Thursday, November 22, 2012

பால்தாக்கரே முதல் கசாப் வரை -மிக்ஸ்டு மசாலா(காரசாரம்)

இனிப்பு:

இஸ்ரேல் - ஹமாஸஇயக்கத்தினரஇடையகாஸபகுதியிலஒரவாரத்திற்கமேலாநீடித்த சண்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள்,மக்கள் இறந்தது,பலர் பாதிப்புக்கு உள்ளானது எல்லோரும் அறிந்ததுதான்.ஒரு வாரமாக வெளிவந்து கொண்டிருந்த  போர் காட்சிகளையும் புகைப்படங்களையும் காணுகின்ற போதே ஈழத்தின் கோரத்தை நினைவு படுத்தியதை மறக்க முடியவில்லை.மனதில் அது ஒரு பாரத்தை ஏற்ப்படுத்தியதையும் மறுக்க முடியவில்லை.எப்போ போர் நிற்கும் அமைதி நிலவும் என்றிருந்த நிலையில் அங்கே போர் நிறுத்த ஒப்பந்தம் வந்து விட்டது என்கிற செய்தியை இன்று கேட்கிற போது மனதிற்கு கொஞ்சம் மகிழ்ச்சியையும்,நிறைவையும் உண்டு செய்தது.

 -------------------------------------------------------------------------------------------------------------------------------------

கசப்பு:

மும்பை தாக்குதலில் ஈடுபட்டு பின் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து நேற்று தூக்கிலிடப்பட்டிருக்கிறான்  கசாப்.உலக நாடுகள் மரணதண்டனை வேண்டாமென்று போராடுகிற சூழலில்,அதற்கான பேச்சுவார்த்தையில் மரணதண்டனை வேண்டுமென்று பேசிவிட்டு வந்த வேகத்தில் ஒரு கொலையை நிறைவேற்றி இருக்கிறது இந்திய அரசு. அரசு ,சட்டம் ஏற்றுகொள்கிற கொலைதான் மரணதண்டனை ஆகிறது.ஒருவன் செய்த தவறுக்கு அவன் மனம் வருந்த கடுமையான தண்டனைகள் தரலாமே தவிர உயிரைப் பறிப்பது என்பது ஒரு விதத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொலையாகத்தான் எண்ண வேண்டி இருக்கிறது.கசாப் தூக்கைப் பற்றி ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு கருத்து இருப்பினும் மனிதாபிமானத்தோடு யோசித்தோமானால் கொலைக்கு கொலை தீர்வாகாது..இதுவும் ஒருவகை பழிவாங்கும் மனோபாவம்தான்.இதனால் கசாப் தூக்கு ஒரு கசப்பான சம்பவமாகதான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

குற்றம் செய்த
நபரின் மீது
சட்டம் செய்யும்
குற்றம்
 மரண தண்டனை..
 

 -------------------------------------------------------------------------------------------------------------------------------------

காரம்:

பால்தாக்கரே மறைவுக்கு மும்பையில் நடந்த முழு கடையடைப்புக்கு எதிராக முகநூளில் கருத்து சொன்னதாக ஷகீன் என்கிற  பெண்ணையும் அதை வழிமொழிந்து லைக் போட்டதாக ரினி என்கிற இன்னொரு பெண்ணையும் காவல்துறை கைது செய்திருக்கிறார்கள் என்பது எல்லோரும் அறிந்தது.அந்தப் பெண் எழுதி இருந்த அந்த கமெண்டை பார்த்த போது அதில் அவ்வளவு மோசமானதாக,எதுவும் இல்லை.சாராசரி மனித மனத்தின் பிரதிபலிப்புதான் அது.இந்த சின்ன விசயத்தை கூட பெருந்தன்மையாக எடுதுக்கொள்வோர் இங்கில்லை..
அதைவிட அதிகார வர்க்கங்கள் என்ன சொன்னாலும் உடனே வெறியோடு நடந்துகொள்கிற காவல்துறை..ஏதோ பெரிய கொலையை செய்தவர்கள் போன்று அவர்களை வேகத்திலும் வேகமாக கைது செய்து,அதிகார வர்க்கத்தின் பாதுகாவலனாக நடந்துகொண்டிருக்கிறது காவல்துறை.சின்ன ஊடக சுதந்திரம் கூட இல்லா இந்நாட்டை சுதந்திர இந்தியா என்று சொல்லும் போதும் கேட்கும் போது நகைச்சுவை மிகுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------


Widget byLabStrike


2 comments:

  1. இந்த தண்டனை சரியா... தவறா என்று பலருடனும், எனக்குள்ளும் சிந்தனை...

    ...ம்... எல்லாம் முடிந்து விட்டது...

    நமது நாடு ஜனநாயக நாடாம்...!

    ReplyDelete
  2. Can you consider same for rajapakshay also.

    ReplyDelete