Friday, July 20, 2012

அகிரா குரோசவா -உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-3)


ஒரு வழியாக போர் முடிவுக்கு வந்த நிலையில் ஜப்பானிய சுதந்திரம் தலை தூக்கியது பல தடைகள் விளக்கப்பட்டது,அதன் விளைவாக அகிரா சென்சார் என்று ஒதுக்கப்பட்ட பல விஷயங்களை தனது படங்களில் புகுத்துவதற்கு ஏதுவாக இருந்தது. அதன் அடிப்படையில் போர்க்காலத்தில் நடந்த சில முக்கியமான தருணங்களை நினைவுக்கொள்ள வைக்கும் விதமாக தயாரிக்கப்பட்ட படமே "No Regrets for Our Youth".
இதனை தொடர்ந்து "One Wonderful Sunday" என்ற படம் இயக்கினார்,இப்படமும் போர் காலத்திற்கு பின்பு அங்கு வாழும் இருவரின் காதல் கதையை பற்றியதாகும். இதுவரையில் அமெரிக்க கோட்பாட்டின்படி தொகுக்கப்பட்ட கதைகள் மாற்றி மாற்றி எழுதப்பட்டது, இதிலிருந்து சிறிது விலகி "Drunken Angel" என்னும் படத்தை   தனது முழு கற்பனையால் உருவாக்கினார். இந்தப்படம் அந்த வருடத்திற்கான சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது சிறப்பம்சம்.
தனது சுதந்திரத்தை பெருக்கிகொள்வதற்காக அகிரா,இணை தயாரிப்பாளர் மற்றும் சினிமாத்துறை நண்பர்களோடு இணைந்து Film Art Association  என்னும் நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக "The Quiet Duel" படம் தயாரிக்கப்பட்டு படமும் பெரும் வெற்றியை கண்டது. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல விதங்களில் மன மாற்றம் கொடுத்த படம் என்றால் அது "Stray Dog:" ஆகும், இப்படமே இந்நிறுவனத்தின் இரண்டாவது படமாகும். 
அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக பல படங்கள் இயக்கினார். 1950 இல் இயக்கிய Rashomon இன்னும் பல ரசிகர் பட்டாளத்தை அகிராவிற்கு வாரிக்குவித்தது.அவரின் அறிவின் ஆழத்தை அகிலத்துக்கு காட்டியது.
அகிராவின்  அடுத்தபடமான  "The Idiot " நான்கரை மணிநேரம் படமாக்கப்பட்டது.பின்பு அதிகநேரமானமையால் கதையை சுருக்கி 166 நிமிடத்திற்கு கொண்டு வந்தனர். இதனால் படம் சொல்ல வந்த விசயத்தை சரியாக மக்களுக்கு கொண்டு சேர்க்கவில்லை என்பது அகிராவின் பெரிய வருத்தமாகும்.
இந்த காலகட்டத்தில்தான் அகிராவின் காதுகளில் தேன் பாய்ச்சியது அந்த செய்தி.ஆம்.. அகிரா இயக்கிய "Rashomon", Venice திரைப்பட  விழாவில் பங்கு கொண்டது மட்டுமல்லாமல் அந்த விழாவின் உயர் விருதான தங்க சிங்க விருதையும் தட்டிப் பறித்தது.இந்த விருதால் உலகமுழுக்க உள்ள தயாரிப்பாளர்களின் ஒட்டுமொத்த பார்வை அகிராவை நோக்கின.
இவ்விருதின் வெற்றி  Radio -Keith Orpheum என்னும் நிறுவனம் Rashomon படத்தை அமெரிக்காவில் திரை இட ஒப்பந்தம் பெறுமளவுக்கு உச்சத்தை தொட்டது.இந்த படமே அமெரிக்காவில் ஜப்பான் மொழியில் வெளியிட்ட இரண்டாவது படமாகும்.இப்படம் வசூலில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு  வாரிக்குவித்தது கூடுதல் செய்தி.
இந்தப்பட வெற்றிக்கு பின் பல ஜப்பானிய இயக்குனர்கள் தங்களது படங்களை வெளிநாடுகளில் திரையிட துணிந்தனர். பல படங்கள் எடுத்து வெற்றி கண்ட அகிரா தான் முதலில் பணியாற்றிய நிறுவனத்துடன் இணைந்து  Seven Samurai என்ற படத்தை இயக்கினார்.இப்படம் ஜப்பான் சினிமா வரலாற்றில் அன்றைய காலக்கட்டத்தில் அதிகப்பணம் செலவு செய்து தயாரித்தப் படமாகும். அதிகப்படியான பண செலவு மற்றும் அகிராவின் உடல் நிலை சரியில்லாத காரணங்களால் நீண்ட நாட்களுக்கு பின்பே படம் திரையிடப்பட்டது. 
அந்நாளில் அணுஆயுத சோதனை நடத்தியதன் விளைவாக கதிர்வீச்சு கொண்ட மழை பொழிந்தது, இந்த பிரச்சனையையே கருவாக கொண்டு Record of a Living Being என்ற படத்தினை இயக்கினார்.ஆனால் அந்தப்படத்தை அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இன்று மனநல ஆய்வாளர்களும்,மருத்துவர்களும்,முற்போக்கு சிந்தனை கொண்ட  இயக்குனர்களும்,மக்களும்  அகிராவின் தொலைநோக்கு பார்வையும் உலக அழிவை தடுக்க அவர்  எடுத்து கொண்ட முயற்சியையும் எண்ணி வியக்கின்றனர்.
அந்தக் காலகட்டங்களில் இயக்குனர்களின் கனவு அல்லது சவால் என்றால் அது ஷேக்ஸ்பியரின்  கதையை படமாக்குவதே. இந்த கனவு அகிராவையும் விட்டுவைக்கவில்லை.ஷேக்ஸ்பியர் கதையை படமாக்கியபோது ஷேக்ஸ்பியர் ஆர்வலர்களை தவிர மற்ற பார்வையாளர்களை  படம் கவரவில்லை,இதனால்  படம் தோல்வி என்றே கூறலாம். 
சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பெரும்பாலான படங்கள் வெற்றி அடைந்ததால் toho என்பவர் அகிரவோடு இணைந்து பணமுதலீடு செய்து Kurosawa என்னும் நிறுவனத்தை நிறுவி தன்னை துணை இயக்குனராக அகிராவோடு இணைத்துக்கொண்டார். 
அகிரா புகழ் பரவும்....
 
(அடுத்த  வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் )


Widget byLabStrike


2 comments:

  1. நிறைய தெரிந்து கொண்டேன்...
    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
    பகிர்வுக்கு நன்றி...(த.ம. 1)

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete