன்றும் தம்மை ஒரு சகலகலா வல்லவனாகவும், எதிரில்
இருப்பவனை முட்டாளாக பார்க்கும் மனநிலையையும் வளர்த்துக் கொண்டு வந்து
விட்டார்.
இது அவர் தொடங்கிய, முடித்த ஏனைய படங்களுக்கு பொருத்தம். கமல் தன் ஏனைய படங்களில் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக தன் மனத்தில் ஒளித்து வைத்திருக்கும் சாதி மத வன்மங்களை வெளிக்காட்டி இருக்கிறார். தன்னை முற்போக்காளனாக வெளியில் காட்டி பிற்போக்குத்தனத்தை விதைத்திருக்கிறார். கட்டியணைத்தல், முத்தம் கொடுத்தல் போன்ற காட்சிகளை மட்டும் நேரடியாக காட்டி அந்தரங்க நாயகனாக அலட்டிக் கொண்டிருக்கிறார்.
இது அவர் தொடங்கிய, முடித்த ஏனைய படங்களுக்கு பொருத்தம். கமல் தன் ஏனைய படங்களில் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக தன் மனத்தில் ஒளித்து வைத்திருக்கும் சாதி மத வன்மங்களை வெளிக்காட்டி இருக்கிறார். தன்னை முற்போக்காளனாக வெளியில் காட்டி பிற்போக்குத்தனத்தை விதைத்திருக்கிறார். கட்டியணைத்தல், முத்தம் கொடுத்தல் போன்ற காட்சிகளை மட்டும் நேரடியாக காட்டி அந்தரங்க நாயகனாக அலட்டிக் கொண்டிருக்கிறார்.
படத்தில் புதுமையும் பண்ணுவார், சாதிசண்டைகள் வரவைத்து புரட்சியும் பண்ணுவார்.. இதற்கு தேவர் மகன் முதல் விருமாண்டி வரை ஏனைய படங்கள் அடையாளம்.
சமூகத்தைப் பற்றிய அக்கறை அற்ற கமலுக்கு தன் பெயர் விளங்க
வேண்டும், தன் பாக்கெட் நிரம்ப வேண்டும் என்பதே ஆண்டாண்டுகாலமான
எதிர்ப்பார்ப்பு. ஆனால் வெளியில் காட்டிக்கொள்வதென்னவோ கலைக்காக உழைப்பவர், கலைக்காக வாழ்பவர் , கலைக்காக சாகவும் துணிபவர்.
அடுத்தவன் பணத்தில் குளிர்காய்ந்து கலை வளர்க்க கடமை பட்டவர் இவர். பல தயாரிப்பாளர்களை படுக்க வைத்து விட்டு தன பணம் போட்டு பண்ணிய படத்துக்கு பேராபத்து வந்து விட்டதே என்று இப்போ வானுக்கும் விண்ணுக்கும் குதிப்பவர்.
அதுதான் இப்போ விஸ்வரூபம் படம் கமலை தொற்றிக்கொண்ட பிரசினைகளின் விஸ்வரூபம் ஆகி இருக்கிறது. முதலில் DTH ஆல் தயாரிப்பாளர்கள் பிரச்சினை, அப்புறம் சினிமா விநியோகஸ்தர்கள், பின் திரையரங்க உரிமையாளர்கள், கேபிள் டிவி காரர்கள் என எல்லோரையும் தாக்கி இப்போ முஸ்லிம்கள் வரை ஏனையோரை புண்படுத்தி இருக்கிறது. தன லாபத்துக்காகவும், புது முயற்சி என்ற பெயரில் அடுத்தவரைப் பற்றி அக்கறை கொள்ளாத கமலை ஆட்டி வைத்திருக்கிறது. இது கமலுக்கு ஒரு படிப்பினை. யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள்.. கமலுக்கு இப்போ சறுக்கி இருக்கிறது.
கமல் படம் வந்தாலே பிரச்சினை சேர்ந்து வருகிறது என சில நண்பர்கள் சொல்கிறார்கள்.. கமல் படம் வந்தால் பிரச்சினை வருவதில்லை, எதாவது பிரச்சினையை வேண்டுமென்றே இழுத்துப்போட்டுக்கொண்டு அதன்மூலன் ஒரு சீப் பப்ளிசிடியை தேடுவதே கமலின் நீண்ட கால வரலாறு. இலைமறைகாயாக எதாவது சமுதாயத்தை, மதத்தை, மனிதனை , மொழியை, இனத்தை சாடுவது, வசனம் பேசுவது, காட்சி வைப்பது போன்ற கீழ்த்தர மனநிலையை கமல் மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படியானால் மட்டுமே உலகநாயகனாக எல்லோர் மனத்திலும் அவர் உயர்ந்து நிற்க இயலும் .
