தமிழ் சினிமாவின் முதல் வாள்சண்டை வீரர் என்ற பெருமை கொண்ட அவர்
மிக ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர்.பிரான்சில் முதன்முதலில் வாள்
பயிற்சி பயின்றவர்.பெரிய நாட்டிய கலைஞர்.இவரின் நாட்டியம் கண்டே இவருக்கு
சினிமா வாய்ப்பு வந்தது.
இவரை படத்தில் நடிக்க அவர் தந்தை அனுமதிக்கவில்லை.மகனின் விருப்பதிற்காக தந்தை விட்டுக்கொடுத்து நடித்துவிட்டு வா என அனுப்பிய படம்தான் "ரிஷ்ய சிரிங்கர்".முதல் படமே அவருக்கு பெரிய பெயரை பெற்றுதந்ததால் படம் நடிப்பதில் பயணிக்கலானார்.அவர்தான் நடிகர் ரஞ்சன்.
இயற்பெயர் ராமநாராயண வெங்கடரமண சர்மா
தமிழ் சினிமாவில் முதல் பைலட் என்கிற பெருமையும்,அன்றைய காலகட்டத்தில் உலகத்திலேயே வாள் சண்டையில் பிரபலமான நடிகர்கள் ஆறு பேர்தான்,அதில் தமிழ் சினிமா நடிகர்கள் இருவர்.ஒருவர் ரஞ்சன் மற்றொருவர் எம்.ஜி,ஆர் என்கிற மற்றொரு பெருமையும் பெற்றவர்.
ரஞ்சன் கதாநாயகனாகவும்,எம்.ஜி.ஆர் வில்லனாகவும் நடித்த "சாலிவாகனன்" படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் எம்.ஜி ஆரின் வாள் ரஞ்சனின் தோள்ப்பட்டையில் பாய்ந்து விட அது அந்தக்காலக்கட்டதில் பத்திரிக்கைகளால் பெரிய சர்ச்சையாகியது.எம்.ஜி.ஆர் ரஞ்சனை வேண்டுமென்றே கொலை செய்யப் பார்த்தார் என்று.
ஆனால் எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனவுடன் ராயப்பேட்டையில் நடந்த ஒரு நிகழ்வில் ரஞ்சனை வரவழைத்து பத்திரிக்கையில் வந்த அந்த செய்தியை சொல்லி விளம்பரத்திற்காக பொய் செய்தி போடக்கூடாது..பத்திரிக்கை தர்மம் வேண்டுமென மேற்கோள் காட்டி பேசினார்.
நீண்ட நாட்களுக்குப்பிறகு "சந்திரலேகா" என்ற படத்தில் வில்லனாக தோன்றி ரஞ்சன் பரபரப்பை கிளப்பினார்.
ரஞ்சன் தமிழில் கிட்டத்தட்ட எட்டு படங்கள் கதாநாயகனாக நடித்தார்.கடைசியாக நடித்தப்படம் "கேப்டன் ரஞ்சன்".அதன்பின் அமெரிக்கா சென்று அங்கேயே தன் கடைசி காலத்தை கழித்தார். அமெரிக்காவிலேயே இறந்தார் என்கிற செய்தி மட்டும் தமிழகத்துக்கு கிடைத்தது.
சில தகவல்கள் தெரியாதவை...
ReplyDeleteஇன்றும் வியக்க வைக்கும் படம் : சந்திரலேகா
நன்றி சார்..
Deleteஏமாந்தே போனேன்! ரமணி என்றழைக்கப்பட்ட ரஞ்சன் பற்றிய அரிய தகவல்கள்!
ReplyDeleteஅப்படியா...நன்றி நண்பரே...
Deleteத.ம2
ReplyDeleteஅரிய தகவல்.
ReplyDeleteநன்றி.
நன்றி அய்யா
Deleteஅருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே
ReplyDeleteநன்றி ..வந்துட்டா போச்சு...
Deleteஅருமையான தகலல், நன்றி
ReplyDeleteநன்றி நண்பரே...
Delete