Tuesday, October 15, 2013

பழைய பட போஸ்டர்கள் -ஞாபகம் வருதே

பழைய படம் பற்றிய நினைவலைகளில் படத்திற்காக ஒட்டப்படும் போஸ்டர் முன்னிலை வகிக்கும்.அந்தக்கால தொழில் நுட்பத்திற்கேற்ப,கருப்பு வெள்ளை,ஈஸ்ட்மேன் கலர்,கலர் என தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப படமும் படத்திற்கான போஸ்டரும் நம் நினைவலைகளில் அழியாமல் அப்படியே..படத்தின் போஸ்டரை பார்ப்பதே கடவுளைப் பார்ப்பது போன்ற பிரமிப்பு அப்போ..இன்று முதல்,நாளை முதல்,இன்றே இப்படம் கடைசி போஸ்டருக்கு மேல் ஒட்டப்படும் பிட் போஸ்டர்கள் நினைவில் நீக்கமற நிறைந்து..மல்டிப்ளெக்ஸ்  இல் இருந்து டூரிங் டாக்கிசை நோக்கி பின்னோக்கி நகர்கிறது நினைவு..வினாயகனே  வெல்வினையை வேரறுக்க வல்லான் பாட்டு ஓடுகிறது....படம் போடப்போறாண்டா மக்கள் ஓடுகிறார்கள்.. நாலணா,எட்டணாவாய் சேர்த்த பணத்தை  எண்ணி எடுத்துக்கொண்டு படம் பார்க்க நாங்களும் ஓடுகிறோம்..முறுக்கு,முறுக்கேய்  முறுக்கு  விற்பவன் படம் ஓடுவதற்கு இடையில் குறுக்கிடுகிறான்..இப்படியாய் நினைவலை விரிகிறது...பாருங்கள் சில பழைய படத்தின் போஸ்டர்களை..ஞாபகம் வருதே ஞாபகம் வருதே உங்களுக்குள்ளும்... 
Widget byLabStrike


16 comments:

 1. பல முறை இந்தப் படங்களை பார்த்ததுண்டு...

  நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி...

  ReplyDelete
 2. எங்கிருந்து பாஸ் இதெல்லாம் கண்டுபிடிச்சீங்க

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் இணையதள புண்ணியத்துலதான் நண்பரே..

   Delete
 3. சினிமாவுக்குப் போறதே.... எதோ திருவிழாவுக்குப்போற மாதிரிதான் அந்தக் காலத்தில்!

  இப்படி வீட்டுலே உக்காந்துக்கிட்டு சினிமா பார்ப்போமுன்னு அப்போ கனவு கூட வந்துருக்காதே!

  போஸ்ட்டர்கள் கலெக்‌ஷன் அருமை.
  சினிமாக்கொட்டாயில் வேலை செய்யும் ஒருவர் அண்ணனின் நண்பரானதால்..'இன்றுமுதல்' புதுப்படம்(!!) விளம்பரமாக மாட்டுவண்டி ஓட்டி நகர்வலம் வரும்.சமயம், நம்ம வீட்டாண்டை கொட்டுச் சத்தம் கேட்டு நோட்டீஸ் வாங்க ஓடும்போது ஒரு போஸ்டரை அண்ணனிடம் கொடுக்கும்படி நண்பர் கொடுப்பார்.

  பொன்போல வாங்கிவருவேன். அண்ணன் அதை அப்படியே பார்த்து வீட்டுக்குள் சுவரில் வரைந்துவிடுவார். சிறந்த ஓவியர்!

  பழைய நினைவுகளைக் கிளறிய இடுகை.
  நன்றீஸ்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் மலரும் நினைவுகள் கண்முன் நிழலாடுகின்றன..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

   Delete

 4. பதிவைப் பார்த்ததும் பழைய நிகழ்வுகள் மனதில் நிழலாடியது. பகிர்ந்தமைக்கு நன்றி. இதுபோல் அந்த காலத்தில் திரையரங்குகள் படங்களை திரையிடும்போது வெளியிட்ட துண்டுப் பிரசுரங்கள் கிடைத்தால் பதிவிடவும். அவைகளில் இருந்த ‘காலம் கட்டணம் வழக்கம் போல்’ என்பது போன்றவை இரசிக்கக்கூடியவை

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாய் நண்பரே..நன்றி..

   Delete
 5. உழைக்கும் கரங்கள், திருவிளையாடல், தாய்க்குத் தலைமகன் விளம்பரங்களே நான் பார்த்துள்ளேன். யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட திரையரங்குக்கு சில சுவர்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். 50 வது நாள், 100 வது நாளெல்லாம் பின்பு அதே விளம்பரத்திலே ஒட்டுவார்கள். நாள் செல்ல செல்ல ,நிறங்கள் வெளிறி விடும்.
  துண்டுப் பிரசுரங்களும் அந்த நாளில் பிரபலம், முன் கதைச் சுருக்கம் என கதை கொஞ்சம் சொல்லி... மிகுதி வெள்ளித் திரையிலோ, வெண்திரையிலோ எனப் போட்டிருக்கும், நான் பார்த்த எந்த அரங்கிலும்
  வெள்ளித் திரையைக் காணவில்லை. இது வரை அந்த வெள்ளித் திரையின் அர்த்தம் புரியவில்லை.

  ReplyDelete