கமல் நல்ல நடிகன் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க
முடியாது, நல்ல மனநிலை உள்ளவராகவும் கமல் மாற வேண்டும் என்பதே எல்லோரது
(அவா)வும்..
This comment has been removed by the author.
ReplyDelete"தீவிரவாதிகள் முழுவதும் முஸ்லிம்களாக இருப்பார்கள். காபரே டான்ஸ் ஆடுபவர்களெல்லாம் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். இவ்வாறு தொடர்ச்சியாக படங்களில் காட்டுவதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட செயல் உள்ளதோ என்று சந்தேகப்படத்தான் உள்ளது. விஸ்வரூபத்தின்மீதான தடை நிச்சயம் சரியானதே"
ReplyDeleteஇந்தியாவில் மட்டும் தான் ரிலீஸ் இல்லை. உலகம் முழுக்க நாளைக்கு ரிலீஸ்.
ReplyDeleteதமிழனுக்கு திருட்டு dvd ல் விஸ்வரூபம் பார்க்க வேண்டும் என்ற தலைவிதி என்ன செய்வது.
நான் நாளைக்கு படம் பார்க்க போகின்றேன்.
வந்து கதை சொல்கின்றேன்
உலகம்னா எது??
Deleteதுபாய், அபுதாபி, சவுதி போன்ற மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள்ல நாளை படம் ரிலீஸ் ஆகுதா? இல்ல அவைகளும் இந்தியாலதான் இருக்கா??
எல்லாம் தேர்தலுக்காக?
ReplyDeleteஅன்புள்ள கமல் ஹாசனுக்கு.!
ReplyDeleteகேப்டன்களும், காமன் மேன்களும், ஜென்டில் மேன்களும்,இளைய தளபதிகளும்(..!) தமிழ் சினிமாவில் பதித்து வைத்து இருக்கிற, முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை உணர்வுகள் ஏற்கனவே அதிகம்..
இந்த நிலையில் உங்கள் பங்களிப்பை மீண்டும் ஒரு முறை செலுத்தி இருக்கிறீர்கள்...
உன்னைப் போல் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவர இருக்கிறது உங்கள் விஸ்வரூபம்.
சபாஷ்.?..!!
வாழ்க உங்கள் கலைச் சேவை.(.!)
நடுநிலையாளர்களே
************************
1)இது வெறும் கருத்து தானே.
இதை கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டியது தானே என சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் இது போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்மறை பிரச்சாரங்கள்,
வெறும் கருத்து சுதந்திரம் என்பதை தாண்டி,
முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனையும் சந்தேகப் பார்வை பார்க்கும் சூழ்நிலைக்கு
ஆளாக்கி வைக்கிறது என்கிற விபரீதத்தை நீங்கள் கவனிக்க தவறி விடுகிறீர்கள்.
பொதுமக்களே.
***************
1)அஃப்சல் குரு பற்றிய செய்திகளைப் பற்றி என்றால், முதல் பக்கத்தில் அதை வெளியிடும் தமிழ் மீடியாக்கள், அசிமானந்தா போன்றோரின் செய்தியை எல்லாம் இருட்டடிப்பு செய்கிறதே ஏன்.?
2)இந்த நாட்டில் முஸ்லிம் பெயர்களில் நடத்தப் படுகிற,நக்சலைட் , இனவாத,அல்லது காவிக் கும்பலால் நடத்தப்படுகிற எந்த வித தேச விரோத செயல்களையும் இந்திய முஸ்லிம் சமூகம் ஒரு போதும் அங்கீகரிப்பது இல்லை..
இதை இஸ்லாமும் ஆதரிப்பது இல்லை..
இதைப் புரிந்து கொள்வீ ர்களா.?
முஸ்லிம்களே
**********************
1)கண் முன்னே அநீதி இழைக்கப் படும்போது, பாதிக்கப்படுபவர் எவராக இருந்தாலும் அவருக்கு உதவ வேண்டும்..
