Friday, December 21, 2012

1000 மாவது பதிவு I உலகம் அழியும் I வன்புணர்வு I திரைப்பட விழா (மிக்ஸ்டு மசாலா)


உலகம் அழியுமா? அழியாதா? என உலகமே கூடி கூவிக்கொண்டிருந்த இன்றைய நாளில் எனது 1000 மாவது பதிவு விடிந்திருக்கிறது..உலகம் அழியவில்லை என்ற  விதத்தில் எடுத்துக்கொண்டாலும் ,மாயன் காலண்டர் இன்றோடு முடிந்துவிட்டது என எடுத்துக்கொண்டாலும்,எனது 1000 மாவது பதிவு என்கிற விதத்தில் கொண்டாலும் இன்று எனக்கு மறக்க முடியாத நாள்தான்..
பொதுவாக இது மாதிரி ஒரு சிறப்பான நாளில் என்னை ,என் பதிவை படித்து பாராட்டி,விமர்சனம்  செய்து என்னை செதுக்கி,சண்டையிட்டு நட்புக்கு ஆழம் சேர்க்கும் அனைவர்க்கும் நான் நன்றி சொல்வது வழக்கம்..அதுபோலவே இன்றும் சொல்லிக்கொள்கிறேன் என் மொக்கைகளை மதித்து படித்து செம மொக்கைவாங்கிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி..ஒவ்வொருவர் பெயராக குறிப்பிட்டு எழுதவேண்டுமென்று ஆசை ,நேரமின்மையால் எழுதமுடியவில்லைன்னு எப்போதும் எழுதுற மாதிரியே இன்னைக்கும் ஜகா வாங்கிக்கிறேன் மக்கா..


சரி விசயத்துக்கு வருவோம்..சமீப நாட்களில் நடந்த இனிப்பு,கசப்பு,காரமான மேட்டர்...
----------------------------------------------------------------------------------

இனிப்பு:
கடந்த 13 ஆம் தேதியிலிருந்து நேற்று 20 வரை நடந்து முடிந்த சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு வழக்கம் போல அலுவலகம் முடிந்து மாலை நேரம் மட்டுமே சென்றிருந்தேன்..முதல் நாள் விழா தொடக்கப்படமான ஆஸ்திரிய திரைப்படம் (AMOUR )அமௌர் என்னில் உண்டாக்கிய தாக்கம் இன்னும் அப்படியே நெஞ்சில் நிற்கிறது..அதற்கு பின் சில கில்மா படங்கள் நெஞ்சில்  நிற்கவில்லை என்றாலும் Holy  Motors, Baikonur, Tall Man போன்ற  சில படங்கள் நெஞ்சில் நிலைத்து விட்டன..ஒரு வாரகாலம் போனதே தெரியவில்ல..திரைப்பட விழா ஆரம்பித்தாலே மனதில் குழந்தைப்பருவத்து கோவில் திருவிழாவின் மகிழ்ச்சி நிழலாடும்..எப்போதும் போலவே அடுத்த வருட திருவிழாவை இப்போதே எதிர்ப்பார்க்க துவங்கி இருக்கிறேன்..இவ்வாரம் இதுதான் எனக்கு இனிப்பு செய்தி..
பொதுவான செய்தி சொல்ல வேண்டுமானால் உலகம் அழிவதாய் சொன்ன இந்நாளில் உலகம் இன்னும் அழியாமல் இருப்பதும்,என் பதிவை நீங்கள் படித்துக் கொண்டிருப்பதும்தான்..ஹா..ஹா..சாமி மாதிரிதான் மாயன் மேலையும் எனக்கு மதிப்பு கிடையாதுங்கோ:)


----------------------------------------------------------------------------------

காரம்:

இந்தியாவின் தலைநரகம் மன்னிக்க தலைநகரம் என நாமெல்லாம் பெருமைப்படுகிற டெல்லியில் ஓடுகிற பேருந்தில் கூட்டணி சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள் சில காடையர்கள்.இந்த சம்பவம் நடந்து முடிந்த பின்தான் ஒரு சர்வே படித்தேன் ..டெல்லியில் ஒவ்வொரு 40 நிமிடத்திற்கு ஒரு முறையும் ஒரு பெண் வன்புணர்வுக்கு ஆளாகிறாளாம்..அந்த அளவுக்கு மிருக வெறி  அங்கே ஊறிப்போய் நாறிக்கிடக்கிறது.. என்ன செய்வது என அரசு,காவல்  குழம்பிக் கொண்டிருக்கிறதாம்..என்ன கொடுமைப் பாருங்க..சுதந்திர நாடு என்கிறோம் யாருக்கென  புரியவில்லை,கள்வர்களுக்கும்,காடையர்களுக்குமா?
ஒரு சாதாரண சமூகப் பிரச்சினையை கட்டுக்குள் வைக்கத் தெரியாமல்,கையாளத் தெரியாமல் நாம் வருங்காலத்தில் வல்லரசு ஆகப்போகிறோமாம்..நல்ல காமெடில.. 

(அந்த சல்லிப் பயல்களுக்கு  இந்த தண்டனை சரியாய் இருக்கும்ல)

----------------------------------------------------------------------------------

கசப்பு:
நல்லவேளை இன்று உலகம் அழியவில்லை என பாமரத் தனமாக நாம் சந்தோசப் பட்டுக்கொண்டாலும் தர்மபுரி குடிசை எரிப்பு,கலப்புசாதி  காதல் மறுப்பு,ஆங்காங்கே மதவாத பிரச்சினை,சாதிவெறி என சமூகத்தில் பிற்போக்குத்தனங்களை காணும் போது நாமெல்லாம் மனிதன்தானா மனிதத் தன்மையுடன்தான் வாழ்கிறோமா என்கிற சந்தேகம் அப்பப்போ வந்து தொலைக்கிறது.இதற்கு பதிலாய் உலகம் அழிந்து போனால் நன்றாய் இருக்கும் என பிற்போக்குதனமாய் உள்ளம் சொல்வதை முற்போக்காய் எண்ணிப் பார்ப்பதை மறுக்க முடியவில்லை..

Widget byLabStrike


No comments:

Post a Comment