Tuesday, October 2, 2012

பர்பி படமும், ஆஸ்கர் பரிந்துரையின் அவமானமும்

burfi

 பர்பி-இந்த ஆண்டு இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம்.படம் பலராலும் பாராட்டப்பட்டிருக்கிறது,மாபெரும் வெற்றியை நோக்கியும் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும் அது ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பி இருப்பது  பரபரப்பான செய்தி.

இது அப்பட்டமான  ஹாலிவுட்  காப்பி  என்று  ஒருசிலரும் ,பல  படங்களின்  கூட்டுகலவை    என  மறு  சிலரும்  கூறிக்கொண்டிருக்கின்றனர் . அதற்கேற்றாற்போல் கூட்டான் சோறாய்    இருக்குமோ  என்பதை  பல காட்சிகளும்  நமக்கு  நினைவுறுத்த தவறவில்லை.சாப்ளின்  படங்களை  இப்படத்தின்  காட்சிகள் நினைவுக்கு  கொண்டு  வருகின்றன ..அது பரவாயில்லை,தவறொன்றும்  இல்லை ..தாக்கம்,பாதிப்புகள்  இல்லாமல்  கற்பனை  வராது , வந்தாலும்  அது வளம்  பெறாது .பாதிப்புகளை  வைத்து  படம் பண்ணலாம் ..இதன்  மூலம்  அந்தப்  படத்தை  நம்பி  பணம்  போட்ட  தயாரிப்பாளருக்கு  பாதிப்பு  வராமல் செய்யலாம் .இது  கமர்சியல்  யுக்தி .

ஆனால் ஒரு படத்தை ஒரு உயரிய கௌரவமிக்க என்கிற ரீதியில் விருதுக்கு பரிந்துரைக்கும் போது,அதனுடைய தரத்தை ஆராய வேண்டும்.அப்படம் விருதுக்கு தகுதியானதா?அது உண்மையாக செய்யப்பட்டதா,இல்லை காட்சிகள் எங்கேனும் சுடப்பட்டதா?என்பதை எல்லாம் ஆராய்ந்து அப்புறம்தான் அனுப்ப வேண்டும். ஏனெனில் விருதுக்காக  பரிந்துரைக்கிற படத்தில்,படத்தின் தரம் மட்டும் வெளிஉலகுக்கு போவதில்லை,அதை அனுப்புகின்ற நாட்டின் பெருமையும்,தகுதியும் அதில் அடங்கி இருக்கிறது.
எங்கேனும் காட்சிகள் திருடி செய்யப்பட படத்தை நாம் விருதுக்காக அனுப்புகிற போது அதை பரிசீலிக்கிறவர்கள்,பார்வை இடுபவர்கள் அந்த நாட்டை,அங்குள்ள மக்களை,பார்வையாளைகளை,படைப்பாளிகளை கேவலமாக எண்ணவும், திருட்டு சினிமாக்காரர்களாக மனதில் பிம்பம் ஏற்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால் நம் இந்தியா போன்ற நாடுகளில் படத்தின் தரத்தை விடவும் எல்லாத் துறையிலும் பாலிடிக்ஸ் முன்னிலைப் பெறுகிறது.எதற்கு பெரிய மனிதர்களின், செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு இருக்கிறதோ அது தரம் குறைந்த தகுதியற்ற படைப்பாக இருந்தாலும் பரபரப்பாகிறது.அது விருதுக்கு பரிசீலிக்கப் படுகிறது.இந்த தரமற்ற அரசியல்தான் தற்போது பர்பி படத்தையும் ஆஸ்கருக்கு அனுப்பி இருக்கிறது.பர்பி படம் நல்லப் படமாக இருக்கலாம், ஆனால் ஒரு வேற்று மொழிப் படத்தின் தழுவல் காட்சிகளை வைத்த ஒரு படைப்பு, நாம் அவனிடத்திலேயே அனுப்பி வைக்கும் போது,அது பேசப்படாது, பார்த்த மாத்திரத்தில் இது சுட்டப்பழம் என சூடு போட்டு விடுவார்கள்.நம்மைப் பற்றிய ஒரு விம்பமும் அவர்களிடத்தில் கேவலமாக விழும்.

ஆஸ்கருக்கு பரிசீலிக்கிற  பட்டியலில் பல படங்களின் பெயர்கள் அடிப்பட்டன.அதில் நம் தமிழ் சினிமா  வழக்கு எண்ணும் ஒன்று.வழக்கு எண் நம் அன்றாடம் காண்கிற வாழ்வியலை,நம் கலாசாரத்தை,நம் சமூக ஏமாற்றங்களை ஆச்சு அசலாக பிரதிபலித்தப்  படம், அது விருதுக்கு அனுப்பி வைக்க தகுதியான படமும் கூட..அது அமெரிக்க  காரனுக்கு ஒரு புது மாதிரின அனுபவத்தை தரும்.அவர்கள் ரசிக்க வாய்ப்புள்ள படம்.. ஆனால் அது தமிழ் படம் ஆயிற்றே, ஆகவே பரிசீலனையோடு  நின்று விட்டது, இதே படம் ஹிந்தியில் செய்திருந்தால் ஆஸ்கர் கதவுகளை தட்டி இருக்கும்..

மொழியிலும், மதத்திலும், இனத்திலும், சாதியிலும்  படைப்பாளிகளையும், படைப்புகளையும் பிரித்து இனம் கண்டு  விருதுக்கு பரிசீலிக்கும் லோக்கல் பாலிடிக்ஸ் இருக்கும் வரை இந்தியாவின் கனவுகள் யாவும்  வெறும் கானல் நீர்தான்.


Widget byLabStrike


10 comments:

 1. எத்தனையோ நல்ல தமிழ் படங்கள் உள்ளன...

  முடிவில் சொன்னது போல் நம்மிடமே ஒற்றுமை இல்லை என்பது 100% உண்மை...

  ReplyDelete
 2. #தாக்கம்,பாதிப்புகள் இல்லாமல் கற்பனை வராது , #

  யதார்த்தமான உண்மை....

  ReplyDelete
 3. உண்மைதான்....வெற்றிகரமாக ஓடாத பல படங்கள் பரிந்துரைக்கு தகுதிவாய்ந்தவையாக இருக்கின்றன

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பரே..அரசியலால் நல்ல படங்கள் தேர்வாகுவது இல்லை.

   Delete
 4. tamilanin tarangal palaraal thadukkapattalum,unmayil tharamaanavai tamil,tamilane endru unaruvaargal, vellai vesam podum antha pannigal orunaal.................

  ReplyDelete
 5. மொழியிலும், மதத்திலும், இனத்திலும், சாதியிலும் படைப்பாளிகளையும், படைப்புகளையும் பிரித்து இனம் கண்டு விருதுக்கு பரிசீலிக்கும் லோக்கல் பாலிடிக்ஸ் இருக்கும் வரை இந்தியாவின் கனவுகள் யாவும் வெறும் கானல் நீர்தான்.

  உண்மை அய்யா படைப்பாளி ,திறமை மறுக்கபடுகிறது.;மறைக்கப்படுகிறது உங்கள் கண்டனம் சேரட்டும் உரியவர்ககளளுக்கு....
  அன்புடன் கருப்பசாமி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அய்யா..தொடர்ந்து வாருங்கள்..உங்கள் ஆதரவைத் தாருங்கள்..

   Delete