Saturday, November 19, 2011

உலகத்தை சுற்றவிட்டு!



விட்டு விட்டு பெய்கின்ற

மழையும்

தொட்டு வருடும்

காற்றும்

தூரத்தே தெரியும்

நிலவும்

காதுகளை சில்லிடும்

இசையும்

ஜன்னல் தாண்டும்

சாரலும்

மெலிதாய் சுடும்

வெயிலும்

மலர் பரப்புகிற

மணமும்

சிட்டுக்குருவி செய்கின்ற

காதலும்

உலகத்தை அதன் போக்கில்

சுற்றவிட்டு

என்னை மட்டும் உன்னருகிலேயே

இருத்தி வைக்கின்றன!


Widget byLabStrike


No comments:

Post a Comment