Tuesday, September 17, 2013

சினிமாவை கலக்கிய கலகக்காரர்

எம்.ஆர்.ராதா (பெப்ரவரி 21, 1907 - செப்டம்பர் 17, 1979)- சீற்றமிகு  நடிப்பால் சினிமாவுக்கு ஏற்றம் தந்த உன்னத கலைஞன்.சினிமா நாடகம் என முற்போக்கு சிந்தனைகள் விதைத்த கலகக்காரன்.அறியாமையில் கிடந்த மக்களுக்கு தம் எண்ணங்களால் வெளிச்சம் தந்த  அஞ்சா வீரன்.

ஜெர்மன் போர்க்கப்பலான எம்டன் சென்னையில் குண்டுவீசிய அதே நாளில்  ஒரு ஒரு புரட்சிக் குழந்தை இம்மண்ணில் பிறந்தது.வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக வலம் வந்த மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன்(எம்.ஆர்.ராதா)ஆகிய அக்குழந்தை வருங்காலத்தில் தமிழ் சினிமா வரலாற்றின் சீர்திருத்த வெடிகுண்டானது.

 'உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்'என்று கம்யூனிச சித்தாந்தத்தை கையில் ஏந்திய அவர்,பின்னாளில் பெரியாரின் தீவிர தொண்டனாகி திராவிடர் கழக கொடியை காட்டி விட்டுதான் நாடகம் தொடங்க ஆரம்பித்தார்.

அவர் செய்த ரத்தக் கண்ணீர் என்கிற நாடகம் அந்நாளில் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கேற்றப்பட்டது.மக்களால் பெரிதும் ரசித்து பார்க்கப்பட்டது,விமர்சனங்களுக்கும் உள்ளானது.அன்றைய அரசியல்,கால சூழலுக்கேற்ப ஏற்ப வசனங்களை மாற்றி மாற்றி பேசி ராதா கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டிருந்தார்.நாடகம் வழியே சீர்திருத்தக் கருத்துகளை போதித்துக்கொண்டிருந்தார்.பின் அது திரைப்படமாகி தமிழ் சினிமா வரலாற்றில் மாபெரும் மைல் கல்லானது அனைவரும் அறிந்தது.

எம்.ஜி.ஆரை சுட்ட  வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது.ஏன் சுட்டீர்கள் என்று கேட்டதற்கு  'நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை... ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வருது?என தெனாவெட்டாக விளக்கம் தந்த தைரியசாலி அவர்.

திரையில் நிஜமாகவே வாழ்ந்து காட்டிய ராதா 118 படங்கள் நடித்தார்,1963-ம் ஆண்டில் மட்டும் 22 படங்கள் செய்த சாதனை நடிகரானார்.

''தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும்..அதற்கு லட்சியம் கொண்ட 300 பேர் கிடைத்தால் போதும்'' என்று சொல்லி தமிழின் மீதான தன பாசத்தையும்,நேசத்தையும் வெளிக்காட்டிய வேகம் வெறிகொண்ட உணர்வாளர் அவர்.

எம்.ஆர்.ராதா நினைவு நாள் இன்று..எம் நெஞ்சங்கள் எல்லாம் நீங்காமல் இருக்கிறார் என்றும்..


Widget byLabStrike


8 comments:

 1. குரல் மாற்றி அட்டகாசமாக கருத்துடன் பேசும் திறமை... அவருக்கு நிகர் அவரே...

  அவர் படங்களின் சில காட்சிகள் இன்றைக்கும் பொருந்தும்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பரே..அவர் பேசிய வசனங்கள் காலம் கடந்தும் உயிர் வாழ்பவை..அவர் நடிப்பு சினிமாவின் உயிப்பை உறுதி செய்பவை..

   Delete
 2. விரைவில் இந்த பதிவு சுடப்பட இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா..கிளம்பிட்டாங்கையா..கிளம்பிட்டாங்க..

   Delete
 3. இந்த பதிப்பு அருமை !!ஆனால் இது கானா பிரபா குரலில் ஆஸ்திரேலியா ரேடியோவில் கேட்ட நியாபகம். உண்மையா?

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே..நடிகவேள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை தாங்கள் சொல்லும் நண்பரும் வானொலியில் பேசியிருக்கலாம்.. இதனை நான் கேட்ட, படித்த, அறிந்த செய்தி நிகழ்வுகளில் இருந்து தொகுத்து நான் என் நடையில் எழுதி பகிர்ந்திருக்கிறேன்..மற்றபடி தாங்கள் சொல்லும் நபரின் குரலை நானறிந்தது இல்லை..

   Delete