லாரி
பேஜ்(Larry Page),சேர்ஜி பிரின்(Sergey Brin)-இந்தப் பெயர்களை சிலர்
கேள்விப்பட்டிருக்கலாம்,பலர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை.ஆனால்
இவர்கள் இன்றி இந்த உலகம் இப்போதெல்லாம் இயங்குவதே இல்லை.வரும்காலத்தில்
ஆக்சிஜன் இன்றியும் மனிதன் வாழக் கற்றுக்கொள்ளக் கூடும்.ஆனால் இவர்களின்
படைப்பின்றி வாய்ப்பே இல்லை என்கிற நிலைதான் இப்போது.உலகத்தின்
எல்லாப்பக்கங்களிலும் இவர்களின் பக்கங்கள் தான் பார்வையில்.இவனின்றி இந்த
உலகம் விழிப்பதில்லை,இயங்குவது இல்லை,உறங்குவதுமில்லை..அப்படியானால்
இவர்கள் யார்?கடவுளா??ஆமாம்..கடவுளாக கூட நினைக்கலாம்,இல்லாத கடவுள் நம்மை
இயக்குகிறான் என்று நம்பும்போது,இருந்து கொண்டு நம்மை இயக்கி
கொண்டிருப்பவர்களை கடவுள் என்று சொல்வதில் தவறில்லை.
1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ்(Larry Page) தன் சக மாணவ நண்பன் சேர்ஜி பிரின்னுடன் இணைந்து கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட படிப்பிற்கான ஆராச்சியில் இருக்கிறான்.அவனுக்கு அந்த சிந்தனை அப்போதுதான் உதயமாகிறது.
முதலில் லாரி பேஜ்(Larry Page) தன் படிப்பிற்கான ஆராய்ச்சியாக ஆய்ந்தவன்,பின் அதை ஏன் நாம் இன்னும் முன்னோக்கி கொண்டு செல்லக்கூடாது,அதை ஏன் அறிவியல் முன்னேற்றத்தில் இன்னும் ஆக்கப்பூர்வமாக,அனைவரும் அறிய,பயன்பட இன்னும் ஆழமாய் செய்யக்கூடாது என்று யோசித்தான்.அப்போது சேர்ஜி பிரின்(Sergey Brin)அவனுடன் இணைந்து கொண்டான்..இருவரும் சேர்ந்து உருவாக்கினார்கள் ஓர் உலகத்தை...உயிர் கொடுத்தார்கள்...பெயர் சூட்டினார்கள்..
கூகோல்.கொம் (googol.com) என்றார்கள்.கூகோல் என்றால் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்களை குறிக்கும் பெயராகும்.அந்தப்பெயர் சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் தயாராக இல்லை.
இந்நிலையில் நண்பர்கள் இருவரும் பெயர் தேடுதலில் தீவிரமாக இறங்கினர்.தவறுதலாக தட்டச்சு செய்ய அது கூகுள்(google )ஆனது.அது அவர்களுக்கு பிடித்துப்போக,அதுவே பின்னாளில் சரித்திரத்தின் சாதனை மிக்க சாகாப்த பெயரானது.
ஆரம்பத்தில் கார் கொட்டகையில் ஆரம்பித்த நிறுவனம் பின்னர் பார் முழுக்க பரவி உலகின் முன்னணி நிறுவனமானது.புகழைக் குவித்தது..பணத்தை அள்ளியது.ஆக்சிஜனுக்கு பதிலாய் மனிதனுக்கு அதுவே சுவாசமானது.நாமும் ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றத் தேடிக்கொண்டே இருக்கிறோம்,உருவாக்கியவன யாரென அறியாமல்..
இன்று அந்த நிறுவனத்துக்கு 14 ஆவது பிறந்த தினமாம்..வாழ்த்துக்கள்..

விளக்கங்கள் பலர் அறிய உதவும் சார்...
ReplyDeleteகூகுளாண்டவருக்கு வாழ்த்துக்கள்...
நன்றி...
நன்றி நண்பரே..
Deleteநீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் தளம் வருகிறேன்.
ReplyDeleteநல்ல பகிர்வு அண்ணா,நான் எழுதி வரும் இணாய்யம் பற்றிய தொடரில் ,கூகுளின் வரலாற்றையும் எழுத திட்டமிட்டுள்ளேன்..
நன்றி தம்பி...நல்லது எழுதுங்கள்..வாழ்த்துகள்
Delete