Tuesday, September 25, 2012

நெஞ்சுரம் கொண்ட திலகன்

 

திலகன் - இந்த நடிகனை அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறந்து விட முடியாது..அப்படி ஒரு முகபாவம்,அனல் கக்கும் பார்வை,வாழ்ந்துகாட்டும் நடிப்பு,நேர்மையான மனிதர் என்கிற ரீதியில் எல்லோரையும் கவர்ந்தவர்.திலகன் முகம்  என் நினைவுக்கு வரும்போதெல்லாம் 'சத்ரியனுக்கு சாவே இல்லன்னு சொன்னான்..என் காலடியில செத்துக்கிடக்கிறான் பார்" என்று எகத்தாளமாக அவர் பேசும் வசனம்தான் என்னில் நிழலாடும்.

சத்ரியன் படம் வந்த போது எனக்கு சிறுவயது..கதாநாயகனையே  தம் காலில் வீழ்த்தி விட்டானே இவன்..விஜயகாந்த் எப்போ எந்திரிச்சி அவன அடிப்பார் என்று எண்ணி படம் என்பதையும் மீறி அவரை உண்மையான வில்லனாக பார்க்க வைத்தது அவரின் அபரிமிதமான நடிப்பு.அன்று என் மூளையின் நினைவுகளில் நிஜ வில்லனாய் நீங்காமல் நிறைந்து பின்னாளில் ஹீரோவாக  என் மனதில் உயர்ந்தவர்தான் இந்த  திலகன்.

அப்புறம் ஒரு சில படங்களில் அவரின் நடிப்பை பார்த்து மெய்சிலிர்த்திருக்கிறேன்..மலையாள சினிமாக்களில் கலக்குபவர் என்று நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.திலகன்  2009 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது கூடுதல் செய்தி..

கேரளத்திலே சமீபத்தில் கமல்ஹாசனின் நடிப்பை பாராட்டி கமலுக்கு ஒரு விழா எடுக்கப்பட்டது.அதற்கு மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும்,கேரளாவிலே சிறந்த நடிகர்கள் இத்தனை பேர் இருக்கும் போது தமிழ்நாட்டு நடிகன் ஒருவனுக்கு பாராட்டு விழாவா,வரமாட்டோம் என்று புறக்கணித்தனர்.
ஆனால் ஒரு நடிகன் தைரியமாய் மேடை ஏறினான்..கமல் சிறந்த நடிகன்,அந்த நடிகனின் பாராட்டு விழாவுக்கு நான் செல்வேன் என்னை யாராலும் தடுக்க முடியாது என சீற்றமாய் பேசினான்.இதனால் மலையாள திரைப்பட சங்கம் அம்மா அந்த சினிமா புதல்வனை ஓரம் கட்டியது..அவனை ஒதுக்கியது.அதைப் பற்றி அவன் கவலை கொள்ள வில்லை..அந்த நெஞ்சுரம் கொண்ட நேர்மையாளன்தான் திலகன்.

அவரை ஒரு நடிகனாக மட்டுமல்லாமல் நல்ல மனிதாபிமானியாக,நேர்மறை சிந்தனையாளனாக,தைரியமான மனிதனாக,மொழி இனம் கடந்த பரந்த சிந்தனையாளனாக   பார்க்க வைத்தது அந்த நிகழ்வு.அவர் மீதான ஈர்ப்பு எனக்கு இன்னும் அதிகமானது.

அந்த நல்ல நடிகர் (மனிதர்)  இறந்தார் என்பது இந்திய சினிமாவுக்கு ஒரு பெரிய இழப்புதான்..அவர் ஆத்மா சாந்தியாகட்டும்.Widget byLabStrike


6 comments:

 1. ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம். அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக..அவர் ஆத்மா சாந்தியாகட்டும்

   Delete
 2. அவரின் இழப்பு திரையுலகில் ஈடு செய்ய முடியாது... அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோம்...

  ReplyDelete
 3. வணக்கம் படைப்பாளி சார்,நான் தமிழ்ச்செல்வன், மதுரை, தினசரி நாளிதழ் ஓன்றில் துணையாசிரியர். உங்கள் பதிவுகள் வாசிக்கிறேன், மிக அருமை . எளிமையான அழகுடன் வலைப்பூ உள்ளது. குறிப்பாக தொடர்புடைய பதிவுகள் எப்படி கொண்டுவந்தீர்கள் என்ற தகவலை சொல்ல முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பரே..மிக்க மகிழ்ச்சி..தொடர்புடைய பதிவுகள் என்று தாங்கள் குறிப்பிடுவது "சினிமா" சம்பந்தப்பட்ட பதிவுகளையா??

   Delete