Saturday, December 24, 2011

காலத்தை வென்ற பெரியோர் !



சமுதாயக் களை களைந்து

காரிருள் அகற்ற வந்த

கருப்பு சட்டையே!

---000---

தீண்டாமை ஒழிக்க

தீரா வெறிகொண்ட விடியலே

வெளிச்சம் தந்த வென்தாடியே!

---000---

திரையில் மட்டுமல்ல

உன் திறந்த மனதால் நிஜத்திலும்

கதாநாயகனான கறுப்புக் கண்ணாடியே!

---000---

நிறத்தில் மட்டுமல்ல

உள்ளத்திலும் வெள்ளை உள்ளம்

எங்கள் வெண் குல்லாவே!

---000---

தந்தை பெரியார் வழிவந்த தம்பியே

தந்தைக்கும்,தம்பிக்கும்

ஒன்றாய் நினைவுநாளின்று!

என்றும் உங்கள் நினைவிருக்கும்

காலத்தை வென்று!


Widget byLabStrike


No comments:

Post a Comment