Saturday, March 3, 2012

தமிழச்சி மாரில் பால் குடித்து!



முட்கள்  எல்லாம்  இவளை

முடக்கிட முடியாது


மலர்தானே என்றெண்ணி

கசக்கிட முயலாதே  !


பூத்துக்குலுங்கும் ரோஜாவை

இவள் பார்த்து வளர்ந்தவள்தான்!


கற்கள் நிறைந்த பூமியிலும் காலூன்றி



முட்கள் நிறைந்த செடியிலும்

முகம் மலர்வதுதான்  ரோஜா!

இவள் மட்டுமென்ன..

எத்தனை இடர் வந்தபோதும்

எழுந்து நிற்பவள்


பாரதி சொன்னதால் மட்டும்

இவள் புதுமைப் பெண்ணாகி விடவில்லை!


முறத்தால் புலி விரட்டி

வீர கருசுமந்த எம் தமிழச்சி

மாரில் பால் குடித்து புரட்சிப் பெண்ணானவள்!



Widget byLabStrike


No comments:

Post a Comment