Tuesday, October 9, 2012

மக்கள் கலைஞனை மறந்துவிட்டோம்

நான் அரைடவுசரில் வலம் வந்த காலமது..சின்ன சின்னதாய் சினிமா எனக்குள்ளே  கூடுகட்டி குஞ்சு பொரித்துக் கொண்டிருந்த வயது.கிடைக்கிற நாலணா,எட்டனாவில் நடிகர் படங்களை வாங்கி சேமித்து வைக்கிற  பொக்கிஷ  பருவம்..கெளதமியை கெ ள த மி என பிரித்து படித்த  அறியா வயது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தலைவன்,ரஜினி கூட்டம்,விஜயகாந்த் கூட்டம்,கமல் கூட்டமென ஆட்டம் போட்டு அடிதடி வரை செல்லும் ஆர்ப்பரிப்பு.

அந்தக்காலக்கட்டதில்தான் அவர் தமிழ்சினிமாவின் சாதனை நாயகனாக,பட்டி தொட்டி முதல் பாரேன பட்டொளி வீசி பிரபலமாகிக்கொண்டிருக்கிறார்.பார்வைக்கு பகட்டு இல்லை,பட்டணத்து தோற்றம் இல்லை,பக்கத்துக்கு வீட்டு பையனைப்போல்,அண்ணனைப்போல்,ஆண்டை வீட்டில் பண்ணையடிக்கும் ஒரு  அப்பாவியைப்போல  கிராமத்து  தோற்றம்..அப்படித்தான் படங்களில் அவர் நடித்த கதாப்பாத்திரங்களும்.அதுதான் அந்த எளிய மனிதனை அவ்வளவு சீக்கிரம் மக்களிடத்தில் எடுத்து சென்று கோபுரத்தின்  உயரத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் எல்லா கிராமங்களிலும் வரவேற்பு பலகையாய் தொங்குவதே அவரின் ரசிகர் மன்ற போர்டுதான்.ஒரு எங்களின் டவுசர் காலத்தில் அவரும் டவுசருடனே  எங்களுக்கு அறிமுகமானார்.டவுசர் என்றால் அவர் என்கிற அளவுக்கு பிரபலம்..அவர்தான் ராமராஜன்.

பிறந்தது அக்டோபர் 8 ..இயற்பெயர் குமரேசன் மதுரை மேலூர் என்கிற சிற்றூரில் டூரிங் டாகிஸில்  டிக்கெட் கிழிப்பவராக வாழ்க்கையை துவங்கி ,சினிமாக்கனவுகளோடு  சென்னைக்கு வந்து மக்களின் மனங்களில் சிகரமாகிய  கலைஞன்.

எண்பதுகளின் இறுதிகளில்  சினிமா சாம்ராஜ்யமான ரஜினி ,கமலுக்கே ஒரு அல்லு கிளப்பியவர்.அந்த அளவுக்கு ராமராஜனின் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

இளையராஜாவின் இசையில் ராமராஜன் இணைந்தால் இசை ராஜ்யம்தான் என்கிற அளவுக்கு பாடல்கள் மாபெரும் வெற்றியை சுவைத்தன.கங்கை அமரன் இயக்கம் என்றால் இன்னும் கொண்டாட்டம்தான்.
உதவி இயக்குனனாக களமிறங்கி இயக்குனனாய் உயர்ந்து  காதனாயகனாக கல்லா கட்டியவர்.இவர் நடித்த கரகாட்டக்காரனை காணாதார் இல்லை என்கிற அளவுக்கு படம் ஹிட்.வருடக்கணக்கில் ஓடி பாடல்களுக்கு மக்கள் சாமியாடி சரித்திர சாதனை கண்டது அந்தப்படம்.

நடிகை நளினியை திருமணம் செய்தார்..பின் விவாகாரத்து ஆனது வேறுகதை.
ராமராஜன்  அ. இ. அ. தி. மு. க-வின் தலைமை கழக பேச்சாளர்.1998ல் திருச்செந்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.
மக்களுக்கான மகராசனாக ,மக்களோடு ஒருவனாக நடித்த  அந்த புகழ்பெற்ற நடிகனை இன்று எல்லோரும் மறந்து விட்டோம்..காலம்,சூழல் அந்தக் கலைஞனை மறக்கடித்து விட்டது.நேற்று மறந்ததால் இன்று நினைவுபடுத்தி சொல்கிறேன் மக்கள் நாயகனே பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


Widget byLabStrike


8 comments:

 1. சிறு குறிப்பு: இது வரை அவர் நடித்த படங்களில் குடிப்பது போன்ற காட்சியே கிடையாது என்பது சிறப்பு.
  :)

  ReplyDelete
  Replies
  1. அருமையான செய்தி...குடிகார காட்சியை வைத்தே படம் எடுப்போர் மத்தியில் இப்படியோர் மனிதர் ..மிக்க நன்றி நண்பரே..

   Delete
 2. நல்லவர்கள் யாரும் நிலைப்பதில்லை...

  ReplyDelete
 3. நல்ல பதிவு... இங்கும் வாருங்கள் தோழா...
  http://varikudhirai.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. நன்றி..நிச்சயம் வருகிறேன் நண்பா..

   Delete
 4. ஆயிரம் சொன்னாலும் மக்கள் நாயகன் மக்கள் நாயகன்தான்....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பரே..அவருக்கு நிகர் அவர்தான்

   Delete