Monday, September 24, 2012

நாட்டியப் பேரொளி பத்மினிபத்மினி  (ஜூன் 12, 1932 - செப்டம்பர் 24, 2006)
திருவனந்தபுரத்தில் அவதரித்த நாட்டிய உலகம்.நான்கு வயதில் நடனம் கற்று ,தன் நடன அசைவால்  மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று  தனது பத்தாவது வயதிலேயே "நாட்டியப் பேரொளி " யானவர்.குச்சிப்புடி, மோகினியாட்டம் என பல கலைகளில் வல்லவர்.பதினேழாவது வயதில் இந்தி சினிமாவில் நாயகியானவர்.நெருக்கமானவர்களால் பப்பிம்மா என்று செல்லமாக அழைக்கப் பட்டவர்.
லலிதா,பத்மினி,ராகினி சகோதரிகள் மூவருமே நாட்டியத்தில் புகழ் பெற்று விளங்கியதால் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர்.
கல்பனா(1950)என்ற இந்தி மொழிப் படத்தில் முதன் முதலில் முகம் காட்டிய  பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.
தமிழில் முதன் முதலில் வேதாள உலகம்  படத்தில் நாட்டியம் ஆடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த "மணமகள்" என்ற படத்தில் தமிழுக்கு நாயகியாக அறிமுகமானார்.அதன் பின் மூன்று ஆண்டுகளுக்கு பத்மினி இல்லாத படம் இல்லை என்கிற நிலை.
தமிழில் சிவாஜி, எம். ஜி. ஆர், ஜெமினி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.ராஜ்  கபூர், பிரேம்  நசிர், ராஜ்குமார் போன்ற இதர மொழி முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.சிவாஜியுடன் மட்டும் 59 படங்கள்.
தில்லானா மோகனாம்பாள் படம் பத்மினியின் நளினம்,நாட்டியம்,நடிப்பு என நடிகர் திலகத்துக்கே  போட்டியான பாத்திரமானது..பலராலும் பாராட்டப்பட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து  மொழிப்படங்களிலும்  நடித்தும் நாட்டியமாடியும் புகழின் உச்சியைத் தொட்டார்.
சிறந்த நடிகைக்கான விருதுகள் ,கலைமாமணி விருது,The Best Classical Dancer Award என விருதுகள்,பாராட்டுகளை பலவும் அள்ளிக்  குவித்தார். சோவியத் ஒன்றியம் பத்மினியின் அஞ்சல் தலையை வெளியிட்டு கௌரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
1977ல் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் குடியேறிய பத்மினி அங்கு நாட்டியப் பள்ளியொன்றை தோற்றுவித்தார்..வெளிநாட்டிலும் கலை வளர்த்தார்.  
பின்னாளில் ஒருநாள் கப்பல் வழியாக தன் உடமைகள் அனைத்தையும் அனுப்பிவிட்டு,விமானத்தின் வழியாக சென்னை வந்தார்  பத்மினி,உடமைகள் இங்கு வந்து சேர்ந்த போது அதை வாங்க அவர் இல்லை.மாரடைப்பு அவரை மரணத்தின் பிடியில் கொண்டு சென்றது.துள்ளியாடிய அவர் கால்கள் துவண்டு போயிருந்தன..அவர் நினைவுகள் மட்டும் நம் நெஞ்சில் என்றும் உயிர்ப்புடன் ஆடிக்கொண்டே இருக்கிறது.Widget byLabStrike


10 comments:

 1. நலந்தானா... - மறக்க முடியுமா...?

  கண்களும் நாட்டியம் ஆடுமே...!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பரே..நயம்,நளினம்,நடனம்..அவருக்கிணை அவரே

   Delete
 2. நடிகைக்குரிய அத்தனை தகுதியும் அமையப்பெற்றவர்.
  அவர் பற்றி கனடாவில் வாழும் எழுத்தாளர் முத்துலிங்கம் எழுதியதையும் படிக்கவும்.

  ''நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு (கட்டுரைகள்) http://amuttu.net/viewArticle/getArticle/72 ''

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அனைத்து தகுதியையும் தன்னகத்தே கொண்ட ஒரே நடிகை..

   Delete
 3. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 4. யாரு என்ன சொன்னாலும் ,பத்மினி அவர்களின் நடிப்பு ,நடனம்,அவர் அவர்தாம்.அந்த படத்தில்கூட வ்ய்ஜயன்திமலா உண்மையில் கோபதுடன்தாம் இர்ருப்பார் .பத்மினி சிருதுக்கொன்றிப்பார். வீரப்பா சபாஷ் சரியான போட்டி என்பார்.வாழ்க வளமுடன். கருப்பசாமி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே..மீண்டும் வருக

   Delete