Friday, June 15, 2012

சத்யஜித் ரே-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-3)


அச்சுக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ரே சற்று சினிமா பக்கம் தலை அசைக்க நேரமும் வந்தது, இரண்டாம் உலக போர் முடிந்த தருவாயில் ஆங்கிலேயர் மட்டுமே படம் எடுத்து வந்த சூழல் மாற bansi chandra gupta வுடன் சேர்ந்து சினிமா சங்கம் ஒன்றை நிறுவினார். இந்த நிறுவனம் சார்பாக வெளியிட்ட முதல் படம் "battleship potemkin". அதன் பின் சினிமா சம்பந்த  செய்திகளை, சினிமா  புத்தகங்களிலும், நாளிதழ்களிலும் தொடர்ந்து எழுதவும் ஆரம்பித்தார். (பின்னாளில் அவர் எழுத்துக்கள் அனைத்தும்  "our film, their films" என்று தொகுப்பாக வெளிவந்ததும் குறிப்பிடதக்கது.)
அந்தக் காலக்கட்டங்களில்  திரைக்கதை அமைப்பதிலும் தனது ஈடுபாட்டை பெருக்கிகொண்டார். வித்தியாசமான கதை அல்லது நாவல் ஒன்றின் கதை படமாக்க படும் தருவாயில் இவரும் அந்த படத்தின் கதையை வைத்து திரைக்கதை அமைப்பார் பின்பு படம் வெளியானதும் தனது திரைக்கதை அமைப்போடு ஒப்பிட்டு பார்த்து  கொள்வார். 
இதே போன்று திரைக்கதை அமைக்கப்பட்ட கதை தான் தனது நண்பர் ஹரிசதன் தாஸ் குப்தா எழுதிய 'தாகூரின் காரே பைரே', இந்த  நூலை திரைக்கதை அமைத்த ரே  35 ஆண்டுகள்  கழித்து படமாக்கினார்.

காலம் உருண்டோட ஒரு நாள் 'jean renoir' என்னும் french திரைப்பட இயக்குனர் கொல்கத்தா வந்திருப்பதை அறிந்த ரே அவரை சென்று தரிசிக்க, ரெனோயர் தான் தயாரிக்க இருக்கும் படம் சமந்தமாக பல இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதை அறிந்தார்.அவரோடு  செல்லும் வாய்ப்பையும் தட்டிகொண்டார் . ரெனோயர் ரே விடம் இருந்த ஆர்வத்தை புரிந்து கொண்டு படம் எடுக்க ஆர்வம் உள்ளவரா நீங்கள் என்று வினவ மறுநொடியே தான் கதை அமைத்துள்ள 'pather panchali' கதையை கூற தொடங்கினார். 

ஆசை கொண்ட ரே வால் கதையை கூற முடிந்ததே தவிர தான் திருமண ஒப்பந்தத்தால் வேறு எதுவும் செய்ய முடியாதவராக இருந்தார். சில காலம் கழித்து மீண்டும் ரெனோயர் கொல்கத்தா வந்து சேர்ந்தார், ரே வின் நண்பர்கள் புடை சூழ ரெனோயர் ஒரு படம் தயாரிக்க தொடங்கினார், ரே வின் பங்கு அங்கு இல்லாமல் போனதற்கு காரணம் அவர் வேலை செய்து வந்த விளம்பர நிறுவனம். ரே வை சில காலம் லண்டன் இல் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து. ரே இந்த வாய்ப்பை  தனக்கு சாதகமாக்கி பல படங்களை கண்டு படம் தயாரிக்கும் யுக்திகளை கற்றுகொண்டார். 


தன் லண்டன் பயணத்தை பற்றியும் தான் ரசித்த 'Bicycle Thieves' படத்தை பற்றியும் "our film, their films" என்ற நூலில் குறிப்பிட ரே மறக்கவில்லை. இயற்கையான கதை அமைப்போடு எந்த வித ஆடம்பர போக்கும்  இல்லாமல்  படம் தயாரித்த விதத்தை பார்த்த ரே 'pather panchali' படத்தில் அழகு சாதனம் ஏதும் பயன் படுத்தாமல் எளிமையாக படம் எடுக்க முழு தீர்மானம் கொண்டவராய்  

இந்திய நகரை நோக்கி கடல் வழியாக தனது பயணத்தை தொடங்கினார். இந்தியா வந்த ரே பல ஆர்வமுள்ள இளைஞர் பட்டாளத்தை தான் தயாரிக்கவிருக்கும்  படத்திற்காக இணைத்து கொண்டார். பின்னர் 'pather panchali' கதையின் எழுத்தாளரிடம் சென்று தான் இந்த கதையினை படமாக இயக்க விரும்புவதாகவும் ,அதற்காக தகுந்த ஒப்பந்தம் தருமாறு வேண்டி நிற்க, ரே வின் பண்பு,உள்ளம், யாசிக்கும் முறை கண்டு வாய் வார்த்தையாகவே அந்த எழுத்தாளர் சம்மதம் தெரிவித்தார். 


உதவியாளர்கள், எழுத்தாளரிடம் இருந்து தகுந்த உத்தரவு பெற்றிருந்தாலும் சரியான முதலீடு இல்லாமல் தவித்தார் ரே. தான் மேற்கொண்ட முயற்சியில் சற்றும் நழுவாமல்,பின்வாங்காமல் தொடர்ந்து முயற்சித்து வந்தார். அக்கால கட்டங்களில் படபிடிப்பு  ஸ்டூடியோக்களில்  மட்டுமே நடந்து வந்தது . அதுவும் குறிப்பாக மழை பொழிவது போன்ற காட்சிகள் முற்றிலும்  ஸ்டூடியோ அரங்கங்களில்  மட்டுமே எடுக்கப்பட்டு வந்தது. ஆனால்  ரே சற்று வித்யாசமாக அனைத்து  காட்சிகளையும்   ஸ்டூடியோ அல்லாமல் வேற்று இடங்களில் எடுக்க முன் வந்தார். 

நண்பர்களிடம் இருந்தும், காப்பீடு தொகை மற்றும்  பல இடங்களில் இருந்தும் கடனாக,அன்பளிப்பாக பணம் பெற்று 1952 இல்  தனது கனவை நனவாக்கினார் ரே. இந்த படத்தில் குறிப்பிட்ட  சிலரை தவிர மீதம் உள்ளவர்கள் எவருமே  திரைப்பட துறை சாராதவர்கள் என்பது சுவாரஸ்யமான விஷயமாகும். 
சத்யஜித் ரே படம் மிளிரும்...
(அடுத்த  வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் )Widget byLabStrike


No comments:

Post a Comment