Friday, November 25, 2011

மயக்கம் என்ன!



மழை மேகம்போலே

வெளிச்சத்தை அனைக்கிறாய்

விரைந்து பாய்கிறாய்!

மின்னலென மேனிகாட்டி

என் கண்ணை

பறிக்கிறாய்!

இடியென இறங்கி

தாக்குகிறாய்

முனகலில் இசைபாடுகிறாய்!

கட்டியணைக்கிறாய்

முத்தத்தில்

மும்மாரி பொழிகிறாய்!

மழை பொழிந்து

அடங்க

மடி மீதில் மயங்குகிறாய்!

மழைக்கும் உனக்கும்

ஒத்த மயக்கம்

நனை(க்)கிற போதில்.!

Widget byLabStrike


1 comment:

  1. உங்களுக்கு என்ன மயக்கமோ....

    ReplyDelete