Monday, January 2, 2012

701 வது பதிவு - புதியதோர் பூமி படைப்போம்!



மங்கள சூரியன்

வெளிச்சம் வேண்டும்

என்றும் மங்காத நிலவின்

ஒளியும் வேண்டும்

பசுமை மாறா

இயற்கை வேண்டும்

லட்சியம் வெல்லும் வாழ்க்கை

வேண்டும்

உயர்ந்த இலக்கை அடைய

வேண்டும்

சாதியற்ற சமூகம்

வேண்டும்

பகுத்தறிவு மனிதர்

ஆதல் வேண்டும்

பண்பட்ட உலகை சமைத்திட

வேண்டும்

போர் இல்லா புறச்சூழல்

வேண்டும்

பூகம்பம் இல்லாத பூமி

வேண்டும்

தமிழனுக்கு தனிநாடு

தரணியில் வேண்டும்

புதியதோர் உலகு

படைத்திட வேண்டும்!

எல்லாம் வளமும்,நலமும்

வருகைத்தர வேண்டும்!

இந்த ஆண்டு இனிதாய் அமைய வாழ்த்துகள்!!

Widget byLabStrike


2 comments: