Thursday, August 8, 2013

அறிமுகம் ஆயிரம் செய்த சினிமா சாதனையாளன்


ஸ்ரீதர் (1933 - அக்டோபர் 20, 2008) - தமிழ் சினிமாவின் இணையற்ற இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர்.இயக்கத்திலும்,வசனத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்த சினிமா மாமேதை.தமிழ் சினிமா மட்டுமல்லாது கன்னடம்,தெலுங்கு,ஹிந்தி என வேரூன்றி கிளை பரப்பி வெற்றி கண்டவர்.

வசனங்களால் நிறைந்த  சினிமாவை காட்சிகளாய் வளர்த்து விருட்சமாக்கியவர்.காட்சிகளிலும்,காமிராக் கோணங்களும் கதை சொல்ல ஆரம்பித்தது இவர் காலத்திற்கு பின்தான்.

ரவிச்சந்திரன், காஞ்சனா (காதலிக்க நேரமில்லை),ஜெயலலிதா,நிர்மலா, மூர்த்தி,ஸ்ரீகாந்த்  (வெண்ணிற ஆடை),முத்துராமன்,கல்யான் குமார்,குட்டி பத்மினி(நெஞ்சில் ஓர் ஆலயம்)போன்ற புகழ்பெற்ற சினிமா சாம்ராஜ்யங்களை உருவாக்கிய பெருமை ஸ்ரீதரையே சாரும்.


அதுவரை சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நாகேசை "நெஞ்சில் ஓர் ஆலயம்" படத்தின் மூலம்  மாபெரும் நடிகனாக்கிய மகானும் ஸ்ரீதர்தான்.

புகழ்பெற்ற பாடகர் ஏ.எம். ராஜாவை "கல்யாணப்பரிசு" , எஸ்.பி.பி யை "துடிக்கும் கரங்கள்" படத்தின் மூலம்  இசையமைபாளராக்கிய பெருமை இவருக்கே உண்டு.

நடிகை சுபாசினி,ஹிந்தியில் புகழ்பெற்ற நடன இயக்குனராக விளங்கும் சின்னி பிரகாஷ்(அழகே உன்னை ஆராதிக்கிறேன்),ஜெமினி கணேசன் மகள் ஜிஜி (நினைவெல்லாம் நித்யா) படங்களின் மூலம் அறிமுகம் செய்தவர்.

இவர் முகம் சரியில்லை என்று ஒதுக்கிய நடிகை பின்னாளில் ஹிந்தி சினிமாவை கலக்கிய  ஹேமாமாலினி.

ஏ.எம். ராஜா,எம்.எஸ்.வி போன்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய ஸ்ரீதர் "இளமை ஊஞ்சலாடுகிறது" படத்தின் மூலம் இளையராஜாவுடன்  இணைந்தார். அதன் பின் பகிரங்கமாக தான் ஒரு இளையராஜா ரசிகன் எனவும் அறிவித்தார்..இது அக்காலத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.அப்படி சொன்னவர் பிற்காலத்தில் நான் திரும்பவும் படம் செய்தால் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைய வேண்டுமென்றார்.இப்படி காலத்துக்கும்,சினிமா வளர்ச்சிக்கும்,மக்கள் ரசனைக்கும் ஏற்ப தன்னை மேம்படுத்திக் கொண்டவர்.

நடிகர் அர்ஜுன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் நடித்த படங்களிலேயே ஸ்ரீதர் இயக்கிய "குளிகால மேகங்கள்" தான் தனக்கு பிடித்த படமென்று சொன்னதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் கலை மேதையின் கடைசி காலத்தில் உதவியாளராக பணியாற்றியவர் தான் இயக்குனர் பி.வாசு.

தற்போது சினிமாவின் இணையற்ற நடிப்பு சிகரமாக விளங்கும் சீயான் விக்ரமை "தந்துவிட்டேன் என்னை" என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியதும் ஸ்ரீதர் தான்.

