Tuesday, February 14, 2012

காதலர் தினத்தில் மட்டும்!






துணை இருக்கும் வரைதான்

சிறக்கும் செருப்பு!


காதலில்

செருப்பாய் இருப்பதே சிறப்பு!

------- happy valentines day ------- 

நீ  தொட்டு விட்டுப்போனதற்கே

தொலைந்துப் போயிருக்கிறேன் பலமுறை

இன்று முத்தமிட்டு வேறு போய்விட்டாய்

மூர்ச்சையாகி எங்கே விழப்போகிறேனோ!

------- happy valentines day ------- 

தொட்டுப்போனாய்

கட்டியணைத்தாய்

முத்தமிட்டாய்

கடைசி வரை நீ சொல்லித்தரவே

இல்லை காதலிக்கமட்டும் !

------- happy valentines day ------- 

காதலுக்கு உன்னிடத்தில்

விலாசம் விசாரிக்கிறேன்

எழுதாத வார்த்தையால்

பேசாத மொழியால்

கண்ணசைவில் சொல்லிப்போகிறாய்

கதவடைக்கும் மந்திரத்தை!

------- happy valentines day ------- 

என்னை முத்தமிடு

இன்று காதலர் தினமென்றாய்!

ஒவ்வொரு நாளும்

முத்தமிடுகிறேன் உன்னை

இன்றே அறிவித்து விடு

இனி வருவதெல்லாம் காதலர் ஆண்டு!

------- happy valentines day ------- 

உனக்கு பரிசளித்த

ரோஜா மீது பச்சக் என்று

வைக்கிறாய் முத்தம்!

பரிசில்  தந்தவனை

பசியோடு தவிக்கவிட்டு!

------- happy valentines day ------- 

காதலர் தினத்தில் மட்டும்

என்னை கடற்கரைக்கு அழைக்காதே!

எங்கிருந்தோ வருகிறவர்களெல்லாம் (ராம் சேனா)

அன்றைய நாள் மட்டும்

உனக்கு அண்ணனாகிப் போகிறார்கள்

அவனிடத்தில் யார் அடி வாங்குவது!

அனைவர்க்கும் என் காதலர் தின வாழ்த்துகள்! 


Widget byLabStrike


No comments:

Post a Comment