Friday, July 27, 2012

அகிரா குரோசவா -உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-4)

 
சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பெரும்பாலான படங்கள் வெற்றி அடைந்ததால் toho என்பவர் அகிரவோடு இணைந்து  பணம் முதலீடு செய்து Kurosawa என்னும் நிறுவனத்தை நிறுவி தன்னையும்  துணை இயக்குனராக அகிராவோடு இணைத்துக்கொண்டார்.
இந்நிறுவனத்தின் முதல் படமான The Bad Sleep Well -ல் 25 நிமிட திருமண காட்சி இடம்பெற்றிருந்தது.அது அகிராவின் திரைக்கதை அமைக்கும் திறனை அறியும் வகையிலும்  மேலும் அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது. இந்தப்  படம் சாதாரண வெற்றியையே பெற்றது இருந்தும் அடுத்து வந்த Yojimbo படம் மாபெரும் வெற்றி பெற்ற  நிலையில் அகிராவின் முதல் படமான Sanjuro-வை தழுவி  எடுக்கப்பட்டது. அடுத்தடுத்து அகிரா இயக்கியப்  படங்களும் வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டே  இருந்தது. 
 
 
 1966 Toho வுடனான ஒபந்தம் முடிவுக்கு வந்த நிலையில் அகிரா வெளிநாடுகளில் உள்ள தயாரிப்பாளர்களிடம்  பணி ஆற்ற தொடங்கினார்.அவ்வாறு அவர் இயக்கிய முதல்படம்தான்  Runaway Train.இதன் மற்றொரு சிறப்பு இப்படமே அகிரா இயக்கிய முதல் வண்ணப்படமாகும். 
ஆனால் இப்படம் தயாரிக்க சரியான பருவ காலம் இல்லாததால் ஒரு ஆண்டு தள்ளிவைத்தார்கள்.பின்பு முழுவதுமாக அந்தப்பட தயாரிப்பை நிறுத்திவிட்டனர். (அதே படத்தை  20 ஆண்டுகள் கழித்து Andrei Konchalovsky என்னும் இயக்குனர் தயாரித்து வெளியிட்டார்.)
இப்படி அயல்நாட்டில் அவர் இயக்கிய முதல்படமே நின்றுபோனதால் மனம் நொந்துபோன அகிரா "20th Fox Century" நிறுவனத்தின் படமான "Tora! Tora! Tora!" படத்தில் ஒப்பந்தமானார். இங்கும் விதி தன்  வேலையை காட்டியது.
இந்தப்படத்தின் கதை ஜப்பான் மீது அமெரிக்காவின் தாக்குதல் சம்மந்தப்பட்டது. தனது முழு உழைப்பையும் கொடுத்து படத்தை முடிக்கும் தருவாயில்  இப்படத்தின் நிறுவனம் தேவை இல்லாத புகார் கூறி அகிராவை அப்படத்திலிருந்து விலக்கி அவமானப்படுத்தியது.அப்பொழுதுதான் மற்றொரு செய்தியும் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது,முன்பு அவர் இயக்கிய பட வருவாயையும் அவரோடு  இணைந்து பணியாற்றிய சிலர் கையாடல் செய்த விவரம் அறிந்து நொந்து போனார்.இப்படி விரக்கதியின் உச்சத்தில்  நொடிந்து போன அகிரா இனி படம் இயக்க போவதில்லை என்ற முடிவுக்கே போனார்.
 
 
துயரத்தை கண்டு சோர்ந்து போவதும் பின்பு நிலைமையை உணர்ந்து சுதாரித்துக்கொல்வதும் கொள்வதும் வெற்றிபெற்றவர்களின் சூத்திரம் என்றால் மிகையாகாது. அந்த சூத்திரத்தை அகிராவும் கையாண்டார்.   Keisuke Kinoshita,   Masaki Kobayashi மற்றும்  Kon Ichikawa என்ற புகழ் பெற்ற இயக்குனர்களோடு இணைந்து Club of the Four Knights என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் ஒவ்வொரு இயக்குனரும் தனித்தனி  படம் இயக்குவதே,ஆனால் நடந்ததோ வேறு அனைவரும் அகிரவோடு இணைந்து தங்களது முதல் படமான Dora-Heita வை உருவாக்கினர்.இப்படத்தை Dodesukaden என்பவர் ஆகிராவுக்கு தயாரிக்க அனுமதித்தார். இந்த படமே அகிராவின் முதல் வண்ணப்படம் என்ற சிறப்பையும்  பெற்றது.
சில தோல்விகளை சந்தித்த அகிரா மனம் தளராமல் சுறுசுறுப்பாக குறைந்த செலவில் விரைந்து படத்தினை உருவாக்கி முடித்தார். இப்படத்தில் காட்டப்பட்ட  வனக்காட்சி அமைப்பு, அகிராவின் முந்தைய படங்களை தூக்கி  சாப்பிடும்  வகையில்  அமைந்து இருந்தது  குறிபிடத்தக்க  விஷயம்.
இப்படம் 1970 ஆம் ஆண்டு ஜப்பானில் திரையிடப்பட்டது. பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இயக்குனரின் காட்சி அமைப்பு பெரிதாக பேசப்பட்டது. அந்தப்படம் அந்நிறுவனத்தை பொறுத்தமட்டில் தோல்விப்படமாக,நிலைமையை சமாளிக்க முடியாத  அகிரா அந்த நிறுவனத்தை இழந்தார். 

பல கனவுகளோடு தாம் உருவாக்கிய நிறுவனத்தை இழந்ததால் அகிரா  மனஉளைச்சலுக்கு ஆளானார். 1971 ஆம் ஆண்டு தன் கழுத்து பகுதியையும் கை நாடி பகுதியும் அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால் அந்த மாபெரும் படைப்பாளியின் இழப்பை இந்த இயற்கை ஏற்க மறுத்து காப்பாற்றியது. அதன் பின் 1973 ஆம் ஆண்டு சோவித் நாட்டின் நிறுவனமான Mosfilm அகிராவை நாடியது. Vladamir Arsenyev இன் வாழ்க்கை வரலாறை இயக்க சொல்லி கேட்க அவரும் ஒப்புக்கொண்டார். Dersu Uzala என்ற படம் சோவித் இல் படமாக்கப்பட்டு  1975 இல் திரையிடப்பட்டு  மாபெரும் வெற்றியை  சுவைத்தது. பின்பு  Moscow International Film Festival's தங்க விருதும் Academy Award for Best Foreign Language Film விருதையும் அகிராவுக்கு பெற்றுத்தந்து அவருக்கு நிகர் அவர்தான் வேறு எவருமில்லை என உலக அரங்கில் உயர்த்தி உன்னத இயக்குனனாய் காட்டியது.

அடுத்த வாரமும் வருவார் அகிரா...
(வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் )


Widget byLabStrike


2 comments:

  1. நல்ல தொடர் சார் ! அறிந்து கொண்டேன்.
    மிக்க நன்றி...
    (த.ம. 1)

    ReplyDelete