Friday, January 13, 2012

இருட்டு!



இருட்டு...

பயத்தின் நீட்சி

திகிலின் தகிப்பு

விலைமகளின் வேதனை

கொலை குற்றங்களின் குடி!

இருட்டு...

கொலைகாரனின் கத்தி

கொசுக்களின் வன்மம்

கற்பழிப்பின் வெறி

திருடனின் பகல்!

இருட்டு...

இல்லாதவனின் கனவு

இருப்பவனின் ஆட்டம்

குழந்தைகளின் விழிப்பு

குடிகாரனின் கோமாளித்தனம்!

இருட்டு...

கவிஞனின் காதலி

கலைஞனின் ஞானோதயம்

படைப்புகளின் உதயம்

படைப்பாளிகளின் உலகம்!

இருட்டு...

இனிமையின் உச்சம்

முத்தங்களின் புதையல்

கூடலின் சொர்க்கம்

காமத்தின் கற்பகிரகம்!

கருப்பு சிதறி இருட்டில்

எத்தனை வண்ணமானது பாரீர்!


Widget byLabStrike


No comments:

Post a Comment