Thursday, September 13, 2012

900 மாவது பதிவு - மிக்ஸ்டு மசாலா(காரசாரம்)

எப்போதும் எழுதும் பதிவுகளைப் போன்று அல்லாமல் கொஞ்சம் காரசாராமாக,இனிப்பும் சேர்த்து இயல்பாக ஏதேனும்  எழுத வேண்டுமென்று ஆசை கொண்டேன்..இனி ஒரு தொடர் பதிவாக சாதாரண விசயங்களையும்,சமூக அவலங்களையும் அலசும் நோக்கோடு "மிக்ஸ்டு  மசாலா" பகுதியை தொடங்குகிறேன்,தங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து!

 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
  
இனிப்பு:
இன்று நான் 900 மாவது பதிவை எழுதுகிறேன்..என் இடுகை என்கிற இம்சையைத் தாங்கி  படித்து,விமர்சித்து,பாராட்டி,சண்டையிட்டு வந்த அனைத்து அன்புத் தொல்லைகளுக்கும் இந்நாளில் நன்றி சொல்லக் கடமைபடுகின்றேன்.ஒவ்வொருவர் பெயராய் தனித்தனியாய் எழுதி நன்றி சொல்லவேண்டுமென்கிற ஆவல் என் இதயத்தில் உண்டு.யார் பெயரேனும் விடுப்பட்டுவிட்டால் அவர்கள் மனம் வருந்த வாய்ப்புண்டு..ஆகவே மொத்தமாய் சொல்லிகொள்கிறேன் ,என் பதிவை படித்து என்னை உற்சாகப்படுத்தும்,எனக்கு பதிவெழுத ஒத்தாசையாய் இருக்கும்   எம் உறவுகளே என்றுமே என் நெஞ்சில் உங்களுக்கோர் இடமுண்டு!

இன்னோர் இனிப்பான செய்தி கீழிருக்கும் ஓவியம் நான் வரைந்தது.எழுதிட்டு மட்டும் இருந்தா நான் ஓவியன் என்பது மறந்து போய்டும்ல..அதான்..

எனது ஓவியம் 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தித்திப்பு:

கூடங்குளம் பிரச்சினை ஆரம்பித்த காலம் தொட்டே நான் அணு உலைக்கு எதிரானவன்தான்..வீட்டில் எரியும் வெளிச்சத்தை விட சமூகத்தில் படரும் வெளிச்சம் அறியாமையை மாற்றும் என்று அறிந்திருந்தவன் நான்.ஆதாலலோ என்னவோ ,அணுஉலை ஆபத்தை,அறியாத மக்களிடம் புகட்டி சமூகத்தின் இருட்டகற்றிய மாமனிதன் உதயகுமார் மீது எனக்கு அளவற்ற அன்பும்,பாசமும்,மரியாதையும் எப்போதும் உண்டு.எவன் செத்தால் என்ன,என் வீட்டில் விளக்கெரிய வேண்டுமென்கிற அற்ப மனநிலையில்,அறியாமையில் சிலர் அவரை தூற்றினாலும்,அந்த மகத்தான மனிதனிடம் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பாசத்தையும் நான் சொல்ல வேண்டியதில்லை இந்த படம் சொல்லிவிடும்.தற்போது உள்ள  சோகமான சூழலிலும் என் நெஞ்சை நெகிழ்ச்சியடைய செய்து  தித்திப்பை உண்டாக்கியது இந்தப்படம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

காரம்:
 
இலங்கையில் ஈனப்பிறவியான ஓர் சிங்களன் தமிழக முதவராக இருக்க கூடிய ஒருவரை தரம்தாழ்த்தி,
கீழ்த்தரமான சிந்தனையோடு கேவலசித்திரம் போடுவானாம்,அதை அரசாங்க உதவியோடு அங்குள்ள கேவலமான பத்திரிக்கையும் பிரசுரிக்குமாம்.அதை தட்டிக்கேட்கவோ ,சிங்களனின் அராஜகப் போக்கை கண்டிக்கவோ வக்கற்ற இந்திய மத்திய ,மாநில அரசுகள் ,இந்தியாவில் நடக்கும் பிற்போக்குத்தனங்களை கேலிச்சித்திரமாக  வரைந்த கார்டூனிஸ்ட் அசிம் திரிவேதியை சட்ட விரோத வழக்கில் கைது செய்யுமாம்,விமர்சிக்குமாம்.நல்ல ஜனநாயகம்!

         அசிம் திரிவேதியின் "கேலிச்சித்திரம்" -----------------------------------------------------------------------------------------------------------------------------------

கசப்பு:
 
மூவரின் தூக்கு தண்டனையை எதிர்த்து,தன்னுயிரை துச்சமென மதித்து,மாவீரன் முத்துகுமரனின் வழித்தோன்றலாய்,உயிர் நீத்த வீரத் தமிழச்சி  செங்கொடி தமிழின உணர்வால்தானே  இறந்தாள்..இருளர் குல நலத்துக்காக அல்லவே.அப்படியிருக்க இறந்தப்பின் எல்லா ஊடகங்களிலும் அவள் தமிழச்சி ஆகாமல் இருளர் ஆனது  ஏனோத் தெரியவில்லை.(செத்துபோனப்பின்னாடி  கூட
community certificate  தேடுறானுங்கப்பா) அணுஉலையை எதிர்த்த கூடங்குளம் மக்கள் தமிழர் அல்லாமல் மீனவராகவும்,கிருத்துவராகவும் திரிக்கப்படும் சூட்சுமம் புரியவில்லை.தமிழர் பிரச்சினை மட்டும் இங்கே சாதியாகிறது.அதுவே தமிழினத்தை பிரித்தாள சதியாகிறது.


Widget byLabStrike


6 comments:

 1. 900௦ - பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்... சுவைகளுக்கேற்ற தகவல்கள்... ஓவியத்தைப் பற்றி நான் என்ன சொல்வது... கடவுள் கொடுத்த Gift... பழகும் குணமும்...

  மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. எல்லோரையும் பாராட்டும் நல்ல குணம்,மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை..உங்களிடம் இருக்கிறது ..மிக்க நன்றி சார்..

   Delete
 2. கார சாரம் காராமாகவே இருந்தது

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே..மீண்டும் வாருங்கள்

   Delete
 3. தங்கள் ஓவியம் அருமையாகவுள்ளது நண்பரே..

  தொடர்ந்து எழுதுங்கள்.

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே..மீண்டும் வாருங்கள்

   Delete