Friday, October 12, 2012

மாற்றான்- மணக்காதது ஏன்?

 
 நேற்று என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பன்  என்னிடம் வினவினான்.மாற்றான் படத்துக்கு ஐந்து  டிக்கெட் வேணும் வாங்கித்தர முடியுமா??மீடியா சைடு ல இருக்கவங்களுக்கு ஈசியா டிக்கெட் கிடைக்கும்னு சொன்னாங்க.அதான் உன் ஞாபகம் வந்தது அடிச்சேன்னு சொன்னான்.
 
அப்போ நான் அவனிடம் கேட்ட கேள்வி இதுதான்.எப்போ படம் ரிலீஸ்..
நாளைக்கு..அவன்
நாளைக்கா,என்ன சொல்ற..எந்த ஒரு பரபரப்பும்  இல்ல..எந்த பில்ட் அப்பும் இல்லையே..
ஆமாம் நாளைக்குதான் டிக்கெட் வாங்கிக்கொடு.
ட்ரை பண்றேன்..முடிஞ்சா வாங்கிக்கொடுக்குறேன்..
கால் கட்..

இதிலிருந்து எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை..ஏற்கனவே ஹைப் ஏற்றிய பல படங்களுக்கு கிடைத்த அனுபவங்களைப் பார்த்து படத்திற்கு வேண்டுமென்றே ஹைப் ஏற்றாமல் இருக்கிறார்களா??இல்லை..ஹைப் ஏற்ற நினைத்தும் அது எடுபடவில்லையா??

இரண்டும் இருக்கலாம்..ஆனால் ஹைப் ஏற்றி கிரேட் ஓபனிங் கொடுத்து கல்லா கட்டதான் எல்லோரும் பார்ப்பார்கள்..யாரும் ஓபனிங் வசூலை தவற விட மாட்டார்கள்.எதிர்ப்பார்ப்பை எகிற வைத்து ஓபனிங்கில் வசூலை அள்ளுவது,படம் நன்றாக இருந்தால் அதன் பின்னும் அள்ளுவது.இதுதான் பணம் போட்டவர்களுக்கு பாதுகாப்பானதும் கூட..

அப்படியிருக்க மாற்றான் ரிலீஸ் பரபரப்பாகாதது  ஏன்?
மாற்றான்  படம் ஆரம்பிக்கப்பட்ட காலம்தொட்டே பரபரப்பாகத்தான் பேசப்பட்டுக் கொண்டிருந்தது.ரெண்டு சூர்யாவாம்,ஒட்டிப் பிறந்தவர்களாம், ஒருத்தன்  ப்ளே பாயாம்,இன்னொருத்தன் அப்பாவியாம் என்றெலாம் பேச,இணையதளங்களில் செய்தி உலவ வந்தது வினை.நம் மக்கள் ஏற்கனவே ஒட்டிப் பிறந்த ஹாலிவுட் சினிமாக்களை ஓட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

இது நிச்சயம் ஹாலிவுட் சினிமாவின் காப்பிதான் என்று ஒரு சிலரும்,இல்லை நான் யோசித்த கதைதான் என கே.வி. ஆனந்தும் மாறி மாறி சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானர்.

அதற்கேற்றாற்போல் வந்தது சாருலதா ,இன்னும் சில படங்களைப் பற்றிய செய்திகளும்..ஒரே படத்தை பார்த்து ஒரே நேரத்திலா எல்லோரும் திருடுவார்கள் என மறுபுறம் மீண்டும் செய்தி தீப்பொறியானது.

மாற்றானைப் பொறுத்த வரை ஹாலிவுட் சினிமாவின் அப்பட்ட காப்பியாக இருக்காது, நாட் அங்கிருந்து  எடுத்திருக்க வாய்ப்புண்டு என்றே நான் நம்புகிறேன்..இருந்தும் சொல்வதற்கில்லை..படம் பார்த்தவர்கள் வந்து சொல்லும் வரை..

அது போகட்டும் ஹைப் கிரியேட் பண்ணுவதற்கு நடிகன்,இயக்குனர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர்,கதை என்கிற ஏதேனும் ஒன்று வேண்டும்,மாற்றானைப் பொறுத்தவரை  நடிகன்,இயக்குனர் இந்த இருவரின் ஹைப் ஏற்கனவே பேசப்பட்டு விட்டது..

அடுத்து கதை, கதையென்று வரும்போது ஒரு போதி தர்மனைப்போன்று ஒட்டிப்  பிறந்த ரெட்டைப் பிறவிகள் ஹைப்புக்கான நல்ல மேட்டர்தான்..ஆனால் ரசிகர்கள் என்றில்லாமல் எல்லோரிடமும் போதிதர்மனுக்கு கிடைத்த வரவேற்பு, எதிர்பார்ப்பு,பரபரப்பு ஒட்டிப்பிறந்தவர்களுக்கு கிடைக்கவில்லை.அதற்கு காரணம் அது  சார்ந்து வந்த செய்திகளும்,படங்களும்தான்.மாற்றானின் எதிர்ப்பார்ப்பை மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனமில்லை என்று ஆக்கி விட்டன.


Widget byLabStrike


6 comments:

 1. நீங்க சொல்லுரது சரிதான்.

  எனக்கும் அப்படிதான் தோனிச்சு!படம்

  இண்ணைக்கு ரிலிஸ் ஆகுர ஃபீலே இல்ல!
  விரைவில் படத்தை பார்க்க போகனும்!

  tm1

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழி..வருகைக்கும் ..கருத்துக்கும்..மீண்டும் வருக

   Delete
 2. இனிமேல் தான் பார்க்க வேண்டும்...

  நன்றி...

  ReplyDelete
 3. Padam nandragathaan ullathu.paarkkalaam.

  ReplyDelete