Wednesday, August 15, 2012

எது சுதந்திரம்?


எது சுதந்திரம்?
ஈழத்திலே எம்மினம்
சொல்லொண்ணா கொடுமையில்
சுழலும் போது
இறையான்மை என்ற பெயரில்
எம் வாய்களுக்கு பூட்டு போட்டாயே
அதுவா சுதந்திரம்?

எது சுதந்திரம்?
ஈழம் என்று சொல்லக்கூட
எமக்கு சுதந்திரமற்ற சூழலை
உருவாக்க
காலம் பார்த்து நின்றாயே
அதுவா சுதந்திரம்?

எது சுதந்திரம்?
வேற்றுமையில் ஒற்றுமை
என்று வேடிக்கை பேசிக்கொண்டு
அண்டை மாநிலத்தில்
தண்ணீர் வாங்கித் தரக்கூட
வழியில்லாத வக்கற்ற அரசியல் செய்கிறாயே
அதுவா சுதந்திரம்?

எது சுதந்திரம்?
தமிழகத்தை தாண்டிவிட்டால்
"மதராசி" என்று சொல்லி
மயிரினும் கீழாய் நினைக்கிறானே
வடநாட்டான்
அதுவா சுதந்திரம்?

எது சுதந்திரம்?
வெள்ளைக்காரன் இருந்தபோது
"இந்தியனாய்" இருந்தவனெல்லாம்
இந்தியனாய் ஆனபோது
சாதிக்குள்ளும்,மதத்துக்குள்ளும்
சமய வேறுபாட்டிலும் 
சாக்கடை ஆனானே
அதுவா சுதந்திரம்?


Widget byLabStrike


6 comments:

 1. சிந்திக்க வைக்கும் கேள்விகள்...
  நன்றி...(TM 1)

  ReplyDelete
 2. இந்தக் கவிதையை ஈழச்சி என்ற ஒரு புனைப்பெயரில் TSV Hari என்ற நான் வெளியிட்ட தேதி 5-5-2009.

  லிங்க் ஆதாரம் இதோ:

  http://rivr.sulekha.com/an-eelam-lullaby_76032_blog

  ஈழத்தில் ஒரு தாலாட்டு

  இமை திறவாமல்
  கனவுகள் காணாமல்
  விம்மாமல்
  விசும்பாமல்
  உறங்கு மகனே!

  உனக்கீழம் உண்டென
  ஊட்டப்பட்ட மனப்பால்
  வெறும் உமிழ்நீர்
  என உணராமலே உறங்கு

  உயிர் நீத்தோர் பட்டியலில்
  இன்னொரு எண்ணாக
  எண்ணற்ற ஈக்களும்
  எறும்புகளும்
  குருதி உறிஞ்சும்பொது
  அவற்றுடன் உன்பிணத்தை
  பினம்தின்னிக்க்கழுகள்
  உண்டாலும்
  வீரனுனை
  வீணர்கள்
  வெல்லவில்லை
  என்ற
  இறுமாப்புடன் உறங்கடா!

  இனி உனக்குப்பசியில்லை
  விக்கவைக்கும் தாகமில்லை
  சிந்திடக் கண்ணீரில்லை
  சுட்டெரிக்கும் வெய்யிலில்
  வற்ற வியர்வை இல்லை

  புதைக்க
  இனி இங்கு
  மண்ணிருந்தும்
  அதில் உனக்கு இடம் எதுவும்
  இல்லாதிருந்த போதும்
  அதன் தேவை உனக்கில்லை
  உன் உடல்தான்
  எதனுக்கோ
  தீநியாகவிருக்கதடா!

  உன் உடன்பிறப்புக்களின்
  உயிருக்கும் கற்புக்கும்
  விலைபேசும் கயவர்தம்
  சதிவலைகளில்
  சிக்குபவன் நீயல்ல
  என உணர்ந்து உறங்கடா!!

  பீய்த்து
  பிரிந்துவிட்ட
  பிஞ்சு வீரனே!

  மனையையும்
  மண்ணினையும்
  புல்லுருவிக்கள் சிலர்
  கைப்பற்றிவிட்டாலும்
  உன் சுதந்திர தாகத்தை
  தணிக்காமல் விட்டதனால்
  மாண்டும் மீண்டு வரும்
  திறமைகொண்ட செல்வனே!

  சிறைகளில் உன் விழிகள்
  நோண்டப்படவில்லை
  விடுபட்ட உன் சுவாசம்
  வஞ்சிக்கப்பட்டாலும்
  வன்கொடுமை அனுபவித்தும்
  வாட்டமடையாமல்
  விரிந்த பிரபஞ்சமெங்கும்
  வான்புகழாய்
  செந்தமிழாய்
  பரவிவிட்டதென்ற
  மகிழ்ச்சியுடன் உறங்கு மகனே!

  இதனை ஒரு சில தமிழ் உணர்வுள்ள பத்திரிக்கையாளர்கள் படித்து, கொதித்து, கதறி, வாய்விட்டு அழுதனர்!

  ஆம் அழுதனர்.

  அதுவும் 18-05-2009 அன்று!

  ஒரு சிலப் பத்திரிக்கையாளர்கள் இதனை தமிழ்ப் பத்திரிக்கை பலவற்றுக்கு அனுப்பினர்.

  ஆனால் அது அச்சேறவில்லை.

  இனியும் ஏறாது.

  அடுத்த பகுதியில் தொடரும்.

  ReplyDelete
 3. பகுதி இரண்டு

  ஒரு சில துரோகிகளின் சில்லறையும், சில்லறை புத்தியும்தான் அயராது உழைக்கின்றனவே!

  தேதியின் முக்கியத்துவம் பலருக்கு நினைவிருக்கும்.

  இக்கவிதை எழுதிய பின்பு – இரண்டு மாதம் இரண்டு நாள் கழித்து நான் சுதந்திர ஈழக் கொடி – யாழில் 8 வருடம் கழித்து ஜுலை மாதம் 7 தேதிக்குள் பறக்க, நான் வழி செய்வேன் எனச் சிலரிடம் சபதமிட்டேன்.

  நான் நம்பும் இறைவன் – அதனை நிறைவேற்றுவான் என்ற அசைக்க இயலாத நம்பிக்கையை எனக்களித்திருக்கிறான்.

  எதற்கு அத்தனை ஆண்டுகள் என்ற கேள்விகள் பல மனங்களில் எழலாம்.

  ஈழம் என்ற நாடு அமையவேண்டுமெனில் – அந்த நாட்டின், அரசியல், பொருளாதாரம், நாணயக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை, இறக்குமதி ஏற்றுமதி வரிக்கொள்கைகள், வியாபார விதிமுறை மற்றும் உலகம் பரவலாக ஏற்கும் விற்பனை வரி மற்றும் சட்ட முறைகள், மது, புகையிலை போன்ற அபாய ஆனால் அவசியப் பொருட்கள் கைய்யாளப்பட வேண்டிய சட்டதிட்டங்கள், மருத்துவக் கொள்கைகள், இதர சட்ட ஒழுங்கு வரையறைகள், சிற தண்டனைச் சட்டங்கள், பயங்கரக் குற்றங்களுக்கான தண்டனைபற்றிய விதிமுறைகள், பல நாடுகளின் தொழிலதிபர்களின் ஆதரவுடனான முதலீட்டுத் திட்டங்கள், அப்படித் ஈழத்தில் தயாராகும் பொருட்களின் உள் நாட்டுப் பயன்பாடு, அவற்றின் ஏற்றுமதிக் கொள்கை – குறிப்பாக அப்பொருட்களுக்கான பஞ்சம் ஏற்படும்போதான நிலைப்பாடுகள், கல்விக்கான மொழிக்கொள்கைகள், பொதுவான – பல் வேறு நாடுகளில் பணிகிடைக்கவல்ல கல்விமுறைத் திட்டங்கள் பற்றிய ஆய்வு, சட்டம் ஒழுங்கு நிலை நாட்ட இயற்றப்பட வேண்டிய காவல் படைக்கான விதிமுறைகள், இப்படி பல்வேறு விஷயங்கள் ஆராயப்பட்டு, பல்வேறு நாடுகளுடன் கலந்துரையாடல் நடத்தல் அவசியம்.

