Friday, December 30, 2011

இருவருக்கும் இயற்கை இட்ட கட்டளை!



மனம் மயக்கும் பாடல்

மழைக்கால சாரல்

நடுங்க வைக்கும் குளிர் என

இயற்கை இட்ட கட்டளையில்

என்னை அறியாது

உன் தளிர்மேனி தடவி

அள்ளி அணைக்கிறேன்

என்னில் எரிந்து கொண்டிருக்கும்

தீயை அணைக்க!

நீ முத்தாய்ப்பாய்

சொல்லி முடிக்கிறாய்

எனக்கு இயற்கை இட்ட கட்டளை

தள்ளிப்படு

என்னை தனியாய் விடு

மூன்று நாட்கள் என!

Widget byLabStrike


1 comment: