Sunday, January 1, 2012

700 வது பதிவு-புத்தாண்டு வாழ்த்துகள்!



ஒவ்வொரு ஆண்டைப் போலவே இந்த புத்தாண்டும்..கிரான்ட் ஓபனிங் இளமை இதோ..இதோ சாங்ல ஆரம்பிச்சது.. கூத்து..கும்மாளம்ன்னு எத்தனையோ பாடல்கள் வந்த போதும் ஏனோ புத்தாண்டையும்,அந்த பாடலையும் இன்னும் பிரிக்க முடிவதில்லை..ஆண்டுகள் மாறிக் கொண்டிருக்கிறதே தவிர பாடல் மாறுவதாயில்லை..இளையராஜாவின் இசை அப்படி ஒரு மோகத்தை,லயிப்பை,நம்மை அறியாத ஒரு புத்துணர்வை தம்முள் புதைத்து வைத்திருக்கிறது!அந்த பாடல் போட்டு,அதுக்கு ஒரு குத்து போட்டு புத்தாண்டை ஓபன் பண்ணினால் தான் சிறந்த புத்தாண்டாக எம் சிந்தை ஏற்றுக்கொள்ளும் நிலையாகிவிட்டது!இதில் இந்த புத்தாண்டு இன்னொரு சிறப்பையும் தன்னகத்தே கொண்டு எனக்கு பிறந்து விட்டது..அது இந்த சிறப்பு மிக்க நாளில் என் 700 வது பதிவெழுதும் வாய்ப்பை தந்திருக்கிறது..

விளையாட்டாக கிறுக்க ஆரம்பித்தது,இன்று என் கிறுக்கல்களை நானே திரும்ப பார்க்கும் போது,நானா இவ்வளவு கிறுக்கி இருக்கிறேன் என்கிற பிரமிப்பு இல்லாமல் இல்லை!அதில் நினைவுச் சிலேடைகளும்,மறக்க இயலாத வாழ்க்கை பதிவுகளும் அடக்கம்..கவிதை,கதை என்கிற பெயரில் எழுதி படிப்பவர்களை கொடுமைப் படுத்தியதும் அதிகம்.ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாது என்னை பாராட்டி,வாழ்த்துக்கூறி,திட்டி வளர்த்தெடுக்க முயல்பவர்கள் ஏனையோர்..ஒவ்வொருவர் பெயராக எழுதி நன்றி சொல்ல வேண்டுமென்று ஆசைதான்,இருந்தாலும் எவர் பெயரும் விடுபட்டு விடக்கூடாது என்கிற நோக்கத்தில் எல்லோருக்கும் பொதுவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..!

இந்த புத்தாண்டு எல்லோருக்கும் நலமாக அமையட்டும்..தமிழினம் படும் இடர் விலகட்டும்..அனைவர் லட்சியமும் வெல்லட்டும்..அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!

Widget byLabStrike


1 comment: