Friday, December 23, 2011

பெயரிடப்படாத கற்பனைகள்!



நானெழுதும் கவிதைகளுக்கு

உன்னிடமிருந்து வரும்

எதிர்வினை

எப்பொழுதும் இதுதான்

எவளை எண்ணி எழுதினாய் கவி?

பூவையும், பூவையையும்

புகழ்ந்து புகழ்ந்து

புளங்காகிதம் அடைகிறாயே

மலரைவிட உன்  மனமயக்கும்

அந்த மங்கை எவள்?

மதர்ந்த முலைகளும்

பாற்கடல் கடைந்து

பருகிய  சுவையும் பாட்டாகி

படுக்கையறை பதிவுகள்

அதிகம் வருகிறதே

யாருடன் பகிர்ந்ததை

இங்கே பதிகிறாய் ?

என்னைவிடவும் உன்னை

அதிகமாய் ஆக்கிரமித்திருக்கிறாள்

எவளோ

அது உன் எழுத்தில் தெரிகிறது !

அவள் பெயர் சொல்

அடையாளம் இல்லாமல்

ஆக்குகிறேன் அவளை

என்கிறாய் ஆவேசம் கொண்டு!

என்னென்று பெயர் சொல்வேன்

என் பெயரிடப்படாத கற்பனைகளுக்கு!

Widget byLabStrike


2 comments: