Tuesday, December 13, 2011

வறுமை ஒழித்த நாடென்று பெருமை !



புத்தகம் சுமக்க வேண்டிய

வயதில்-உன் கைகள்

சுமையை சுமக்கிறது!

ஆக்சிஜன் இல்லாமல்

கார்பன் சுவாசிக்க-உன் மூக்கு

கற்று வைத்திருக்கிறது!

தம் மேல் சட்டை அழுக்காகாமல்

பிழைப்பவனுக்காக-உன் மேனி

அழுக்காக உழைக்கிறது!

நீ குளிக்கிறாயா இல்லையா

இந்நாடு கவலையுறாது

ஏனெனில் அது களிப்புற்றிருக்கிறது!

வறுமையை மட்டுமே

எடுத்துக்கொண்டு

நீ வாழ பழகி விட்டாய்!

சிறார்க்கு வறுமை ஒழித்து

கல்விக்கொடுத்தோம் என-பெருமைப் பேசி வாழ

இந்நாடு பழகிக்கொண்டது!

Widget byLabStrike


2 comments:

  1. thirudanaai parthu thirundha vittal thirutai ozhika mudiyadhu. peathavanga nanacha matum than kuzhandhai thozhilali iladha naada uruvaaka mudiyum.

    ReplyDelete