  முன்பு இந்தியா – சோவியத் யூனியனால் திரிகோண மலையை அமெரிக்க ஆதிக்கத்திலிருந்து கைப்பற்றுவதற்காக மட்டும் தான் ஈழத்தில் நேரடியாக ஈடுபட்டது என்பதை எத்தனைத் தமிழர்கள் அறிவர்?

  சோவியத் யூனியனின் தலையெழுத்தை மேற்கத்திய நாடுகள் கோர்பச்சேவ் பதவிப் பறிப்பு மூலம் நிகழ்த்தியபோது, அந்தத் தேவை முடிவடைந்ததும், போஃபர் பீரங்கி பேர ஊழலால் தனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த லாபம், தான் ஒரு சோவியத் மற்றும் பாகிஸ்தானின் உளவாளி என்ற திடுக்கிடும் தகவலை மறைக்க சோனியாவே இராஜீவ் கொலைக்கான சதித் திட்டம் தீட்டி அதனைப் புலிகள் மூலம் மூளைச் சலவை செய்து நிறைவேற்றி, அதையே 1991ல் அரசியலுக்காகப் பயன்படுத்தி, 2009ல், அதையே மீண்டும் தமிழர்களை வேட்டையாடிப் பயன்படுத்தி, அந்த இரகசியத்தை மறைக்க கொடுங்கோலன் இராஜபக்ஸவுக்கு விண்டு அளித்து, அதை வைத்து அவன் மூன்று முறை தேர்தலில் வெற்றிபெற வழிவகுத்த நிகழ்வுக் கோர்வையை உணர்ந்தால் - மீண்டும் ஈழத்திற்கான தேவைகளை தமிழர்கள் உணர்வது ஒரு புறமிருக்க, அதனை உலகம் ஏற்க அவசியங்கள் உள்ளனவா, அவை புனையப்பட முடியுமா, இயன்றால் அது யாரால் முடியும் என்பதை எல்லாம் பகுத்துணர்ந்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்த ஒரு அமைப்பு உருவாகி – அது ஜன நாயகரீதியில் செயல்படக்கூடிய ஒரு அமைப்பு என உலகம் நம்ப – அன்றைய நிலையைல் 8 ஆண்டுகள் ஆகும் எனக் கணக்கிட்டேன்.

  இன்றும் அந்த நிலை அவ்வாறேன் இருக்கிறது.

  ஜூலை 7 2017 என நான் குறித்த தேதி இன்னும் மாறவில்லை!

  இதை எல்லாம் பித்தன் ஹரி இன்று சொல்லவில்லை!

  பகுதி 3ஐக் காண்க

  ReplyDelete
 4. பகுதி 3 இத்தொடரில் நிறைவு

  ஆங்கிலத்தில் ஹரி எனும் கிறுக்கனின் கிருக்கல் வாசகங்களின் 2 வருட ஆதாரக் கோர்வை இதோ:

  http://tsvhari.com/template_article.asp?id=230

  http://tsvhari.com/template_article.asp?id=343

  http://tsvhari.com/template_article.asp?id=358

  http://tsvhari.com/template_article.asp?id=378

  http://rivr.sulekha.com/lay-her-among-the-lotuses_486760_blog

  http://rivr.sulekha.com/a-caddish-kaddish-for-injured-souls_519417_blog

  ஈழக் கொடி பட்டொளிவீசிப் பறக்கும்.

  பறக்கவைப்பான் இந்தச் சாணக்கியன்!

  அது எனது ஆசான் பாரதி கண்ட விடுதலை என முழங்கும் சொர்க்க பூமியாக விளங்க இறைவன் அருள் புரிவான்!

  சந்தேகமில்லை!

  வாழ்க ஈழம்!

  வாழ்க தமிழ்!
  வீழ்க கொடுங்கோலன் இராஜபக்ஸ!

  ஒழிக சூனியக்காரி சோனியாவின் சூழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. உணர்வு மிக்க உங்கள் கட்டுரை ,கவிதையை படித்தேன்...மிகவும் தெளிவாக எழுதி இருக்கிறீர்கள்..உங்களைப் போன்றோர் வேண்டும் ஈழம் காண..நம் கனவு ஒருபோதும் பொய்த்திடாது..ஈழம் வெல்லும்..அதை காலம் சொல்லும்..

   Delete