அமைதியாய் இருந்து விடக் கூடாது என போதிக்கிறது இஸ்லாம்..
இஸ்லாத்திற்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்படும் இந்த சூழ்நிலையில்,
இந்த உண்மையை,
இதை இந்த நாடும், நாட்டு மக்களும், புரிந்து கொள்ளும் விதத்தில் முஸ்லிம்கள் எடுத்து உரைக்க வேண்டும்..
2)இன்றைய சூழ்நிலையில் அனாச்சாரங்களும், அலங்கோலங்களும் சினிமாவை ஆக்கிரமித்து இருப்பதால், சினிமா என்ற வலிமை வாய்ந்த ஊடகத்தையே,
இந்திய முஸ்லிம் சமூகம் புறக்கணித்து வருகிறது..
இது மாற வேண்டும்..
இதற்கு மாறாக குறைந்த பட்சம், காலத்தின் தேவைக்கு ஏற்ப,
தங்கள் அடையாளங்களையாவது பதிவு செய்கிற வகையில்,
குறும்படங்கள், ஆவணப்படங்கள், போன்றவற்றை தயாரிக்க முஸ்லிம் சமூகத்தை சார்ந்த வல்லுநர்கள் முன் வர வேண்டும்.
3)தங்கள் அமைதி, மற்றும் நிசப்தத்தை களைத்து கலைத்துறையில் முஸ்லிம்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செலுத்த முன் வர வேண்டும்..
4)இனி வரும் "துப்பாக்கிகளை " அநியாயம் செய்யவும், அப்பாவிகளுக்கு எதிராக விஷங்களை பரப்பவும்
பயன்படுத்த முடியாத வண்ணம்,
அதனைக் கட்டுப்படுத்த ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை
சமூக தலைவர்கள் எடுக்கட்டும்.
5)ஒற்றுமை எப்போதும் நல்ல பலனைத் தரும்.
சமீப காலங்கில் தமிழக முஸ்லிம் அமைப்புகள் சமூகத்தின் பொதுவான பிரச்சனைகளில் இணைந்து குரல் கொடுப்பது நல்ல ஒரு மாற்றம்.
சமூக நலனை முன்னிறுத்தி இணைந்துள்ள கரங்களின் இணைவு என்றென்றும் தொடரட்டும்.
நம்முடைய நோக்கம் இயக்கம் வளர்ப்பதல்ல.
இறைவனின் செய்தியை இந்த நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பதே நம் அடிப்படை நோக்கம்.
நாம் வாழும் இந்த நாட்டில் அனைவரும் விரும்புவது அமைதியையே.! நமக்கு ஆதரவு தெரிவிக்காத அனைவரும் நமக்கு எதிரானவர்கள் அல்ல.
இதை அமைப்பின் தலைவர்களும் அதன் ஊழியர்களும் நன்கு உணர்ந்து கொண்டு அதன் அடிப்படையில் தங்கள் விருப்பு, வெறுப்புகள்,செயல்பாடுகள், ஒத்துழைப்புகள் மற்றும் ஆதரவுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
தெரிந்தோ அல்லது அறியாமையின் காரணமாகவோ "விஸ்வரூபங்கள்" விதைக்க நினைக்கிற விஷ விதைகள் வெறும் புஸ்வானமாக போகட்டும்.
இறைவன் அருள் புரிவானாக..
- Abbas Al Azadi
hakkim all blogillum oray vanthi adukkaday
ReplyDeletei support kamal
Deletehakkim nee hawala panathil muslim nallavargal andru paddam addu. magazine naddathu
ReplyDeleteதமிழ் மணத்தில் இன்றைய ஸ்பெஷல் தோசை!
ReplyDeleteசிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்
please go to visit http://tamilnaththam.blogspot.com/
சொரணைகெட்ட ஹிந்துக்கள் மாதிரி இவனுங்களும் இருப்பானுங்கன்னு நெனைச்சுட்டார் கமல்..நீங்க சொன்னமாதிரி இவருக்கு இது வேணும்
ReplyDeleteNanbarey soranai ketta hindukkal nu sollirukinga, hindukkal aayudham edukka aarambicha,india ila ulagamey thaangathu.endha comments um mariyadhaiya kodutha nalla irukkum.
Delete