Thursday, November 17, 2011

உயரிய வியர்வை!



உடல்வலியில்

சோம்பல் முறிப்பவனின்

முனகல் இடியாய்!

உழைத்து முடித்து

அவன் பெறுகின்ற

ஆனந்தமிகுதி மின்னலாய்!

வான் உழைத்து,களைத்ததில்

வியர்வை

வெளியேறுகிறது மழையாய்!

வியர்வையின்

நாற்றம் மண்வாசமாய்!

இருந்தும் வானின் வியர்வையில்

உப்பில்லை

அதனினும் உயரியது

எம் மண்ணில்

உழைத்து களைத்தவனின் வியர்வை!

Widget byLabStrike


1 comment: