Friday, September 28, 2012

(கோரத்) தாண்டவம்தாண்டவம் படம் ஆரம்பித்தக் காலந்தொட்டே பல சர்ச்சைகளை கிளப்பியது.விமர்சனங்களில் அடிபட்டது.படம் ஆரம்பிக்கிற நேரத்தில் இது எதாவது உலகப்படத்தின் காப்பியாக இருக்குமோ என சினிமா ரசிகர்களால் கிசுகிசுக்கப்பட்டது.அதற்கும் காரணம் இருக்கிறது,இயக்குனர் விஜய் இதற்கு முன் செய்த படங்கள் சில ஆங்கிலப்படத்தின் தழுவலாகவும்,தெய்வத்திருமகள் வெளிநாட்டுப்பத்தின் அச்சு அசல் ரீ பிரிண்ட் ஆகவும் இருந்ததே இதற்கு  காரணம்.இயக்குனர் விஜய் வெளியே DVD டைரக்டர் என பெயர் வாங்கும் அளவுக்கு இந்த விசயத்தில் பிரபலம்.

இப்படி  பல விமரிசைகளில் அடிப்பட்ட விஜய் ஏற்கனவே பெற்ற பாடத்தால் ,இந்த முறை இந்த மாதிரி தவறினை செய்ய மாட்டார்,என சில சினிமா விரும்பிகளால் நம்பப்பட்டது.தாண்டவம் அவர் சொந்த தாண்டவமாகதான் இருக்கும்,இல்லையேல் எதேனும்கதையை தழுவி பிண்ணப்பட்டதாகவே இருக்கும் என பலரும் நம்பினர்.

ஆனால் இந்த முறை நடந்ததோ வேறு..நானா உக்காந்து கதை யோசிக்க வேண்டும்??நெவெர்..அப்படி ஒரு நிகழ்வு என் சரித்திரத்திலேயே நடந்து விடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்ட டைரக்டர் விஜய்,U TV  நிருவனருடன் சேர்ந்து  பொன்னுசாமி என்ற உதவி இயக்குனரின் கதையை திருடி இயக்கிவிட்டார்.திருடிய பிள்ளையாருக்கு சக்தி அதிகம் என்பதுபோல,திருடி எடுத்தால் விஜய் படத்திற்கு புது தெம்பு வந்து விடும் போலிருக்கிறது.

திருடிய கதையை தனதாக்க அவர் செய்த  முயற்சிகள் காமெடியானவை.வெளிநாட்டில் வாழும் ஒரு கண்தெரியாத மனிதரைப் பற்றியும் அவர்தம் சாகசங்கள் பற்றியும்  படித்தாராம்.அதில் மனதைப் பரிக்கொடுத்தாராம்.கதைப் பிண்ணினாராம்..இப்படியெல்லாம் கதை விட்டிருக்கிறார்.அதற்கு ஆதாரம் காட்ட அப்படி ஒரு ஆளை தேடி பிடித்து கூட்டி வந்து பேசவைத்திருக்கிறார்.


இப்படிதான் வாழ்க்கை கனவாக,கற்பனையின் உச்சமாக,லட்சியம் கொண்டு,ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியோடு நடிகர்களிடமும் ,இயக்குனர்களிடமும்,தயாரிப்பாளர்களிடமும்  நம்பி கதை சொல்லி ஏமாந்து போகும் உதவி இயக்குனர்கள் ஆயிரமாயிரம் பேர்.கனவை அடுத்தவனிடம் தொலைத்து காணாமல் போனவர்கள் லட்சம் பேர்.முதலாளி வர்க்கம்  பணத்தை வைத்து ஏழை இயக்குனர்களின் கற்பனையை கானல் நீராக்குகிறது.அவன் கற்பனையை தனக்கு காசாக்கி கொள்கிறது.கனவுத் தொழிற்சாலையில் யாருக்கும் தெரியாத தொழிலாளியாக பலரின்  கனவு தொலைந்து காணாமல் போகிறது.இல்லாதவர்களின் பேச்சு ஒரு போதும் எடுபடுவதில்லை.கற்பனை திருட்டை செய்துவிட்டு கர்வத்தோடு உட்க்கார்ந்து பேட்டி கொடுக்கும் கணவான்களை பார்த்து காரி உமிளும்படி எப்போதும் எதுவும் நடப்பதில்லை.அது திருடர்களுக்கு ஏதுவாகி விடுகிறது.

இந்தமுறை இந்நிகழ்வு சற்று வேகத்தோடு சென்று,திருடனின் பிடரியை பிடித்து உலுக்கி இருக்கிறது.சட்டம் உதவி இயக்குனரின் கதை என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்கிற தீர்ப்பு சொன்ன போதிலும்,உண்மைக்கு ஆதரவான குரல் உரக்க கேட்டிருக்கிறது இயக்குனர் சங்கத்தில்,கதை பிரச்சினை பற்றி எரிந்திருக்கிறது.புதிய அலைகள் என்கிற உதவி இயக்குனர்களின் ஆதரவோடு வெற்றி பெற்ற இயக்குனர் சங்க உறுப்பினர்கள் குழு தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வேண்டி தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக மனு கொடுத்திருக்கிறார்கள்.பொன்னுசாமிக்கு ஆதரவு வலுத்திருக்கிறது,உண்மைக்கு பின்னால் ஒரு கூட்டம் கூடி இருக்கிறது.நியாயம் வேண்டி 1000 உதவி இயக்குனர்கள் இயக்குனர் சங்கத்தை முற்றுகை இடப்போவதாவும்  அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அந்த அழுத்தம்  இயக்குனர் சங்க செயலாளர் அமீர் அவர்களையும் ராஜினாமா மனு செய்ய வைத்திருக்கிறது.

இந்நிகழ்வுகளால் ,இவ்வளவு நாளாக திரைமறைவாக,முதலாளிகளுக்கு மட்டும் சொம்படிக்கும் ஊடகங்களால் மறைக்கப்பட்ட இந்த செய்தி இப்போ வெடித்து வெளி உலகுக்கு தெரிய வந்திருக்கிறது.உதவி இயக்குனர்கள் தாண்டவமாடாமல் அமைதியாக கேட்ட வரை முதலாளிகளின் தாண்டவம் அதிகமாய் இருந்தது .இப்போ உதவி இயக்குனர்களின் உண்மைக்கு ஆதரவான கோரத் தாண்டவம் ஆரம்பமானவுடன் அவர்களின் நியாமான குரலும் வெளியே கேட்கிறது.முதலாளிவர்க்கம் கொஞ்சம் பயந்திருக்கிறது.


இப்போ நடந்த இந்த கற்பனை திருட்டு சம்பவம் இனி நடக்காமல் இருக்கவாவது இந்த நிகழ்வு ஒரு பாடமாக அமையட்டும்.


Widget byLabStrike


4 comments:

 1. தகவல்கள் தெரியாது...

  பதிவின் மூலம் தான் அறிந்து கொண்டேன்...

  மிக்க நன்றி சார்...

  ReplyDelete
 2. ///திருடிய கதையை தனதாக்க அவர் செய்த முயற்சிகள் காமெடியானவை.வெளிநாட்டில் வாழும் ஒரு கண்தெரியாத மனிதரைப் பற்றியும் அவர்தம் சாகசங்கள் பற்றியும் படித்தாராம்.அதில் மனதைப் பரிக்கொடுத்தாராம்.கதைப் பிண்ணினாராம்..இப்படியெல்லாம் கதை விட்டிருக்கிறார்.அதற்கு ஆதாரம் காட்ட அப்படி ஒரு ஆளை தேடி பிடித்து கூட்டி வந்து பேசவைத்திருக்கிறார்.////


  இதுல பாதிய கதைய யோசிக்கிறதுக்கு செலவளித்து இருக்கலாம்.. இந்த பொழைப்பு பொழைகிறத்துக்கு,

  ReplyDelete