Monday, January 30, 2012

உன்னால் மட்டும்தானடி முடிகிறது!



உன்னால் மட்டும்தானடி

முடிகிறது-என்னை

செல்லமாய் ஆக்கவும்

பொறுக்கியாய் பார்க்கவும்!

உன்னால் மட்டும்தானடி

முடிகிறது-என்னை

நல்லவனாய் ஆக்கவும்

கெட்டவனாய் பார்க்கவும்!

உன்னால் மட்டும்தானடி

முடிகிறது-என்னை

மடியில் வைத்து கொஞ்சவும்

மாரில் ஏறி மிதிக்கவும்!

உன்னால் மட்டும்தானடி

முடிகிறது-என்னை

காமனாய் ஆக்கவும்

கடவுளாய் பார்க்கவும்!

உன்னால் மட்டும்தானடி

முடிகிறது-என்னை

மிருகமாக்கி மகிழவும்

மனிதனாக்கி வெறுக்கவும்!

உன்னால் மட்டும்தானடி

முடிகிறது-என்னை

சுவாசம் அற்று இறுக்கவும்

ஆக்சிஜன் அற்று வாழ்விக்கவும்!


Widget byLabStrike


No comments:

Post a Comment