கொடியை விட்டு பிரித்தெடுத்தபோதும்
நாங்கள் கூப்பாடு போடவில்லை!
ஊசிவைத்து குத்தி கோர்த்த போதும்
எங்கள் உறுதி குலையவில்லை!
நூலால் நெருக்கி எம் கழுத்தை இறுக்கிய போதும்
நாங்கள் கதறி அழுததில்லை!
தலையில் வைத்து கொண்டாடிய போதும்
நாங்கள் தலைக்கனம் கொள்ளவில்லை!
காலில் போட்டு கசக்கிய போதும்
நாங்கள் கவலைக் கொண்டதில்லை!
சாமிக்கு அருகாமையில் சமர்ப்பனமாயிருக்கிறோம்
சாவுக்கு அருகாமையில் சங்கமிக்கிறோம்
உங்கள் வாழ்வில் மணம் வீசிக்கொண்டிருக்கிறோம்
மரணத்திலும் மனமாறாதிருக்கிறோம்
மகிழ்ச்சி குறையாமல்,முக மலர்ச்சியாய்!
இப்படிக்கு,
மலர்கள்..
ஆஹா ... அருமை வரிகள் சார் ! பல மனித மனங்களும் மலர்கள் போல் ஆகி விட்டால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteமிக்க நன்றி ..தங்களைப் போன்ற நல்லுள்ளம் நண்பராய் கிடைத்ததில் மகிழ்கிறேன்!
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete