Monday, November 26, 2012

பரவசமூட்டிய 5D அனுபவம்


முதலில் போனதென்னவோ எஸ்கேப்பில் ஏதேனும் ஒரு படம் பார்த்து விட வேண்டுமென்றுதான்..நான் போன நேரமோ மொக்கைப் படத்திற்கு கூட அங்கு டிக்கெட் இல்லை..சரி என்ன செய்யலாம் என யோசித்து சுற்றி வருகையில் வரவேற்றது புதிதாக எக்ஸ்பிரஸ் அவென்யுவில் ஆரம்பிக்கப் பட்டிருக்கிற 5D டெக்னாலஜி தியேட்டர்..

ஆஹா ..நல்ல விசயமா இருக்கே 5D  னா  எப்டி பீல் பண்ண வைப்பாங்கன்னு கவுண்டர் பக்கம் போனா டிக்கெட் விலை நூற்றி ஐம்பது ரூபாய்..படத்தின் டியூரேசன் பார்த்தா 10 டூ 12 நிமிடங்கள் னு ஆரம்பமே பீல் பண்ண வச்சுடாங்க.
நாம குறைந்தபட்சம் தியேட்டர் பக்கம் போனா ஆங்கிலப்படம்னா ஒன்றரை மணிநேரம்,தமிழ்படம் ஹிந்தி படம்னா இரண்டரை மணிநேரம்னு பொழுது போக்கி பழக்கப் பட்டிருக்கோம்.. அப்டி பாத்தாதான் கொடுக்குற 120 ரூபாய்க்கே ஜீரணம் ஆகின மாறி பீலிங் வரும்..இது என்னனா 10 நிமிசத்துக்கு 150 னு சொல்றாங்களே ன்னு பீலிங்கோட டிக்கெட் வாங்கி காத்துட்டிருக்கேன்..(குறிப்பு:5 வயதுக்குள் உள்ள குழந்தைகள் 80 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்கள் ,மனதைரியம் அற்றவர்கள் பார்க்க கூடாதாம்)..பில்ட் அப் லாம் பெருசா இருக்கே ..

உள்ளே போனவர்கள் வெளியே வரும்போதெல்லாம் எந்த ஆச்சர்யமும் இல்லாமல் சாதாரணமா வந்தாங்க..சரி உள்ளே போய்  மொக்க வாங்கப் போறோம்னு நெனச்சுட்டு இருந்தேங்க..
தியேட்டர் உள்ளே போனா சீட் நம்பர் எல்லாம் இல்ல..யார் எங்க வேணாலும் உக்காந்துக்கலாம்..சீட்ல பெல்ட் எல்லாம் இருக்கு..மொத்தமே வரிசைக்கு எட்டு சீட் என்று 4 வரிசைகள்தான்.. கண்ணாடி கொடுத்தாங்க..படத்தை போட்டாங்க..

முதல் குறும்படம் TERRIFIC DINOSAURS ஒரு காட்டுக்குள்ளே முட்டையிலிருந்து வெளிவந்து தன வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும் குட்டி டைனோசர் என்னனென்ன ஆபத்துகளை கடக்க நேரிடுகிறது எப்படி உயிர் பிழைக்கிறது எனும் வாழ்க்கை போராட்ட கதை..எல்லா விதமான டைநோசர்களையும் நம் கண்முன் நிறுத்தி மிரட்டி விட்டார்கள்..காமெரா கோணத்தோடு நம் இருக்கையை ஆட்டி குலுக்கி ,டைனசரோடு  நம்மையும் காட்டுக்குள்ளே பயணிக்க செய்து பள்ளம் மேடுகளில் ஏற்றி இறக்கி பின்னால் யாரோ பற்றுவது போல பீலிங் கிரியேட் பண்ணி,ஸ்பிரே  அடிக்க செய்து பின்னி எடுத்து விட்டார்கள்..இதுகூட பரவாஇல்லை அடுத்ததாக ஆரம்பித்தார்கள் ROLLER COASTER என்கிற குறும்படம்..அப்பப்பா..ஒரு அதி பயங்கரமான பயணம் அது..பயத்தில் உள்ள பலர் கண்களை மூடிக் கொள்வார்கள்..நல்ல பீல்..நிஜமான பயணம் செய்தேன் திரை அரங்கில்...
சும்மா சொல்லக் கூடாதுங்க பத்து  நிமிசம்னாலும் பட்டையை கிளப்புது..கொடுத்த காசுக்கு குறையொன்றுமில்லை..


வரும் காலத்தில் டெக்னாலஜி வளர்ந்து அணைத்து தியேட்டர்களும் 5D ஆகும்போது நாம் படம் பார்க்க போவதில்லை..படத்தோடு வாழப்போகிறோம் என்பது உறுதியாகி விட்டது..வாய்பிருந்தா போய் நீங்களும் என்ஜாய் பண்ணுங்க..Widget byLabStrike


6 comments:

 1. எங்க ஊருக்கு வரட்டும்... ரசனைக்கு நன்றி...

  ReplyDelete
 2. //// தியேட்டர் பக்கம் போனா ஆங்கிலப்படம்னா ஒன்றரை மணிநேரம்,தமிழ்படம் ஹிந்தி படம்னா இரண்டரை மணிநேரம்னு பொழுது போக்கி பழக்கப் பட்டிருக்கோம்.. அப்டி பாத்தாதான் கொடுக்குற 120 ரூபாய்க்கே ஜீரணம் ஆகின மாறி பீலிங் வரும்../// 100% true

  ReplyDelete
 3. தங்களது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். முடிந்தால் சென்று பார்க்கவும். நன்றி

  http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_17.html

  ReplyDelete