Friday, April 6, 2012

கிரிப்பித்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-2)ஊர் ஊராக சென்று பல நாடகங்கள் நடித்தும் கதை எழுதியும் அசத்திய கிரிப்பித் திரைப்படத் துறையில் கால்பதித்தார்.தனது எழுத்தினை ஏற்காத biograph நிறுவனம் மாறாக Rescued from an eagle's nest என்ற படத்தில் நடிக்க வாய்பளித்து வரம் பாலித்தது.newyork biograph studio என்கிற அந்நிறுவனமே hollywood இல் முதன் முதலில் படம் தயாரித்த பெருமையும் பெற்று அந்நாளில் வீறுநடை போட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய இயக்குனர் wallace mccutcheon நோய்வாய் பட அவரது மகன் wallace mccutcheon junior அந்த பொறுப்பை ஏற்றார் ஆனால்அவரால் மேற்கொண்ட பொறுப்பை சரியாக செய்ய முடியாமல் போகவே அந்த பொறுப்பு கிரிப்பித்திடம் வந்து சேருகிறது.ஆகவே 1909 களில் நடிப்பை விடுத்து படம் தயாரிப்பதிலும்,இயக்குவதிலும் தனது முழு கவனத்தை செலுத்தலானார்.இந்த பொறுப்புணர்ச்சியை தன்னில் வைத்துக் கொண்டு அவர் இயக்கிய முதல் படம் the adventure of dollie . அடுத்து வந்த 3 ஆண்டுகளுக்கு இந்நிறுவனம் தாயரிக்கும் அனைத்து படங்களையும் மேற்பார்வையாளராக (supervisor) இருந்து கவனிப்பதோடு, அதிக பொருட்செலவில் தயாராகும் படங்களை தானே இயக்கவும் செய்தார். அவர் தயாரித்து முதலீடு செய்த முதல் படம் judith of bethulia.

இந்த கால கட்டத்தில் 450 படங்கள் தயாரானது அனைத்தும் நகைச்சுவையோடு சேர்ந்த கதை அமைந்த படங்களாகும்.

சினிமாவின் மீது தீரா காதல் கொண்ட அவர் அதுவரை இருந்த ஒரு ரீல்,ரெண்டு ரீல் சினிமாவை கடந்து அடுத்தக்கட்டத்திற்கு சினிமாவை எடுத்து செல்ல உவகை கொண்டு உறுதி பூண்டார்.அதன் மேல் நம்பிக்கை இல்லாத studio மேல் அதிகாரிகளை எதிர்த்து 4 ரீல் கொண்ட படங்கள் உருவாக்க உத்தரவும் பெற்று படங்களை இயக்க துணிந்தார். இப்படங்கள் முன்பு எடுத்த படங்களை காட்டிலும் இரண்டு மடங்கு பெரிய படங்களாகும்.

இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் அதிக பண செலவில் உருவான காரணத்தால் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறி mutual film corporation நிறுவனத்தோடு சேரும் நிலை உருவானது.அந்நிறுவனத்தோடு இணைந்து triangle film corporation என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

biograph நிறுவனத்தில் இருந்து கிரிப்பித் வெளியேறியபோது அங்கு இருந்த முக்கிய நடிகர்,நடிகைகள் மற்றும் முக்கிய பங்கு வகித்த அனைத்து ஊழியர்களும் அவரோடு இணைந்து வெளியேறினார்கள்.அனைவர் மத்தியிலும் அவ்வளவு நம்பிக்கையை விதைத்து வைத்திருந்தார் அந்த சினிமா இலக்கணம்.

இக்காலகட்டங்களில் தான் தனது இயல்பான கதை அமைப்பை விடுத்து நாவல் கதைகளில் நாட்டம் செலுத்தி இயக்கவும் ஆரம்பித்தார். அப்படி எடுக்கப்பட்ட படம்தான் அந்நாளில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட படமும் ,அமெரிக்க சினிமா வரலாறில் மிக முக்கியமான சரித்திர படமுமான "birth of nation (1915)" . இப்படத்தில் அதிகப்படியான கதாபாத்திரங்கள்,அருகாமை,தூரக்காட்சிகள் என ஒரே காட்சியில் இரண்டு பிரிவுகள் என்று பல யுக்திகளை கையாண்டார்..கலக்கினார்.

இந்த மாதிரி புதுமையான யுக்திகள் அனைத்தும் வெவ்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளில் உருவான வெவ்வேறு படங்களில் அமைந்திருந்தாலும் கிரிப்பித் கு இது புது அனுபவத்தையும்,அலாதி சந்தோசத்தையும் தந்தது. "birth of nation " இந்த படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு அணைத்து அம்சங்களும் இன வெறி காட்சிகளும் அந்நாளிலேயே அப்படத்தின் மூலம் கண்முன் காட்டப்பட்டது.அந்தப் சரித்திரப் படம் சமூகத்தை சீர்தூக்கி பார்த்தது. வசூலை அள்ளியது.உலகத் திரைப்பட வரலாற்றில் இதுவரை வெற்றி பெற்ற படங்களில் முதலாவதாக "birth of nation " இன்னும் பார்க்கப்படுவதே கிரிபித் சினிமாவில் செய்த சாதனைக்கு சான்று.அதோடு மட்டுமல்லாமல் அதற்குப்பின் ஆங்காங்கே இன,நிற வேற்றுமைக்கு எதிராக போராட்டங்கள் முளைத்தன.அந்த மனிதன்,அந்த சினிமா சமூகத்தில் உண்டாக்கிய தாக்கம் அப்படி பட்டது.இதிகாச படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக எடுக்க தொடங்கிய கிரிப்பித்துக்கு வெற்றி மேல் வெற்றியும் பாராட்டுகளும் குவிந்தததே தவிர பண வருவாய் குறைந்தே இருந்தது. இதற்காக artcraft, first national நிறுவனங்களை நாடி அலைந்த கிரிப்பித் united artist என்னும் நிறுவனத்தை சாப்ளினோடு இனைந்து உருவாக்கினார்.
கிரிப்பித் சினிமாவை சிகரத்தில் வைப்பார்..

(அடுத்த  வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் )


முந்தைய பதிவைப் படிக்க..


கிரிப்பித்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-1)Widget byLabStrike


No comments:

Post a Comment