Saturday, October 27, 2012

ஜூனியர் சூப்பர் சிங்கர் பைனலில் நடந்த மெகா மோசடி

 
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடும்,அபிமானத்தோடும்,மாபெரும் வெற்றியை சுவைத்து அனைவராலும் பாராட்டப்  பெற்றது விஜய் தொலைகாட்சியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் என்றால் மிகையாகாது.வயது வித்யாசம்,கிராமம் நகரம் என்ற எந்த பாராபட்சமும் இன்றி அனைவராலும் ரசிக்கப்பட்டு வெற்றியின் உச்சத்தை தொட்ட நிகழ்ச்சி அது. ஜூனியராக இருக்கட்டும்,சீனியராக இருக்கட்டும் அதில் பாட்டு பாடும் பிள்ளைகளை தம் வீட்டு பிள்ளைகளாகவே எண்ணி மகிழ்ந்து தமிழ்நாடே கொண்டாடிய நிகழ்ச்சி அது..அந்த நிகழ்ச்சி ஆக்கமும்,தரமும் அதற்கு காரணம்.

அப்பப்போ சில சர்ச்சைகள் எழுந்தாலும் அது பெரிதாக எண்ணுகிற அளவுக்கு ஆளாகாமல் அந்த நிகழ்ச்சியின் தரம் அதனை நீர்த்துப் போக செய்யும்.அந்த அளவுக்கு மக்களின் மனதை தொட்டு சிகரத்தில் வைத்து பார்க்கப்படும் நிகழ்ச்சி அது.

நான் பொதுவாக தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் இல்லாதவன்.அவ்வபோது  நிகழ்ச்சி பார்க்க எண்ணினால் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்பதுண்டு.அதிலும் ஜூனியர் சூப்பர் சிங்கர் என்னோட சாய்ஸ்.சின்னக் குழந்தைகளின் மழலைக் குரலில் நான் மயங்கிப்போவதுண்டு.சின்னக் குரல்களின் சிலிர்ப்பில் இந்த உலகத்தை மறந்து வேறோர் உலகத்தில் லயிப்பதுண்டு.குழந்தைகள் குறைபாடாக பாடினால் கூட அந்த மழலைக் குரலின் மயக்கம் நம்மை விட்டு மங்குவதில்லை.

நேற்று ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பைனல் நடந்தேறுவதாக அறிவிக்கப் பட்ட பொழுதில் ஒரு செய்தி முகநூலுக்கு  வந்து சேர்ந்தது.கீழ்காணும் புகைப்படத்தையும் அது சொல்லும் செய்தியைப் பாருங்கள்.


நானும் நிகழ்ச்சியைப் பார்க்கும் போது சற்று சந்தேகம் கொண்டேன்.ஜூனியர் என்கிறார்கள் பெரிய பிள்ளைகள் சிலவும் பாடுகின்றனவே என்று.ஒருவேளை வயதுக்கு மீறிய வளர்ச்சியாய் இருக்கலாம் என்றெண்ணி விட்டுவிட்டேன்.ஆனால் மேற்கண்ட அந்த செய்தி என்னை அதிர்ச்சியடைய செய்தது.
மேற்கண்ட பெண்ணுக்கு உண்மையில் 15 வயதா என்பதும் தெரியவில்லை,விஜய் தொலைக்காட்சி அறிவிப்பை வெளியிடும் போது 13 வயதிற்குள் உள்ள குழந்தைகள்தான் பங்குகொள்ள முடியும் என்று அறிவித்திருந்தார்களா தெரியவில்லை.
ஒருவேளை அப்படியோர் அறிவிப்பை வெளியிட்டு விட்டு எதிர்மறையாக நடந்திருப்பின் அது பெரிய தவறு.ஏமாற்று வேலை.மக்களின் நம்பகத்தன்மைக்கு விஜய்  வைக்கிற வேட்டு.

பெற்றோர்களும் குற்றத்தை சேர்ந்து செய்கிறார்கள் ,எல்லோருக்கும் தாம் வெல்ல வேண்டும் தம் பிள்ளைகள் வெல்ல வேண்டும் என்கிற ஆசை இருக்கும்தான்.அதற்காக பத்தாவது படிக்கிற பிள்ளையை கொண்டு போய் முதல் மதிப்பெண் வேண்டுமென்பதற்காக முதல் வகுப்பில் தேர்வெழுத வைக்கலாமா? அந்த நிலைதான் மேற்கண்ட செய்தியும்.பெரிய குழந்தையை கொண்டு வந்து ஜூனியர் நிகழ்ச்சியில் சேர்த்து நேற்று  நடந்த பைனலில் இரண்டாம் இடம் என்கிற வெற்றிக்கனியையும் பறிக்க வைத்து விட்டார்கள்..நல்லவேளை முதலிடம் இல்லை. இதனால் தோற்றுப்பான உண்மையான ஜூனியர் குழந்தைகளின் மனநிலை என்னாகும்.உண்மையில் வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டியவர்கள் அந்த வயதுக்கு உட்பட்டவர்கள் எவ்வளவு ஏமாற்றமாக உணர்ந்திருப்பார்கள்.எண்ணிப்பாருங்கள் வெகுஜன ஊடக வியாபாரிகளே..ஏமாற்று வேலை செய்யும் பெற்றோர்களே..

