Friday, December 2, 2011

போராளி வெற்றிக்கு போராட வேண்டியதில்லை!



இரவு பதினோரு மணியளவில் நண்பனிடம் இருந்து அழைப்பு..படம் பார்த்து,வீட்டுக்கு வந்த வேகத்தில், என்னை அலைபேசியில் அழைத்திருந்தான் ."மச்சி சூப்பர் படம்.. மிஸ் பண்ணாம தியேட்டர்ல பார்த்துடு..பிண்ணி எடுத்துருக்காணுவ..நல்ல காமெடி..ஆக்சன்..எல்லாமே நல்லா வந்துருக்கு..படம் ஆரம்பிச்ச வேகம் தொய்வடையாம கடைசி வரைக்கும் கலைக் கட்டுது..கண்டிப்பா படம் நல்லா கல்லா கட்டும்" என்கிறான்..

நண்பன் அழைத்து முடிக்கவும், படம் பார்த்துவிட்டு என் தம்பி வந்திருந்தான்..படம் நல்லா பண்ணிருக்காங்க..நாடோடி டச் தெரியுது அப்டி இப்டின்னு சில ஆளுங்க சொல்லலாம்..அத ஆடியன்ஸ் பீல் பண்ண மாட்டாங்க..சக்சஸ் பார்முலால பக்கா பண்ணிருக்காங்க ...என்டர்டெயின்மென்ட் ..படம் ஹிட் என்கிறான்.

படமே பார்க்காம நான் இவ்ளோ அவசரமா பதிவு எழுதுறதுக்கு காரணம், நம்ம ஆளுங்க சில பேர் முதல் நாளே படத்த பார்த்துட்டு வந்து,பெரும்பாலோருக்கு பிடிச்ச படமா இருந்தாக்கூட அது குறை இது குறைன்னு அவங்க ஜீனியஸ் தனத்தைக் காட்டி விமர்சனம் எழுதிடுறாங்கோ ..உலக சினிமா பார்த்த மண்டகணத்தைக் காட்டி தமிழ் சினிமாவை குறை கூறி பதிவா போடுறாங்க..அத படிக்கிற நம்ம ஆளுங்களும் குறை சொல்லாட்டி நம்மள மொக்கைனு சொல்லிடுவாங்கோன்னு நெனச்சு குறை கூறிட்டு போறாங்கோ..குறை அனைத்திலும் இருக்கும்..நிறை அதிகமாய் இருக்கும் படங்களில் குறை பார்த்திட வேண்டாம்..படம் பார்த்த நண்பர்கள் சொன்ன வரை போராளி வெற்றிக்கு போராட வேண்டியதில்லை..ஹிட்..!

கதை படிச்சுட்டு போய் படம் பாக்குறத விட ,கதை தெரியாம தியேட்டர் பக்கம் போங்க..அப்போதான் முழுமையா என்ஜாய் பண்ண முடியும்..ரிசர்வ் பண்ணிட்டு போங்க..இல்லேனா தியேட்டர் வாசல்ல போய் நீங்க போராளியாகனும் என்கிறார்கள்..

Widget byLabStrike


2 comments:

  1. padam paartthuttuch sollungappa...ovvoruthrukku ovvoru test irukkum..

    ReplyDelete
  2. Nalla pudhumayana vimarsanam kandipa parpam aana..... theatre la parkaradhu  konjam kashtam than

    ReplyDelete