அதிசயங்கள் எப்போதேனும்தான்
பிறக்கின்றன
அதனாலையே அவை
அதிசயமாகின்றன
அதிசயங்களை காணும் வாய்ப்பு
எப்போதேனும்தான் கிடைக்கிறது
அதனாலையே அது
அதிசயிக்க வைக்கிறது
தாஜ்மஹால் முதல்
பைசா கோபுரம் வரை
பார்த்து மகிழ
பல அதிசயங்கள் இருக்கிறது !
இப்போதோர் அதிசயம் கண்டேன்
என்ன ஆச்சர்யம்
நான் கண்ட ஆற்றில் மணலிருக்கிறது!
அந்த ஆற்றில் தண்ணீர் இருக்கிறதா என்று சொல்லு நண்பா???
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஎன்ன ஆச்சர்யம்....!
ReplyDelete