முதலிடம் பெற்று வெற்றியை சுவைத்த உண்மை ஜூனியர் ஆஜீத்


Widget byLabStrike


14 comments:

 1. ஜூனியர் ஆஜீத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. சின்ன வேண்டுகோள் : இந்த Facebook, Tweeter, Google Plus and Share பட்டன்களை எல்லாம் இன்னும் கொஞ்சம் ஓரத்தில் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்... முடிந்தால் சரி செய்யவும்... நன்றி சார்...

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் நண்பரே செய்கிறேன்

   Delete
  2. கரெக்ட்.. வாசிக்கும் போது கொஞ்சம் இடைஞ்சலா இருக்கு..

   Delete
 3. http://vijay.indya.com/serials/super_singer_jr3/index.html

  intha link il paarungal. Age 6 -14 ulla kuzhainthaigal pangerkalam ena thrivithullargal . Pragathi should have beeen 14 at the time of auditions. so no issues.

  ReplyDelete
 4. It is obvious from the picture that it is a recent one(we can see SSJ 04 on the mother's shirt), so, Pragathi must have been within the age limit during entry. I dont see any problem here. Cannot believe media will indulge in such colossal blunders.

  ReplyDelete
 5. அப்படிப் பார்த்தால் உங்கள் நிந்தனை சுகன்யாவைக் குறித்தானதாகவே இருந்திருக்க வேண்டும்.

  பிரகதிக்கு போட்டியில் நுழைந்த போது 13 வயதிருந்து இப்போது 14 இருக்கலாம்.ஆனால் சுகன்யா நிச்சயம் பிரகதியை விடப் பெரிய பெண்.

  ReplyDelete
 6. இது அங்கீகரிக்கப் பட்ட போட்டி அல்ல..
  Just a Show... அவ்வளவே...
  சிறுவர்கள் பாடுவதை ரசியுங்கள், அல்லது புறக்கணியுங்கள்..
  விமர்சிப்பது இந்த கேடுகெட்ட நிகழ்ச்சிக்கு இலவச விளம்பரம் தருவதுபோல் ஆகும்...

  ReplyDelete
 7. 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றுதான் விஜய் டிவி அறிவித்திருந்தார்கள் என்று எண்ணுகிறேன். இப்போது இந்த செய்தியை படித்தபின் எனக்கும் சிறிது குழப்பமாக உள்ளது. எது உண்மை என்று உறுதியாக தெரியாத நிலையில் விமர்சனம் தேவையில்லாத ஒன்று என்று எண்ணுகிறேன். அப்படி விஜய்டிவி நிர்வாகம் தவறு செய்திருந்தால் ப்ரகதிதான் முதல்பரிசை வென்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.பார்ப்போம் ரசிப்போம்.

  ReplyDelete
 8. இது விஜய்டிவி இணையதளத்தில் இந்நிகழ்ச்சிக்காக அவர்கள் கொடுத்திருந்த அறிவிப்பு.வீண் குழப்பங்களை கிளப்பவேண்டாம்.பார்ப்போம் ரசிப்போம்.
  The much awaited third season of Vijay TV's Airtel Super Singer Junior will hit the Television screens from 17 Oct 2011. The first and the second edition of Super Singer Junior launched in the years 2007 & 2009 gained huge appreciation across the state and Junior Super Singers like Krishnamoorthy, Vignesh, Srikanth, Alka are etched in the viewers' memory even now. These children were given the greatest opportunity to meet many legendary singers like Padmabhushan Balamurali Krishna, Chitra, Usha Uthup and many more to exhibit their talent and perform on the big stage.

  Vijay TV is now back this year with Airtel Super Singer Junior 3! This year the show promises greater entertainment and this provides another golden chance for kids in the age group of 6-14 years to showcase their singing talent on a Vijay TV's platform which is to be judged by the legends of the music industry.

  Apart from gaining recognition from acclaimed names of the music industry and being a child singing icon, the Airtel Super Singer Junior 3 winner will be honored with mega prizes.

  "The success of the various seasons of Super Singer encouraged us to launch the junior 3 version of the reality show. The junior version proved to be a bigger success and the property now occupies the prime band of Tamil Television and is a winner. This season promises lot more talent and bigger prize money and the expectation has increased vastly as well", says K. Sriram, General Manager, Vijay TV.

  Do not miss to watch Airtel Super Singer Junior 3, launching on 17 Oct 2011, airing Monday through Friday 9pm only on Vijay TV

  ReplyDelete
 9. கனவு கோட்டை கட்டுகிறார்கள், ஜெயித்தால் ஜெயித்து விடலாம் என்றொரு கனவு. அதனால் ஊழல்

  ReplyDelete
 10. Television rating point(TRP)-க்காக என்ன வேணாலும் செய்து பிழைப்பை நடத்தும் இது போன்ற channel-களில் இதெல்லாம் சகஜமே..

  ReplyDelete
 11. Tamil nesan உண்மையை கண்டு அறிந்து வெளிபடுத்தி உள்ளார், இதனால் வீண் சர்ச்சைகள் தவிர்க்கப்படும்.

  ReplyDelete