Monday, December 12, 2011

ரஜினி ரசிகனாய் நான்!வரும் வழி நெடுக ரஜினியை வாழ்த்திய பேனர்கள்..வசனங்களில் பாராட்டு மழைகள்..அப்போதான் என் நினைவில் வருகிறது இன்று தேதி 12 .12 என்பது..ரஜினி பிறந்தநாள்..

ஒவ்வொரு போஸ்டரையும் பார்த்து,படித்தபடி சிரித்துக்கொண்டே வருகிறேன்..என் சிந்தையில் வந்து நிறைகிறது என் சிறு வயது நினைவுகள்..என் சிறுவயதில் நான் கமல் ரசிகன்.அதற்கும் காரணமிருக்கிறது..என் தந்தை சிவாஜி ரசிகர்..அவர் சிவாஜி படங்களுக்கு மட்டுமே பெரும்பாலும் எங்களை அழைத்து செல்வார்.அதை விட்டால் கமல் படங்களுக்கு,சிவாஜிக்கு அடுத்து அந்த இடத்தை நிரப்பி இருப்பவர் கமல் தான் என்பார்,கமல் நல்லா நடிக்கிறார்,ரஜினி கிறுக்கன் என்பார்.லூசுத்தனமா எதாவது பன்றான் பார் என்பார்.. அப்போதெல்லாம் என் தந்தை வழியே என் வழி..நானும் கமலை நல்ல நடிகனாகவும்,ரஜினியை ஒரு கிறுக்கனாகவும் மட்டுமே என் எண்ணத்தில் ஏற்றி வைத்திருந்தேன்.பள்ளியில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு ரசிகப்பட்டாளம் இருக்கும்..ரஜினிக்கு அதிகமாகவும்,அதற்கு ஏறக்குறைய சரி நிகராக விஜயகாந்துக்கும்,குறைந்த அளவே கமலுக்கு இருக்கும்..விஜயகாந்த் ரசிகர்களை கூட்டணிக்கு அழைத்துக்கொண்டு ரஜினியை கிறுக்கன் என்று ரஜினி ரசிகர்களிடம் கலாய்த்தது உண்டு.

பின்னாளில் எனக்கு விபரம் தெரிய தெரிய ரஜினி படங்களை பார்க்க ஆரம்பித்து நானே ரஜினி ரசிகனாக மாறிப்போயிருந்தேன்.மற்ற நடிகர்கள் பிடிக்காமல் போயிருந்தனர்.ஏதோ ஓர் ஈர்ப்பு ரஜினியிடம் எனக்கு இருந்தது..எப்படியாவது ரஜினி ரசிகர் மன்றம் போர்டில் என் பெயர் வந்து விட வேண்டுமென்று லட்சியம் வைத்திருந்தேன்.

அப்போ கண்ணாடி முன்னின்று அடிக்கடி முடியை கோதுவது உண்டு..எப்போ ரஜினி மாதிரி நமக்கு முடி ஏறும் என எதிர்ப் பார்த்த நாட்கள் உண்டு.சில பசங்க பிளேடால் மண்டைய சுரண்டி ரஜினியாக முயற்சித்ததும் உண்டு .எனக்கும் ஆசை இருக்கும்,ஆனால் என் அப்பா கொடுக்கும் பூசைக்கு யார் பலியாவது என்று விட்டுவிடுவேன்.என் அப்பா திட்டுவார் ரஜினிக்கு சொட்டைத்தலை அவர் கோதுறார்..நல்லா இருக்கத் தலையை ஏண்டா நீங்க சொட்டை ஆக்க பாக்குறீங்கன்னு.நான் அப்போ நினைத்துக்கொள்வது உண்டு வயசான இவருக்கு என்ன தெரியும் தலைவரோட ஸ்டைல் பத்தின்னு!

இப்போ எனக்கு ஒவ்வொரு முடி கொட்டும் போதும் மனசு வலிக்கிறது,பக்குவப்பட்ட மனசு பகுத்தறிந்து,நல்லப் படங்கள் யார் பண்ணினாலும் பார்த்து ரசிக்கிறது,சொந்தப்பணத்தை செலவு செய்து பேனர் வைக்கும்,பால் ஊத்தும் அப்பாவிகளைப் பார்த்தால் கோபம் வருகிறது,தம் எதிர்காலத்தைப் பற்றி கவலைக் கொள்ளாமல் வளர்ந்த நடிகனுக்கு வால் பிடிக்கிறது வருத்தம் தருகிறது!

என் சிறு வயது அறியாமையை எண்ணி என்னுள் நானே சிரித்துக் கொள்கிறேன்..ஆமாம்..இப்போ நான் யார் ரசிகன்???

Widget byLabStrike


7 comments:

 1. Idha padikarapo nayagan padathula varum vasanam than nyabagam varudhu neega rajini rasigara? rasigar ilaya? Neenga ena sola vareenganea puriyala. Simple a vazhuthu potutu poirukalam theva ilama birthday anaiku thitiruka vendam.

  ReplyDelete
 2. i enjoyed this words in this content "சிறுவயதில் நான் கமல் ரசிகன்" ippo yaaroda rasiganaa irundhaalum kavalai illai andha siru vayadhil rasithadhu daan mukkiyam

  ReplyDelete
 3. eppavum kamal rasigai daan..........
  But rajiniyum pidikkum... Ella rajini padamum first day vea paarthuduvean...

  ReplyDelete
 4. //இப்போ நான் யார் ரசிகன்???//உங்க அப்பாவின் ரசிகன்!

  ReplyDelete
 5. nandri..idhu google thedalil kidaithap padam..ungal paaraattu adhai varaindha oviyanukku uritthaagattum!

  ReplyDelete