Friday, March 2, 2012

சாப்ளின்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-4)கீ ஸ்டோன் நிறுவனத்தில் சாப்ளின் ஒரு வருட அக்ரீமென்ட் போட்டு 150 டாலர் சம்பளம் வாங்கி முதல் படமாக making a film இல் பிரஸ் ரிபோர்ட்டராக நடித்தார்.அந்தப் படத்தில் போட்டிருந்த உடை அவருக்கு பிடித்தமானதாக இருந்தது.இருந்தாலும் அதற்கு அடுத்த படத்தில் அவர் அணிந்த உடைதான் சாப்ளின் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் அந்த ட்ரேட் மார்க் (கோமாளி) கெட் அப் உடையாக பின்னாளில் மாறிப்போனது.ஆனால் அந்த படம் வெளிவரும் முன்பே auto races in venice வெளிவந்து விட்டது.

சாப்ளினுக்கு அடுத்த ஆண்டு வாய்ப்பு தேடி வந்தது எஸ்சனே கம்பெனி வழியாக.வாரம் 1200 டாலர் சம்பளமாகவும்,பத்தாயிரம் டாலர் போனஸாகவும் கொடுத்து சாப்ளினை புக் பண்ணியது எஸ்சனே. இந்த நிறுவனத்தில்தான் தனது பழைய படங்களைக்காட்டிலும் ஆரோக்கியமான சினிமா வாழ்வை சாப்ளின் தொடர்ந்தார்.

new job என்ற படமே எஸ்சனே நிறுவனத்தில் சாப்ளினுக்கு முதல் படம்.

night out படத்திற்குப்பின் வரும் படங்களில் சாப்ளின் தன் சொந்த வசனங்களை பயன்படுத்தலானார் .the bank -இந்தப் படத்தின் மூலமாக உலகப் புகழ் பெற்ற நடிகை ஒல்கா எட்னா பரிதியன்ஸ் சாப்ளினுடன் நடித்து,  அறிமுகமாகிறார்.

champion - பாக்சிங் சட்டவிரோதமாக கூறப்பட்டு பல இடங்களில் தடை செய்யப்படவே அதனை வைத்து பண்ணப்பட்ட படம்.இந்தப் படத்திற்குப் பின் தன் வழக்கமான கிறுக்குத்தனங்களை விட்டு வேறு பாணியில் ஒரு மையமான கருத்தை வைத்து படம் செய்ய ஆரம்பிக்கிறார்..tramp - கிராமவாசிப்பெண்ணை, திருடர்களிடமிருந்து மீட்டு காப்பாற்றும் கதை..இந்த படத்தில்தான் classic fade out என்ற டெக்னிக் சாப்ளின் படத்தில் முதன்முறையாகப் பயன்படுத்தப்படுகிறது.

his regeneration - கௌரவத் தோற்றத்தில் சாப்ளின் தோன்றிய படம்.

Shanghaied - இந்தப்படத்தில் ஹோமோசெக்ஸ் பற்றிய  காட்சி அமைக்கப்பட்டதால் அந்நாளில் பரபரப்பாக பேசப்பட்டது.எஸ்சனே நிறுவனத்தின் அக்ரீமென்ட் காலம் முடியவே போட்டி போட்டு வந்து புக் பண்ணியது mutual film நிறுவனம்,வருடத்திற்கு ஆறு லட்சத்து எழுபது ஆயிரம் டாலர் சம்பளமும் கொடுத்து உலகிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சாப்ளினை உருமாற்றியது.அந்த  நிறுவனம்தான் தாமஸ் ஆல்வா எடிசன் காமெராவை சாப்ளின் படத்தில் முதலாக உபயோகிக்க ஆரம்பித்தது.

இதன் பின் சாப்ளின் படங்களை மட்டுமே தயாரிக்கும் நோக்கம் கொண்டு the lone star corporation என்ற பெயரில் தனி நிறுவனம் உதயமாகி சாப்ளினுக்கு, வாரத்துக்கு பத்தாயிரம் டாலரும்,ஒரு லட்சத்து ஐம்பது டாலர் போனஸாகவும் கொட்டிக்கொடுத்து உலக மகா கலைஞனை ஒப்பந்தம் செய்கிறது..

இந்த நிறுவனம்தான் நவீன கேமெரா மூலம் ஒரு ஷாட்டுக்கு இரண்டு நெகட்டிவ் என்கிற பாணியை சாப்ளின் படங்களில் முதன் முதலில் பயன்படுத்தி ,long ,close ,lighting ,short angle போன்ற நவீன யுக்திகளை பயிர் செய்கிறது.

அதுநாள்வரை சாப்ளின் படங்களில் காலத்தைக் காட்ட today ,next day ,evening ,morning என்று கார்டு போட்டு விளக்க வேண்டிய அவசியம் இருக்க,அதற்குப்பின் நவீன காமராவின் உதவியால் ,வெளிச்சத்தையும் ,சூழலையும் வைத்தே எந்த காலம்,நேரம்,சூழல் என்பதை பார்வையாளர்கள் புரிந்துக்கொள்ளலாயினர்.இந்த நிறுவனத்தில் தன் வழக்கமான ஆடைகளை விட்டு சாப்ளின் பல்மருத்துவ உதவியாளர்,தீயணைப்புத்துறை,வெயிட்டர் என விதவிதமான பாத்திரங்களில் அதற்கேற்ற உடையில் பிரகாசிக்கலானார்.தான் சிறு வயதில் கற்ற ஸ்கேட்டிங் ,பாடல்,ஆடல் போன்றவற்றையும் தன் படங்களில் ஆங்காங்கே சாப்ளின் பயன்படுத்தினார்.

A Woman ,Masquereder,New Job போன்ற படங்களில் பெண் வேடத்திலும் பிச்சு உதறி இருக்கிறார் சாப்ளின்.The Face on the bar room ,shoulder arms ,limelight போன்ற படங்களில் ப்ளாஷ் பேக் சொல்வது மாதிரி கதை அமைப்புகளை கையாண்டார்..திரையுலகை கலக்கினார்.

easy street - என்றப படம் சாப்ளின் லண்டனில் வாழ்ந்த ஈஸ்ட் ஸ்ட்ரீட் வாழ்வை நினைவுப்படுத்துவதாக,பிரதிபலிப்பதாக அமைக்கப்பட்டது.

cure - இந்தப் படத்தின் சிறப்பம்சம், இதில் சாப்ளின் தன் வழக்கமான பாணியல்லாமல், சிறப்பாக நடனம் ஆடியிருப்பார்..ஆட்டத்தில் ஆடியன்சை மிரட்டியிருப்பார்..adventurer - the lone star corporation நிறுவனத்தில் சாப்ளினின் கடைசிப் படம்.நெடுநாட்களுக்குப்பின் எடுக்கப்பட்டது.இதில் மாடியில் ஐஸ் கிரீம் சாப்பிடும் சாப்ளின் கீழே நிற்கும் பெண் மீது ஐஸ் கிரீமை கொட்டி விடுவார்..அந்தக் காட்சியை படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தன் மேல் கொட்டி விட்டதாக எண்ணி சில்லிடும் அளவுக்கு சிரத்தை மேற்கொண்டு எடுத்திருப்பார் ,உலக சினிமாவின் சிகரத்தை தொட்ட அந்த சினிமா சிற்பி!

 சாப்ளின் சகாப்தம் தொடரும்..


(அடுத்த  வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் )


முந்தைய பதிவைப் படிக்க..சாப்ளின்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-3)Widget byLabStrike


No comments:

Post a Comment