பாலிஸ்டர் வாங்குமிடத்தில்
பல்லில்லாத கதராடை காந்தி
பணமாய் சிரிக்கிறார்!
கோட்டு சூட்டு வாங்குகிறோம்
கோவணம் கட்டிய
காந்தியை கொடுத்து!
எளிமையான காந்தி
பணக்காரர்களின் பாக்கெட்டை
நிரப்பி சிரித்துக்கொண்டு!
கோவணம் கட்டியவன்
கைகளில் காந்தி இருப்பதில்லை
காந்தி இல்லாததால்
அவனும் சிரிப்பதில்லை!
உண்மையை கவிதையாக வடித்தமைக்கு நன்றி சார் ! வாழ்த்துக்கள் !
ReplyDeleteரொம்ப நன்றி நண்பரே
Deleteபறக்க வாருங்கள் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html
ReplyDeleteசமூக அக்கறையுள்ள பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!