Friday, December 9, 2011

பென்னி குயிக் பெருமை போற்றுவோம்!



இங்கிலாந்தில் இருந்தது

உனக்கு சொத்து

சொந்த சொத்தை விற்று

முல்லைப்பெரியாறு அணை

அமைத்தாய் செத்து செத்து!

இந்த நாட்டான் இல்லை நீ

ஆனால் இருந்தது தமிழனுக்கு

தண்ணீர் தர வேண்டுமென்று

உன் நெஞ்சில் தீ!

உருவத்தில் மட்டுமல்ல

நீ வெள்ளைக்காரன்

உன் உள்ளம் முழுக்க

வெள்ளை உள்ளக்காரன்!

அதனால்தானோ

நீரில்லா வறண்ட தமிழனுக்கு

வெள்ளாமை பெருக

நீர் வயிற்றில் வார்த்தாய் நீர்!

மூச்சுக்கு முன்னூறு முறை

முல்லைப் பெரியாறு

உன் பெயர் சொல்லி பொழிகிறது

புத்திக்கெட்ட கேரளனுக்கு

உன் பெருமை எங்கே புரிகிறது!

சுரண்டிவாழும் போது

இந்தியன் என்கிறான்

இங்கு சொந்த நலனுக்கு

இனத்தைப் பிரிக்கிறான்!

Widget byLabStrike


No comments:

Post a Comment