Monday, January 9, 2012

நெடுநாட்களாய் நீர் பாயாத நிலம்!



உதிர்த்து தொலைக்கிறாய்

அந்த வார்த்தையை

நொடிக்கொருமுறை என்னிடத்தில் !

----o0o ----

உன்னைப்போலொரு

ஓவிய விதையொன்றை

விதைத்து விட்டுப்போ

என் விளைநிலத்திலென்று!

----o0o ----

பூமியின் மிதமான சூட்டில்

சரியான பதம் பார்த்து

கொஞ்சம் நீர் தெளித்து

விதைத்து வந்துவிட்டேன் நானும்

வீரியமிக்க விதையை!

----o0o ----

பின்னொருநாளில்

நீ பிதற்றுகிறாய்

நாட்கள் தள்ளிப்போனதாய்

நாவரண்டு குமுறுகிறாய்

விதை விருட்சமாகிறதோ என்று

வீரிட்டு அழுகிறாய்!

----o0o ----

காரணம் கேட்கிறேன்

நீ கண்ணீர் விடும் கதையை ..

தன் கரம் பற்றியவனோடு

நெடுநாட்களாய் ஏர் உளாத

நிலத்தின் ஏக்கத்தை சொல்கிறாய்!

தான் பயிரிடாத நிலத்தில்

செடி வளர்ந்த கதையின்

காரணம் கேட்பானே

என்னென்று சொல்வேனென்று

என்னிடத்தில் விழைகிறாய்!

----o0o ----

உதிர்த்து தொலைக்கிறாய்

அந்த வார்த்தையை

நொடிக்கொருமுறை என்னிடத்தில் !

Widget byLabStrike


2 comments: