Friday, August 10, 2012

அகிரா குரோசவா -உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-5)


1977 இல் திரையிடப்பட்ட Star Wars ஹாலிவுட் படம் பற்றி அறியாதவர் யாரும் இருக்க முடியாது, இன்றளவும் இந்தப் படத்திற்கு நிகராக எந்த ஒரு பிரமாண்ட படத்தையும் கூற இயலாது. அப்படிப்பட்ட படத்தை இயக்கிய இயக்குனர் George Lucas , அகிரா குரோசவா  என்னும் இயக்குனரின் "The Hidden Fortress" என்ற படமே Star Wars படம் இயக்க தனக்கு உந்துதலாக இருந்ததாக கருத்துரைத்துள்ளார்.


இப்படிப்பட்ட சிறந்த இயக்குனரால் ஏன் நல்ல படங்கள் தயாரிக்க முடியவில்லை என்று ஏங்கி நின்ற வேலையில்தான் அந்த மாபெரும் சந்திப்பு நிகழ்ந்தது. Lucas அகிராவோடு  இணைந்து  படம் இயக்க விரும்பும் எண்ணத்தை வெளியிட அகிராவும் சம்மதித்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அகிராவின் ஹாலிவுட் திரைப்படக்கனவை சிதைத்த அதே நிறுவனமான 20th Century Fox நிறுவனமே இப்போது அவர் இயக்கவிருக்கும் படத்திற்கு முதலீடு செய்தது. 
Kagemusha என்று பெயரிடப்பட்டு படம் தயாரிக்க துவங்கப்பட்டது. 1979 இல் துவங்கிய படம் ஒரு ஆண்டுக்கு மேலாக சென்றது, அதற்கு காரணம் அதில் நடித்த நடிகர் எனலாம்.. இயக்குனரின் விருப்பத்திற்கு  மாறாக நடித்து பின் அந்த நடிகரை மாற்றி வேறு ஒரு சிறந்த நடிகரை வைத்து படம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.1980 இல் படம் டோக்கியோவில் திரையிடப்பட்டு  மாபெரும் வெற்றியை ஈட்டியது. Canes Film Festival இல் இப்படத்திற்கு விருதும் கிடைத்தது.

இப்படத்தினை தொடர்ந்து மீண்டும் Ran என்ற காப்பியப்படம் இயக்க அகிரா விருப்பம் கொண்டார், இப்படத்தின் கதை ஷேக்ஸ்பியர் இன் King Lear கதையை தழுவியதாக இருந்தது. சரித்திரப்படம்  என்பதால் இப்படத்திற்கு ஆகும் செலவு ஜப்பான் முதலீட்டாளர்களால் மட்டுமே கொடுக்க இயலாது என்பதால் அயல்நாட்டு முதலீட்டாளர்கள் தேவைப்பட்டனர்.இச்சூழலில் French தயாரிப்பாளர் Serge Silberman என்பவர் முன்வந்தார்.மேலும் சில  முதலீட்டாளர்களை  தேடி படம் தயாரிக்க ஓராண்டு தேவைப்பட்டு 1983 இல் படம் இயக்கப்பட்டது.
இந்த முறையும் படம் நினைத்த தருவாயில் படத்தை முடிக்க இயலவில்லை, காரணம்  அக்காலக்கட்டத்தில் அகிராவின் மனைவி Yoko உடல் நிலை பாதித்து  மரணித்துப்போனார்.இந்த சூழல்  மாறி படம் முடிக்கப்பட்டு 1985 இன் மத்தியில் திரையிடப்பட்டது.
ஜப்பானில் பெரிய அளவில் Ran படம் ஓடாவிட்டாலும் அயல் நாடுகளில் பெரும் வெற்றியை தக்க வைத்துகொண்டது .பரிசுகள் பெறுவதற்காக அகிரா ஐரோப்பா,அமேரிக்கா என்று பறந்து கொண்டு இருந்தார். அந்த ஆண்டின் சிறந்த இயக்குனராக ஜப்பான் அகிராவை அறிவித்தது கூடுதல் செய்தி. இப்படம் அயல்நாட்டுப் பட வரிசையில் ஆஸ்கர் விருதையும் வாங்கியது.


பல இயக்குனர்களிடம் உங்கள் படங்களில்  சிறந்த படம் எது என்று கேட்டால் அதற்கு பெருமையாக அவர்கள் எனது அடுத்த படம் என்று கூறுவதை கேட்டிருக்கிறோம். அது அகிராவிடம் இருந்து மற்றவர்கள் எடுத்துக்கொண்ட வாக்கியம் என பலருக்கு தெரிந்திருக்க  வாய்ப்பில்லை. அகிரா தான் இயக்கியப்  படங்கள் எதையுமே சிறந்த படமாக நினைத்தது இல்லை,இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டுமென்று வாழ்ந்தவர்.இந்த படைப்பு பசியே  இவரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது எனலாம்.அகிரா அடுத்தப்படம் இயக்க ஆவல் கொண்டார்.பல ஆண்டுகளாக பல படங்கள் இயக்கினாலும் அவை அனைத்தும் பல கதைகள் சம்பவங்களிலிருந்தே  இயக்கியது ஆனால் இப்பொழுது அவர் இயக்கவிருக்கும் படம் முற்றிலும் அவரது கனவுகளால் உருவான கற்பனைகதையாக இருக்கவேண்டுமென்று விரும்பினார். இப்படத்திற்கு Dreams என்றே பெயரும் வைத்தார். எப்பொழுதும்போல் அகிராவின் எண்ணத்திற்கு ஏற்ற முதலீட்டளர்கள் ஜப்பானில் இல்லாததால் Warner Bros நிறுவனத்தை Steven Spielsberg அகிராவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். முழு இயக்கத்திற்கு பிறகு Canes இல் திரையிடப்பட்டது.
 
அதன் பின் இயக்குனர் அகிரா நாகசாகி குண்டு வெடிப்பு பற்றி படம் இயக்க Richard Gere என்னும் அமெரிக்க நடிகர் முதன் முதலில் அகிரா படத்தில் நடித்தார். அப்படம் அமெரிக்க  மக்கள் மத்தியில்  பல சர்ச்சையை உருவாக்கியது. சற்றும் அதைப்பற்றி கவலைக்கொள்ளாத அகிரா தன் அடுத்த படத்திற்கான பணியில் பரபரப்பானார்.Madadayo என்று பெயரிடப்பட்ட படம் ஜேர்மன் ப்ரோப்பிச்சொர் இன் சுயசரிதை சார்ந்த கதையாகும்.

 அதன் பின் அவர் The Sea is Watching என்ற படத்திற்கும் After the Rain என்ற படத்திற்கு திரைக்கதை மட்டும் அமைத்து கொடுத்தார். After the Rain படத்திற்கு கதை அமைப்பு செய்து கொடுக்கும் நேரத்தில் தவறி கீழே விழுந்த அகிராவுக்கு முதுகு எலும்பும்  நரம்பும் பாதித்ததால் தள்ளுவண்டியிலேயே தனது கடைசி காலத்தை நகர்த்த வேண்டியதாயிற்று.இந்நிலையில் இயல்பாக நடமாட முடியாத அகிராவுக்கு  நடை தளர்ந்தாலும் மனது தளரவில்லை,தனது இறப்பு படம் இயக்கம் பொழுதே போக வேண்டும் அதுவரை தான் இயக்கத்தை நிறுத்தப்போவதில்லை என்று உறுதியோடு இருந்தார். உறுதியோடு இருந்தாலும் உடல் ஒத்துழைப்பு நல்காகதால்  படம் பார்ப்பது இசை கேட்பது என்று தனது இறுதி நாட்களை கழித்தார் அகிரா. 
இப்படி உலக சினிமாவை உயர்த்திய  அந்த ஒப்பற்ற  இயக்குனரின் மீது காதல் கொண்டு   பக்க வாதம் பற்றவே 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6  ஆம் நாள் உயிர்த்துறந்தார்.

அடுத்து உங்களை சந்திக்க இருப்பவர் ஆல்பிரட் ஹிட்ச்காக் ...  


Widget byLabStrike


2 comments:

  1. படத்துடன் விளக்கம் அருமை...
    அறிந்து கொண்டேன்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)

    ReplyDelete