எண்ணிலடங்கா அறிமுகம் செய்து சினிமா சிறக்க உழைத்தவர்.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவர் பெருமையை..இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதில் சினிமாவும் சினிமா ரசிகனும் பெருமைப்பட்டே தீர வேண்டும்.


Widget byLabStrike


12 comments:

 1. எத்தனை முறை இவருடைய படங்கள் பார்த்திருப்பேன் என்று தெரியாது...

  ReplyDelete
 2. உங்களது ஓவியம் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களை நேரில் பார்ப்பதுபோல் அச்சு அசலாய் இருந்தது. வாழ்த்துக்கள்! அவர் ஒரு புதுமை இயக்குனர் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்கமுடியாது.

  ReplyDelete
 3. அருமையான இயக்குனர். படங்கள் தயாரிப்பில் பெரிய புரட்சிகள் செய்திருக்கிறார்.
  இவரை மாற்றியது ஒரு புத்தகம். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்ந்தாராம், அங்கு நிறைய வேலை இல்லை. அங்கு நல்ல நூலகம் இருந்திருக்கிறது.
  அதில் ஒரு புத்தகம் - படம் இயக்குவதில் என்னென்ன குறைகள் வரும், அதை எப்படி எதிர் கொள்வது என்பது - இதை அவர் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
  அவர் தயாரிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படம் - நெஞ்சில் ஓர் ஆலயம்.
  இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அய்யா..எனக்கு தெரியாத செய்திகளை அறியத் தந்தமைக்கும்,பதிவை பகிர்ந்தமைக்கும்..

   Delete
 4. நகராமல் இருந்த சினிமா காமிராவை நகர வைத்து பெருமை இவரையே சாரும். சொன்னது நீதானா பாடல் காட்சி இதற்கு ஒரு உதாரணம். ஒரு சின்ன அறை. அதற்குள்தான் எத்தனைவிதமான ஷாட்டுகள். இன்றும் அந்தக் காட்சியை பார்த்தால் உடல் சிலிர்க்கும். அவரது கற்பனை ஒட்டத்தை நினைத்து.

  ReplyDelete
  Replies
  1. உண்மையாக நண்பரே,உணர்வுபூர்வமான அவர் உழைப்பு திரையில் தெரிந்தது..

   Delete
 5. அவர் இயக்கிய அத்தனை படங்களும் அருமை.நெஞ்சில் ஓர் ஆலயம்,நெஞ்சம் மறப்பதில்லை ,நெஞ்சிருக்கும் வரை.அவளுக்கு என்று ஓர் மனம் இப்படி லிஸ்ட் பெரியது.முத்துராமன் கதாநயகன
  என்று நெஞ்சில் ஓர் ஆலயம் ,ஜாலி வெளிநாடு டூர் போல் சிவந்தமண் .அவர் ஒரு சினி-கலை பொக்கிஷம்.
  by DK.(D.Karuppasamy.)

  ReplyDelete
  Replies
  1. அவருக்கிணை அவர்தான் என்பதில் ஐயமில்லை..நன்றி நண்பரே..மீண்டும் வருக

   Delete
 6. ஸ்ரீதர் - இளையராஜா இணைந்து, 1978- ல், இளமை ஊஞ்சலாடுகிறது என்ற படத்தில் என்று நினவு.

  இந்த படத்தை நானும் என் உயிர் நண்பனும் மிட்லேன்ட் தியட்டரில் இரவு ஆட்டம் பார்த்தோம்; இருவரும் தனிக்கட்டைகள்.

  பிறகு, ராயப்பேட்டையில் உள்ள ஹமிதியா (போலீஸ் ஸ்டேஷன் எதிரில்) ஹோட்டலில் சாப்பிட்டு வீட்டு வீடு திரும்பினோம்.

  பழைய நினைவுகளை கிளறிய உங்களுக்கு..நன்றி.


  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பரே மாற்றிவிட்டேன்..இளமை ஊஞ்சலாடுகிறது "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" வருவதற்கு ஓராண்டு முன்பே வந்திருக்கிறது செய்தியை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி..மீண்டும் வாருங்கள்..

   Delete