கென்னடி அழைப்பின் பேரில் அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்ற சிவாஜி அங்கு பலரை
சந்தித்தார்..அதில் மிக முக்கியமானவர் பிரபல ஹாலிவுட் நடிகர் மார்லன்
பிராண்டோ.தன் நடிப்பின் மூலம் உலகம் முழுவதையும் கட்டிப்போட்டவர்.அந்த
சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.ஹாலிவுட்,கோலிவுட் என
மிகப்பெரும் இரு நடிப்பு சகாப்தங்கள் இணைந்திருக்கும் இப்புகைப்படம்
வரலாற்று முக்கியம்.
அப்படிப்பட்ட நடிகனையே அறிஞர் அண்ணா ஒரு கூட்டத்தில் பேசும்போது, "சிவாஜிகணேசனைப் போல் இன்னொருவர் நடிப்பது சிரமம். ஒருவேளை மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால், சிவாஜிக்கு இணையாக நடிக்கக்கூடும்"என்றார்.அந்த அளவுக்கு சிவாஜியின் நடிப்பு மற்றவர்கள் அதிசயிக்கும்படி இருந்தது.

அந்தப் பயணத்தின் போது சிவாஜிகணேசன் நயாகரா நீர்வீழ்ச்சியை காண சென்றார். அவரை நயாகரா நகர மேயர் வரவேற்று ,அவருக்கு
ஒரு தங்கச்சாவியைக் கொடுத்து, "இன்று ஒரு நாள் நீங்கள்தான் இந்த நகரத்தின்
மேயர். அதற்கு அடையாளம்தான் இந்த தங்கச்சாவி" என்றார்.
பிற
நாடுகளில் இருந்து வருகிற மிக முக்கிய பிரமுகர்களுக்குத்தான் இத்தகைய கவுரவம் தரப்படுவது அங்கு வழக்கம்.
சிவாஜிக்கு முன்னதாக இத்தகைய கவுரவத்தைப் பெற்ற இந்தியர் பிரதமர் நேரு
மட்டுமே.இதுவே பின்னாளில் ஒரு நாள் முதல்வராக "முதல்வன்" திரைப்பட கரு உருவாகவும் காரணமாகி இருக்கலாம்.
..எனது கோடுகளில்..
படமும் பகிர்வும் அருமை...
ReplyDeleteதமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...
நன்றி...
நன்றி நண்பரே
Deleteபதிவுக்கு நன்றி
ReplyDelete- நடிகர் திலகம் ரசிகன்
மிக்க நன்றி நண்பரே
Deleteதெரியாத செய்தி தெரிந்துகொண்டேன்.. பகிர்வுக்கு நன்றி நண்பரே..
ReplyDeleteமிக்க நன்றி..
Delete